கண் கலங்க வைக்கும் வெங்காயம்

(ச.சேகர்)

சமையலில் வெங்காயம் வெட்டும் போது அதனை வெட்டுபவருடன், அருகிலுள்ளவர்கள் கூட கண் கலங்குவது வழமை. ஆனால், கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக, கடையில் வெங்காயத்தின் விலையை கேட்டவுடன் கண் கலங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

உலகின் முதல் பெண் பிரதமரும் வேர்விட்ட இனவாதமும்

1959இல் பண்டாரநாயக்கவின் கொலை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு உள்முரண்பாடுகளால் ஊசலாடியது என்பதையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் வெளிக்கொண்டுவந்தது. இனிமேலும் இலங்கையின் பௌத்த பிக்குகள் அனைத்தையும் துறந்த துறவிகள் அல்ல என்ற ஏற்கக் கடினமான உண்மையை பொதுவெளிக்குக் கொண்டு வந்தது.

மன்னார் சென்ற பேருந்து விபத்து; 8 உயிர்கள் பலி

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி  நாயாத்துவழி  பகுதியில்  நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன்  அதி வேகமாக பயணித்த  தனியார் பேருந்து   நாயாத்து வழி  பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.

‘இமாலய துரோகிகள்’ எனத் தெரிவித்து புகைப்படங்கள் மீது முட்டை வீச்சு

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து 2500 ஆவது நாளான திங்கட்கிழமை (25) உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். 

போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புட்டின்

ரஷ்யா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரேன்  மீது போர் தொடுத்தது. அந்த போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷ்யாவால் பணிய வைக்க இயலவில்லை.

“இயேசு நாதரின் பிறந்த தினம் எனது இறப்பு தினமாக அமையட்டும்”

மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாமல் மனமுடைந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் “இயேசு நாதரின் பிறந்த தினம்  எனது  இறப்பு தினமான அமைய வேண்டும்” எனக் கூறி தற்கொலை செய்வதற்காக கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்ட  சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு 11 மணிக்கு இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொள்ளாத ‘இமயமலை பிரகடனம்

(லக்ஸ்மன்)

இலங்கைக்கு உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயுள்ள புலம்பெயர் தேசங்களிலுமென இமயமலைப் பிரகடனம் விமர்சிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாத “இமயமலை பிரகடனம்” என்றே அதன் மீதான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

மீண்டும் முகக்கவசம் அணியுங்கள்

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும் என  ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

’யுக்திய’வில் இதுவரையில் 13,666 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ சுற்றிவளைப்பு திட்டத்தின் போது 13,666 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.