சகோதர மொழி அறிவின்மை வெட்கத்துகுரியது

நாட்டிலுள்ள சகோதர மொழிகளை அறியாதிருப்பது வெட்கப்பட வேண்டிய காரணம் எனத் தெரிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் (புதிய)குடியுரிமைச் சட்டம் இலங்கை தமிழருக்கு நன்மைகளை ஏற்படுத்துமா…?

(சாகரன்)

மோடி அரசின் மத்திய உள்துறை அமைச்சர் அமிர்த்ஷா இனால் கொண்டுவரப்பட்ட இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாடு தழுவிய ரீதியில் எதிர்பலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. குடியுரிமை சட்டத்தில் பொதுமையாக இஸ்லாமியரை தள்ளி வைத்தல், இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்குவதை தவிர்த்தல, மியான்மார் ரோங்கிய முஸ்லீம்களை அகதிகளாகவோ அல்லது குடியுரிமை வழங்கலுக்குள் தவிர்தல் என்ற போக்குகள் உள்ளாகியிருப்பது எதிர்பலைகளுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

“நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது” – “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்”

கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு.

அமைச்சர் டக்ளஸ் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை பதவி விலக வேண்டும் என தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சும(த)ந்திரன் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சா இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என கூறிவிட்டாராம்.

சாதிய வெறி

(Pushparani Sithampari)

இலங்கைத்தமிழர்களிடையே சாதிவெறி ஒழியவில்லை என்பதுபற்றி நானே நிறைய எழுதியிருக்கின்றேன். இன்னும் எழுதுவேன். ஆனால் தமிழ்நாட்டைவிட அதிகம் என்பதை மறுக்கின்றேன். தமிழ்நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருப்பதுபோல சாதிவெறியில் படுகொலைகள் செய்வது இப்போது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.

இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

தாது வருடப் பஞ்சம்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது –

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது –

மணல் கொள்ளையர்களுக்கு உதவ மறுத்த ஒப்பந்தக்காரர்களுக்கு அச்சுறுத்தல்

தமக்கு உதவி செய்ய மறுத்த பாலம் புனரமைக்கும் ஒப்பந்தக்காரர்களின் களஞ்சிய அறைகள், மணல் கொள்ளையர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவமொன்று, முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பிரதான வீதியில், நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.