பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விலக்கும் வகையில் பேரணி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விலக்கலை வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமபாத்துக்கான பேரணியில் அடுத்த மாதங்களில் இணையுமாறு பேரணியொன்றில் அரசாங்கத்துக்கெதிரான கூட்டணியின் தலைவர்கள், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை பேரணியொன்றில் நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

சிறுபான்மையினரை அடக்கியாளுதல்

(என்.கே. அஷோக்பரன்)

ஆங்கிலத்தில் sadism என்ற சொல்லுண்டு. இந்த வார்த்தை sadisme என்ற பிரென்ஞ் சொல்லில் இருந்து வந்தது. Sadisme என்ற பிரென்ஞ் சொல்லானது, மாக்கி டு சாட் (Marquis de Sade) என்ற பிரென்ஞ் எழுத்தாளரின் பெயரிலிருந்து வந்தது.

கட்டாயத் தகனம் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை, வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிஐஜி இராஜினாமா?

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் முடிவை மாற்றுவதை முடிவுக்கு கொண்டு வந்த உச்ச நீதிமன்றம்

நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும் டெக்ஸாஸின், ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஆதரவளிக்கப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. அந்தவகையில், நாளை மறுதினம் சந்திக்கவுள்ள தேர்தல் பிரதிநிதிகள், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனை உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்கிறது.

கொழும்பை மிரட்டும் கொரோனா

கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14,107 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘முடக்கப்படும் உடுவில் பிரதேச செயலக பிரிவு’

யாழ். மாவட்ட உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுகப் பட்டினமொன்றின் கதை.

(வேதநாயகம் தபேந்திரன்)

”தோணி போனாலும் துறை போகாது ” இது எம் முன்னோரின் அனுபவமொழி .துறைமுகம் ( Harbour ) என்பதையே துறை என்றனர்.
யாழ்குடாநாடு துறைமுகங்கள் பலவற்றைக் கொண்டு கடல் வாணிபத்தில் சிறப்பாக இருந்தது ஒரு காலம். சிறியளவிலான துறைமுகங்கள் பல இருந்தன. இன்னமும் பெருமளவில் மீன்பிடி நோக்குடன் இயங்குகின்றன.

குடிசை பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

(பதிவாளர்-எழுத்தாளர் இரா.முருகவேள் கோவ)


சென்னை தீவுத்திடலில் இருந்து மட்டுமல்ல பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான குடிசை பகுதிகளில் இருந்து மக்கள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.