அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 9

எந்தவித கல்வியறிவும் இல்லாத, ஒரு சுத்த
சூனியத்தை, அறிவிலிகள் வாழ்ந்த மக்காஹ்
நகருக்கு அனுப்பி, ஏய் முஹம்மதே, நீ அவர்
களை மனிதனாக்கோணும்.this is my
order.கட்டளை.

பிறந்த பெண்குழந்தைகளை சுடு மணலில்
உயிரோடு புதைப்பது,பல தார மணம், மது,
கொலை,வழிப்பறிக் கொள்ளை என வாழ்
வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு
சமூகத்தை திருத்தோணும்.

மனுஷன் நிண்டு,நிமிர்ந்து, திருத்தினார்.
ரொம்ப சிரமங்களின் மத்தியில் திருத்
தினார்.மெள்ள,மெது மெதுவாக திருத்தினார்.
கத்தி,கோடாலி,கம்பு,தடி ஆவேசப்பேச்சு
எதுவுமின்றி திருத்தினார்.

எந்த கெடுபுடியும் இல்ல. அடியுழுந்தது,
விரட்டி,விரட்டி கல்லடித்தார்கள்,மேஜிக்
மேன், கண்கட்டி வித்தைக்காரன் என்று
ஊர விட்டே தொரத்தினார்கள்.

அல்லாஹ் எண்டு ஒருத்தன் இருக்கான்,
அவன் கண்ணுக்கு தெரியாதவன், எனக்கு
அறிவித்தல்கள் தந்து கொண்டிருக்கின்றான்.
அவன் சொல்றதத்தான் நான் ஒங்களுக்கு
சொல்லுறன் எண்டெல்லாம், இவர் சொன்ன
கதைகளை கேட்க எந்த மக்காஹ் வாசியும்
தயாராயில்லை.

ராவோட ராவா ஆள விரட்டினார்கள்,
முஹம்மது நபி அவரை நம்பிய சிலருடன்
மதீனாவுக்கு தப்பி ஓடினார்.

அந்தக்காலத்துல ஆம்புளைகளை விட பொம்
புளைகள்ற வீதாசாரம் மிக அதிகமாக இருந்தது.
அதனால் விபச்சாரம் கொடி கட்டிப் பறந்தது.
அவளும் மனிசிதானே,அவளுக்கும் காமம்
இருக்கத்தானே செய்யும், ஆம். பாவம்.

பண முள்ளவன் வசதி உள்ளவன் ரெண்டு
பொண்டாட்டிய, மூண்டு பொண்டாட்டிய வச்சி
சோறு குடுக்கிற தைரியமிருந்தா வச்சிக்கோ
எண்டார். ஆம் விபச்சாரம் அடியோடு
குறைந்தது.

பணமுள்ளவன் வச்சிக்கிட்டான். கருணாநிதி
சின்ன வீடு வச்சிக்கிட்டா அது திறமை, எம்ஜீஆர்
பல வீடுகள் வச்சிருந்தா அது பசுமை, நம்ம எம்பிமார்,
மந்திரிமார்,கொஞ்சம் சொத்துபத்து உள்ளவன்,
மலையகங்களில் மூணரை கோடி, நாலு கோடி
களுக்கு வீடுகள் வாங்கி பெரிய வீடுகளில், சின்ன
வீடுகளை வச்சிருந்தா அது கெத்து, பாவம் இந்த
சின்ன வீடுகளின் குழந்தைகள்.

நோ சின்னவீடு, நீ பெரிய வீடாகவே
வச்சிக்கோ, உன்னால் முடிந்தால்
வைத்துக்கொள். களவுல அங்கொண்டும்,
இங்கொண்டும் வச்சிக்கிட்டு, அவள்ற
புள்ளைக்கும் வாப்பா இல்லாம, இவள்ற
புள்ளைக்கும் வாப்பா இல்லாம, கள்ள
பேர்த் செர்ட்டிபிகட் செய்துக்கிட்டு, வேருத்து
விறுவிறுத்து ஒளிச்சி திரியிரத்த விட,
this is my first wife, she is
second one.Thats all.தைரியமாக
சொல்லு என்றார்.

பக்கா ஜெனுவினிட்டி, ஆண் பிள்ளைகள்
பொறந்த உடன் சுன்னத்து வை. ஆண் குறியை
இழுத்துவச்சு ஒரு அங்குல அளவுக்கு
வெட்டி உடு. அதை வெட்டவும் கத்தி பாவிக்கச்
சொன்னார்.

அதை வெட்டாம விட்டா அவசரத்துக்கு
நீ சிறுநீர் கழித்துவிட்டு ஓடும் போதும்,
சிறுநீர் கழித்து விட்டு கழுவாம உடும்
போதும், அந்த கழிவுநீர் கிருமிகள் ஆண்
குறியின் நுனியில் தங்கி நோயை ஏற்
படுத்தும்.அது அழுகிப்போகும்.

இது உடலுறவுக்கு பாரிய தொந்தரவைத்
தரும். அப்புறம் சோனவன் மலட்டுமெசினை
எங்க பெண்களுக்கு பொருத்திட்டான்
எண்ட எந்த தொந்தரவும் வராது. சோனவனு
களோட அந்நிய பெண்கள் வெளியில பாயிர
பிரச்சனையும் இருக்காது, சிறிலங்காவின்
ஏனைய சமூகத்தவரின் சனத்தொகை பரம்
பலும் கூடும்.சோனவன் ஸீரோ பெர்செண்டேஜ்
ஆயிடுவான்.

காத்தான்குடி வரவேற்கின்றது, அதாஉல்லாஹ்
மண்டபம், அமீரலி விளையாட்டரங்கு, ஹிஸ்
புல்லாஹ் ஹோள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
ஊரா ஊட்டு கோழியறுத்து வாப்பா பேருல கத்தம்,
விருந்து கொடுக்கிற சோனவனே இருக்க மாட்டான்.

இவர்கள் எல்லாம் மவுத்தாகி ஆறுக்கு,மூணரடி
குழியில பொதைக்கும்போது,இதுகளையும் கட்டி
அணைத்து எடுத்து செல்ல அனுமதிப்பேன் என,
எந்த இடத்திலும் எண்ட அல்லாஹ் கூறவில்லை.
இஸ்லாத்தில் எந்த இடத்திலும் போது சொத்
துக்களில், உங்கள் தனிப்பட்ட பெயர்களைப்
போட்டு தம்பட்டம் அடியுங்கோ என்று சொல்லவே
இல்லை.

இவனுகள்ற சனத்தொகை கூடினதாலதானே
ஊரெல்லாம் பெயர் பலகைகளும் , தெருவுக்கு
நாலு பள்ளிவாசல்களும்.

இது மாதிரி ஆயிரம் வழிகளை அந்த படிக்காத
மேதை சொன்னார். மேலும் ரெண்டு கைகளை
யும் நன்றாக உயர்த்தி கமுக்கட்டுக்குள் உள்ள
மொத்த மயிரையும் வாரா வாரம் வழிச்சு உடு.
அந்த கமுக்கட்டு வாசம் / நாத்தம் பறந்து போகும்.
அப்புறம் மனைவியை அருகில் அழை, அவள் நூறு
தரம் உன்னை நெருங்குவாள், அழைப்பாள்,உறங்
குவாள்,உணருவாள், புள்ளகள பெத்து தள்ளுவாள்.

ஏழைகளுக்கு இரங்கு, வட்டிக்கு பணம் வாங்காதே,
கொள்ளை லாபம் உழைக்காதே , உழைப்பாளியின்
ஊதியத்தை அவனதுவியர்வை வற்ற முதலே
கொடுத்து முடி.

ஆசைப் படாதே, ஆசைப்படாதே,ஆசைப்படாதே,
இந்த உலகில் ஓரு தூசும் உனக்கு சொந்தமில்ல.
என்றெல்லாம் அந்த முஹம்மது நபி சொன்னது
அந்த அறிவிலிகளுக்கு புடித்திருந்தது. பக்கென்று
பற்றிக்கொண்டார்கள்.

ஒன்று பத்தாகி,பத்து நூறாகி, நூறு முன்னூற்றி பத்துக்
கோடியான கதைய பொறவு பாப்பம். இப்ப நாங்க
இந்த நாட்டுக்கு வந்த மிச்ச கதைய பாப்பம்.

இந்த முகம்மது நபி பற்றி, வழிப்போக்கர்களும்,
வியாபாரிகளும் நாடுநாடாக கதை சொல்ல, அவரை
பார்க்கவும்,தரிசிக்கவும், சண்டை புடிக்கவும் என
வந்த பலர் இவரது மார்க்கத்தை, way of lifeஐ
பற்றி புடித்துக்கொண்டனர். அவ்வாறு சூடான்,
சோமாலியா, எஜிப்த், துருக்கிஇலிருந்து வந்தவர்கள்
எல்லாம் இவரை இறைவனின் தூதர் என நம்பினர்.
இவரது மார்க்கத்தை பின்பற்றினர்.

இவர்கள் போகுமிடமெல்லாம் உண்மை,நேர்மை
என்ற ஒரே பிடிவாத்தத்துடன் வாழ்ந்து வந்தனர்.
அவ்வாறு நாடுநாடாக, வியாபார நோக்கமாக,
குறிப்பாக வாசனைத்திரவியத்துக்காக வந்தவர்கள்
பலர் சிறிலங்காவில் காலி தங்கல்ல, ஹம்மான்தொட்டே
பகுதிகளில்தான் இறங்கினர்.

அப்பகுதியில் உள்ள சிங்கள மக்களின், அன்பும்,
அரவணைப்பும், விருந்தோம்பலும் அவர்களை கவர,
பலர் அங்கேயே குடியேறினர்.சிங்களப் பெண்களை
திருமணமும் செய்தனர்.

இப்போது சிறிலங்காவில் இருந்து மாணிக்ககல்,
வியாபாரத்துக்காகவும், ஏனைய வியாபாரத்து
க்காகவும் தன்சானியா,மடகாஸ்கார், நைஜீரியா,
போன்ற நாடுகளுக்கு சென்ற பல சோனக
வியாபாரிகள், கடந்த பத்துவருடங்களாக
அங்கேயே வசிக்கத்தொடங்கி விட்டனர். இது
உலக நியதி.

வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களின்
பெயர் பதிவுகளையும், வீட்டு உறுதிகளையும்
தோண்டி துருவிக்கிட்டுபோனால் அது ஒரு
முதியான்சலாவிலோ, உடகெதரவிலோதான்
போய் முடிகின்றது.

சோனவன் யாரும் இங்கு வானத்தில்
இருந்து வந்து குதிக்கவில்லை. வேடுவர் தவிர
மற்ற எல்லா மத, மார்க்கத்தவர்களும் எவ்வாறு
இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்தார்களோ,
அவ்வாறே முஸ்லிம்களும் இந்த நாட்டுக்கு
வந்து சேர்ந்தார்கள்.

ஹம்மன்தொட்டை, தங்கல்லவில் வந்து இறங்கிய
வர்களின் வாரிசுகள்தான் ஸ்ரீலங்கா முழுக்க
வலம் வந்துள்ளார்கள்.

ஹம்மான்தொட்டை – கதிர்காமம் -கதிர்காமம்
ஊடாக பிபில கொட்டபோவ கிராமத்தை
அடைந்தவர்கள்தான் அதிகம். இந்த
கொட்டபோவேயில் இருந்துதான் நிறையப்பேர்
அம்பாறை – கொண்டைகட்டுவான் ( கொண்டை
வெட்டுவான் ) ஊடாக சம்மாந்துறை -கருங்
கொடித்தீவு (அக்கரைப்பற்று ), கரைவாகுப்பற்று –
கல்முனைஇல் குடியேறியுள்ளனர்.

காரியப்பர் பெமிலி, கொட்டபோவையில்
இருந்துவந்த கொஞ்சம் சூடான்,கொஞ்சம்
இந்தோனேசியா கலந்த இவர்களுக்கும்,
ஜாதி வெறியால் நசுக்கப்பட்டு இந்தியாவில்
இருந்து வந்த தமிழர்களுக்கும் எப்போதுமே
ஒரு ஊடலும்,கூடலும் நடந்து கொண்டே
இருக்கும். அதுதான் இன்றும் தொடருகின்றது.

சாய்ந்தமருது, கரைவாகுப்பற்று,
கல்முனைக்குடியில் வாழும் அனைவருமே
சோனவன் but இவர்களுக்குள்ளும், தினமும்
ஒரு முறுகல் நடந்து கொண்டே இருக்கும்.

அந்த முறுகல் இந்தியாவில் இருந்து கள்ளதோணி
ஏறி வரும்போது இடையில் சாதி மாறி, மதம்மாறி
யதால் ஏற்பட்ட முறுகல்.

கரைவாகுப்பற்று என்கிற,கல்முனை என்கின்ற
பகுதியில் உள்ள இந்த முஸ்லிம் ஆண், பெண்
களையும் அவர்களது தொழில், கிராம அமைப்பு,
களையும் தான்சானியாவிலும், சூடானிலும்
நேரடியாக காணலாம்.அதே கெத்து, அதே
முறுக்கு, அதே புத்திசாலித்தனம்.

பிபில கொட்டபோவையில் இருந்தவர்கள்,
குடியேறியவர்கள் அனைவருமே முஹம்மது
நபியின் வழிகாட்டலில் வாழ்ந்த,வளர்ந்த
சஹாபாக்களின் நேரடி வாரிசுகள்,
வழித்தோன்றல்கள், எஜிப்து,சூடான்,
தான்சானியா,துருக்கி நாட்டவர்கள்.

இவர்கள் அனைவரும் வாசனைத்திரவிய
வியாபாரத்துக்காக வந்தவர்கள். இங்குள்ள
சிங்கள,தமிழ் பெண்களைதிருமணம் செய்து
சிறிலங்கவிலேயே வாழ்ந்தனர்.

இவர்கள் குட்டி,குட்டி ஆறுகள்,குளங்கள்,
பாரிய காடுகள்,மரச்சோலைகள் உள்ள
இடங்களில் குடியேறியதுடன் அப்பகு
திகளில் உள்ள மக்களுடன் மிக அன்பாகவும்,
நீண்ட நட்புடனும் வாழ்ந்துள்ளனர்.

இவர்களது வாழ்க்கைமுறை, மக்களுடன் பழகும்
விதங்களைப் பார்த்து சிங்கள மன்னர்களும்,
பரம்பரை பணக்காரர்களும்,காணிகளையும்,
நிலங்களையும் வழங்கி அவர்களை அங்கேயே
குடியேற விட்டனர்.

ஆம், ஹம்மான்தொட்டே, கதிர்காமம்,
அக்கரைப்பற்று, சம்மாந்துறை, ஒலுவில்,
கல்முனை (கடத்கரைப்பள்ளி ),காத்தான்குடி
தொடக்கம் கண்டி,கம்போல பேருவளை,
பலாங்கொட(ஜெய்லானி ) ஊடாக மன்னார்,
ஜாவகர்சேரி (சாவகச்சேரி ,வெள்ளைமணல்
என ஸ்ரீலங்கா முழுக்க வாழ்ந்துள்ளனர்

இவ்வாறு வாழ்ந்தவர்கள் மரணித்தபின்,
அப்போது இருந்தவர்கள் அவர்கள் வாழ்ந்த
இடங்களில் பள்ளிவாசல்களையும்,அடக்கஸ்தல
ங்களையும் அமைத்தனர்.

பின்னாளில் அமெரிக்க நாகரீகம், மேற்கத்தேய
நாகரீகம்,இஸ்ரேல் நாகரீகம்,அரபு நாகரீகம்,
எகிப்து யுனிவெர்சிட்டி நாகரீகம், மதீனா
யுனிவெர்சிட்டி நாகரீகம், இந்திய அரபு மதரசா
நாகரீகம் எல்லாம் சிறிலங்காவுக்குள் புகுந்து,
இப்போது தேரேர்கள் பலரது கையில்
சிறிலங்காவில் உள்ள சோனக நாகரீகம்
தொய்யோ தொய்யென தொய்கிறது.

ஆனால் என்ன ஒரு வெட்கக்கேடு 2000 / 2500
ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்
பியனையும், சாக்ரட்டீசைய்யும், கான்
பூசையும், திருவள்ளுவனையும், புத்தனையும்,

நாங்கள் படித்து புசித்த அளவுக்கு இல்லா
விட்டாலும், ஒரு சிறு துளியாவது என் அப்பன்
முஹம்மது நபியை பற்றியும், அவனது
மார்க்கத்தையும் பற்றி படிக்காமல், எவ்வா
றய்யா மொத்த சோனவனும் டம்மிப்பீசு
என்கிறீர்கள்.

இதற்கல்லாம் முழு முதல் காரணம்
எமது அரசியல்வாதிகள்தான். அவர்களது
சொந்த வாக்கு வங்கிகளுக்காக எல்லாத்
துக்கும் ஆமா போட்டதன் விளைவுதான்
இது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகத்துக்காக வாழாமல்,
தமது சொந்த சுக,சங்கல்பங்களுக்காக வாழும்
இவர்களை எப்படி,எந்த சோப்பு போட்டு கழுவி
துடைப்பது ? Think Big.