மனதை உறுத்தும் ஒரு சோகம்

இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள பல்வேறு அருட்கொடைகளில் எதையும் நன்றியுணர்வோடு மனிதன் நினைவு கூர்வது குறைவு என்பதை விட இல்லையென்றே கூறலாம். ஆனால், இயற்கையின் சீற்றம் வந்ததும் மனிதன் அப்போது தான் இறை சிந்தனையோடும் அவனை நினைக்கின்றான்.

கிழக்கில் ஆழிப்பேரலை அஞ்சலி

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக, கிழக்கு மாகாணம், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டது. இதன் அஞ்சலி நிகழ்வுகள், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில், இன்று (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்?

(காரை துர்க்கா)
தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

காவல்துறையாக மாறிய வவுனியா பொலிஸ் நிலையம்

தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப் பலகையில் உள்ள “பொலிஸ்” என்ற சொல், “காவல்துறை” என மாற்றப்பட்டுள்ளது. யுத்தக் காலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில், “காவல்துறை” என்று, தமிழ் மொழிப் பெயர்ப் பலகை அறிமுகப்படுத்தியமைக் குறிப்பிடத்தக்கது.

‘6 வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றன’

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றனவெனத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மகேஷ் சேனாரட்ன, புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியுமெனவும் கூறினார்.

சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி சத்தியாகிரப் போராட்டம்

இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ராஜ்கட் பகுதியில் சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்கட் பகுதியில் ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாள்வெட்டு ரௌடிகளை குறிவைத்து அதிரடி வேட்டை முப்படையினரும் இணைந்து யாழில் நடவடிக்கை!

கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இயக்கும் ரௌடிக்குழுக்களை இலக்கு வைத்து அதிரடி வேட்டையை இன்று பொலிசார், மற்றும் முப்படையினரும் கூட்டாக ஆரம்பித்துள்ளனர்.

‘கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாறும்’

தீவகப் பகுதியில், கடல் உணவு உற்பத்தி சார் தொழிற்றுறைகளைக் கட்டியெழுப்பி, அதனூடாக கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றியமைக்கப்படுமென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில், நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

’அருளர்’ நினைவேந்தல் நிகழ்வு

ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராகவும், தமிழர் அரசியல் சார்பான ஆய்வு நூல்கள் பலவற்றின் ஆசிரியராகவும் விளங்கி அண்மையில் காலமான ‘அருளர்’ எனப் பரவலாக அறியப்படும் அருட்பிரகாசத்தின் நினைவேந்தல் நிகழ்வு, யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நல்லூரிலுள்ள யூரோவில் மண்டபத்தில், நேற்று (21) நடைபெற்றது.