உண்ணாவிரதப்போராட்டங்கள்

(Ruban Mariarajan)

இன்று வடக்கு கிழக்கில் பல உண்ணாவிரதப்போராட்டங்கள் நடைபெறுகின்றன.தமிழரசு கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்று இவ்வாண்டுடன் 60 வது ஆண்டு.சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி வீ.என்.நவரத்தினத்தை இத்தருணத்தில் மறக்கமுடியாது.1961 பெப்ரவரி 20 யாழ்.கச்சேரி முன்பாக அவர் பொலிசாரால் தாக்கப்பட்டது.அன்று அரசாங்க அதிபர் எம்.சிறிகாந்தா,யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் ரிச்சார்ட் ஆர்ன்ட் ஆகியோருடன் பழைய பூங்காவில் இருந்து வந்த ஜீப்பை வாசலில் வழிமறித்து கண்டிவீதியில் சத்தியாக்கிரகம் இருந்த எம்.பிக்களான டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன், அ.அமிர்தலிங்கம், வி.தர்மலிங்கம், க.துரைரத்தினம், வீ.என்.நவரத்தினம், வீ.ஏ.கந்தையா (ஊர்காவற்றுறை) ஆகியோரை பொலிசார் அடித்தும் இழுத்தும், சப்பாத்துக்கால்களால் உழக்கியும், மிதித்தும் கைகளை, கால்களை பிடித்து தூக்கி எறிந்த காட்சி.அவர்களுடன் தமிழரசு தொண்டர்களும் தாக்கப்பட்டனர்.ஆனால் இந்த தமிழரசு எம்.பிக்களே ஜீப்பின் முன்பும்,ரயர்களுக்கு தடையாகவும் துணிந்து இருந்தனர்.அன்று பொலிசார் மிக மோசமாக நடந்துகொண்டனர்.வீதியில் நின்ற பொதுமக்களையும் தாக்கினர்.