’ஒன்றிணைந்த எதிரணியில் ஐந்து வேட்பாளர்கள்’

ஒன்றிணைந்த எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐவருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனை கூறிய அவர், முன்மொழியப்பட்ட ஐவரில் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்முனையும் கன்னியாவும்

(என்.கே. அஷோக்பரன்)

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் என்பது, அப்பிரதேச தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த விடயம் தொடர்பில், அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களிடையே அபிப்பிராய பேதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அண்மையில் இந்த விடயம் சூடுபிடித்தது. இது, இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையோ, இன்று நேற்று உருவான பிரச்சினையோ அல்ல. 1989ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக அப்பிரதேச தமிழ் மக்களாலும் தலைமைகளாலும் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையாகும்.

மறைந்த கடாபியின் மறுபக்கம்!

  1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
  2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
  3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
  4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
  5. லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.
  6. எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.
  7. லிபியர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.
  8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.
  9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.
  10. லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.
  11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.
  12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.
  13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
  14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.
  15. 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.
  16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.

‘சரவணபவன் அண்ணாச்சி’ துயரத்தில் முடிந்ததோர் பெருந்திணை காதல்!

(கார்த்திகா வாசுதேவன்)

சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்… இந்தப் பெயரை நாம் இதுவரையிலும் ஜீவஜோதி மீதான பொருந்தாக் காதலுக்கு மட்டுமே உதாரணமாகப் பல ஆண்டுகளாக நினைவு கூர்ந்து வந்திருக்கிறோம். இந்தப் பெயருக்குப் பின்னால் சரவண பவன் எனும் சங்கிலித்தொடர் உணவகத்தின் வெற்றிக்கதையும் அடங்கியிருக்கிறது. அது ஏன் நம் கருத்தை விட்டு மறைந்ததென்றால் காரணம் அண்ணாச்சியின் பெருந்திணைக் காதல். தன்னை விட வயதில் மிக இளையவரான ஜீவ ஜோதியை அண்ணாச்சி மணக்க விரும்பியது ஏன்? மூடநம்பிக்கை என்கிறது இவ்வழக்கின் பழைய வரலாறு.

“The Next Generation”

(Katsura Bourassa)

என்னைப் போன்றவர்கள் புலம் பெயர்ந்த காலத்தில் அந்தந்த நாடுகளிலிருந்த மொழிகளை இலகுவில் கற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் எமது மனங்கள் இருக்கவில்லை. அல்லது எமது மனங்களால் அணைத்துக் கொள்ளக் கூடியதாக அந்த மொழிகள் இருக்கவில்லை. இதில் அதிகமான விதிவிலக்குகள் இருக்கின்றன. சில நாடுகளில் அந்த நாட்டின் மொழி கட்டாயம் கற்கவேண்டிய ஆரம்பகாலங்கள் இருந்ததாக அறிகிறேன்.அவை வேறுவிதமானவை. அப்படியிருந்த பொழுதுகளிலும் ஈழ அரசியற் சூழல்களை முன்நிறுத்தி பலரால் சமூக நீதிக்கான செயற்பாடுகள் பல்வேறு விதத்தில் நடைபெற்றபடிதான் இருந்தன. இதில் சமூக நீதியை முன்நிறுத்துவதற்குரிய இலக்கியத்திற்கான இடம் அனைத்துத் தளத்திலும் முக்கியமானதாக இருந்தது. இந்தச் சூழல் ஓடிக்கடந்து ஒரு 30 வருடம்.

குட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே!

37 ஆண்டுகளின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.

“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”. குட்டிமணி

பொலிஸார் சூடு: மானிப்பாயில் ஒருவர் பலி

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது. 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 9

(யஹியா வாஸித்)
யாரிந்த முகம்மது நபி- இவர்ர தொழில் என்ன ?

எண்ட ஆண்டவன் ஒரு கில்லாடிதான்.
இந்த ஒலகத்துல, எங்க,எந்த மூலையில
சொல்லுக் கேட்காத, ஒண்டுக்கும் அடங்காத
மனுசனுகள், மனுஷ மிருகங்கள் இருக்கானு
களோ, அங்க நீ போகணும், நீ அங்க போய்
அவனுகள திருத்தோணும்.This is your
duity.Yes, you must go there.

ரணிலின் தமிழ் மீதான காதல்……தமிழ் தரப்பின் கொண்டாட்டங்களும்

(Saakaran)
இலங்கையில் இதுவரை காலமும் ஏற்பட்டுவரும் இனப் பிரச்சனைக்கும் கலவரங்களுக்கும் பெரிதும் காரணமாக அமைந்தவர்கள் ஐதே கட்சியினர். அதிலும் ஜேஆர் இன் ஆட்சியும் இவருடன் இணைந்து இவரின் வழி வந்த ரணிலின் செயற்பாடுகளும் இதில் மிகவும் காத்திரமான பங்களிப்பை செய்திருக்கின்றன. செய்து கொண்டிருக்கின்றன. டி.எஸ் சேனநாயக்காவினால் உருவாக்கி வைக்கப்பட்ட அம்பாறையில் இங்கினியாகலை குடியேற்றமும் வடக்கையும் கிழக்கையும் பிரித்தாளும் திருகோணமலை சேருவாவலை உருவாக்கமும், டொலர் கென்ர் பாம் குடியேற்றங்களும் இதன் விரிவாக்கங்களுமே இன்றுவரை தொடர்கின்றன.

கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா?

(இலட்சுமணன்)

திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதியினரின் பல்வேறு கெடுபிடிகள், சூழ்ச்சிகள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியில், இனமத வேறுபாடுகள் கடந்து, தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டிருந்தமை புறமொதுக்கி விடக்கூடிய செய்தி அல்ல!