பனை

(தரன் ஸ்ரீ)

எங்களுக்கு கிடைத்த சிறந்த வளம் பனை.பனையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இருந்து கிடைக்கும் நன்மை பெருமதி அருமை பற்றி மருத்துவர் ஒருவரின் பதிவில் இருந்து இந்த பதிவை பதிவு செய்கிறேன்…#பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.

யாழ்ப்பாண குளங்கள்

(Arun Ambalavanar)

CLUBHOUSE இன் முன்னோடி குளங்களே !

குளங்கள் மனோரதியமானவைகள். ரம்மியமானவைகள். மனித நாகரீகங்களின் ஊற்றுவாய்கள். குண்டிகழுவ(ஒரு கரை) குளிக்க (எதிர்க்கரை) என்றிருந்த குளம் வேறு. குடிக்கும் தண்ணீரள்ளும் குளம் அல்லது துரவு என்றிருந்தது வேறு.

மலரும் நினைவுகள்…

(ரா.அருண் கஸ்தூரி )


ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இந்தக் கிளுவை வேலி இல்லாத வீடுகளோ, வயல்,தோப்புகளோ இல்லாத இடம் இல்லை எனச் சொல்லலாம்.

அறியப்படாத யாழ்ப்பாணம்

//ஒரு பெயர் தெரியாத யாழ்ப்பாண முதியவரின் நாட்குறிப்பில் 1841 ஆண்டிலிருந்து 1933 ஆண்டு வரை நடந்த முக்கியமான சம்பவங்களை பதிவு செய்து இருந்தார்
பார்க்க கீழே//

இந்தியா

(TSounthar Sounthar)

சிந்து [ Sindhu ] – இந்து [ Indhu ] – இண்டிகா[ Indika ]- இந்துஸ்தான் [ Industan ] – இண்டியா[ India ]- இந்தியா:
இன்று நாம் அறிகின்ற இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் தமது சௌகரியங்களுக்காக செயற்கையாக ஒன்றுபடுத்திய ஒரு நாடாகும்.
இனம், மொழி, மத நம்பிக்கைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பல்வகைப் பிரிவுகளைக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஒரு தொகுப்பாக அவர்கள் உருவாக்கினார்கள்.

மட்டக்களப்பு நண்டு

மட்டக்களப்பு நண்டு பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லாததால், சின்ன அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். யாழ் பல்கலைக்கழகம் போன புதிதில், சாப்பாட்டு நேரத்தில் வந்த ஒரு சீனியர், ராகிங் என்ற பெயரில் ஒரு கவிதை சொல்லு என்றார். அப்போது நண்டுக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

பூக்களுக்கும் பூக்களுக்கும் கல்யாணமாம் கல்யாணம்..!

(-ஆசி கந்தராஜா-)

சிட்னியில் இப்போ வசந்த காலம்.

இன்று 2 October 2023, ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரச விடுமுறை. உலகமெங்கும் மே மாதம் 1ம் திகதி தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும்போது, ஏன் நியூ சவுத் வேல்ஸ்ஸில் இன்று விடுமுறை எனக் கேட்க்காதீர்கள். இங்கு இப்படித்தான்.

வழுக்கி(கை)ஆறு- வரமும் வளமும்- பகுதி 1

இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்க்குடாநாட்டிலே மூன்று ஆறுகள் தொடர்பாக அறிந்திருப்போம்.
அவை

 1. வழுக்கி(கை) ஆறு
 2. தொண்டைமான் ஆறு
 3. உப்பு ஆறு
  இதில் குறிப்பாக வழுக்கி ஆற்றின் வரலாற்றையும் யாழ்க்குடாநாட்டில் அதிலும் வலிகாமம் பகுதியின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பாதுகாப்பதில் வழுக்கியாற்றின் வகிபாகம் தொடர்பாக முடிந்த அளவுக்கு இந்த கட்டுரைத்தொடர் மூலம் பேச முயல்கிறேன். இன்னும் சில தலைமுறைகளின் பின் வலிகாமம் பிரதேசத்தில் நீர்வளமும் நிலவளமும் தொடர்ந்து இருக்க வேண்டும் எனில் வழுக்கி ஆற்றின் வகிபாகத்தை சரியாக புரிந்து கொண்டு அதை பாதுகாத்து அரவணைப்பது மிக மிக முக்கியம்.
  ஏனெனில் அண்மைய வருடங்களின் அவதானிப்புகளில் வரலாற்று ரீதியாக இருந்த வழுக்கியாற்றின் முக்கியத்துவம் மங்கி மருகி, வெறுமனே மழைகாலத்தில் வெள்ளத்தை வெளியேற்றும் ஒரு “Drainage system” அதாவது ஒரு “வடிகால்” என்ற அளவிலேயே வழுக்கி ஆறு பார்க்கப்படுகிறது.
  அத்துடன் வழுக்கி ஆற்றுக்கு நீரைக்கொண்டுவந்த பல பாதைகள் அதாவது வெள்ள வாய்க்கால்கள் இன்று பல பிரதான வீதிகளாகி விட்டன. பாதி வழுக்கி ஆறு காணாமலே போய்விட்டது.
  இன்று பலர் நினைத்துக்கொண்டிருப்பது வழுக்கி ஆறு அம்பனைச் சந்தியில் ஆரம்பிக்கின்றது என்றே. வழுக்கி ஆற்றின் நீரேந்து பகுதிகளாக அல்லது வழுக்கி ஆற்றினால் பயன்பெற்றுவருவதாக கருதப்படும் பிரதேசத்தை குறிக்கும் வரைபடம் ஒன்றை பதிவேற்றி உள்ளேன். வலிகாமத்தின் மிகப்பெரிய ஒரு பரப்பளவை வழுக்கி ஆற்றுப் படுக்கை தன் வட்டத்துக்குள் கொண்டு வருகிறது. ஏராளமான வாய்க்கால்கள், சிறு குளங்கள் மூலமாக தண்ணீர் வழுக்கி ஆற்றில் இருந்திருக்கிறது.
  யாழ்க்குடாநாட்டின் குறிப்பாக வலிகாமத்தின் உயரமான பகுதிகளை குறிக்கும் contour map ஒன்றையும் பதிவேற்றி உள்ளேன். அதை கூர்ந்து அவதானித்தால் தெல்லிப்பழையின் வடமேற்காக மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிழான் பகுதிகள் வலிகாமத்தின் மிக உயரமான பகுதிகளாக இருந்திருக்கின்றன. அந்தப்பகுதிகளில் இருந்து தாழ்வான ஏழாலை பகுதிகளை நோக்கி ஓடிய வெள்ளத்தை கட்டுப்படுத்த கட்டுவன் பகுதியில் ஒரு அணையை கட்டியிருக்கிறார்கள். அந்த அணை இன்று ஒரு பிரதான வீதியாகி தெல்லிப்பழழை-வறுத்தலைவிழான்- கட்டுவன் வீதியாகியிருக்கின்றது. “கட்டுவன்” என்ற பெயரே “கட்டு” “வான் கட்டு” என்பதில் இருந்து மருவி வந்ததாக கூறப்படுகிறது. குறித்த அணைக்கட்டு இந்த வீதியின் இன்றைய கிறிஸ்தவ சுடுகாடு இருக்கும் பகுதிக்கு அண்மித்ததாக இருந்ததாக கருதப்படுகிறது.
  அவ்வறு வழி மறிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி மயிலிட்டி பக்கமாகவும் இன்னொரு பகுதி தெல்லிப்பழை பக்கமாகவும் ஓடியிருக்கின்றது. அவ்வாறு ஓடிய நீர் ஒன்று கரண்டை குளம், முல்லைக்குளம்/முள்ளான்குளம்( இந்த குளத்தை இன்னும் அடையாளப்படுத்த முடியவில்லை) ஊடக ஆனைக்குட்டி மதவடியில் KKS வீதியை கடக்க, வறுத்தலையின் ஒரு பகுதி மற்றும் வீமன்காமம் ஊடாக வந்த நீரும் தெல்லிப்பழையின் ஒரு பகுதிநீருமாக தெல்லிப்பழை அம்பனை வீதி அருகில் உள்ள வாய்க்கால் வழியாக அம்பனை வயலை அடைந்திருக்கிறது. அந்தப்பகுதியில் தற்போது 2 குளங்கள் காணப்பட்டாலும் மேலும் சில இருந்திருக்ககூடும். அதன் பின்னர் நீண்டு ஓடி பினாக்கை குளத்தை அடைந்த பிறகு இன்று நாம் எல்லோரும் பார்க்கும் நீர் நிறைந்த ஆறு கிட்டத்தட்ட ஆவணி மாதம் வரை நீரோடு காணப்படுகிறது.
  இந்த வழுக்கி யாற்று படுக்கை ஒவ்வொரு மழையின் போதும் நிலத்தடிக்கு நீரை அனுப்புவதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. அதை பேசுவதானால் எங்கள் யாழ் குடாநாட்டின் கீழ் இருக்கும் “Aquifer systen” என்ற நிலத்தடி நீர்த்தேக்கம் போன்ற அமைப்பை விளங்கப்படுத்த வேண்டும். இணைப்பில் யாழ்க்குடாநாட்டின் கீழ் உள்ள 4 பெரிய aquifers களை படத்தில் காட்டியுள்ளேன். எங்கள் அனைவருக்கும் குடிநீரும், விவசாயத்திற்கான நன்னீரும் கிடைப்பது அதில் இருந்து தான். அதிலும் குறிப்பாக “சுண்ணாகம் Aquifer” மிகப் பெரியது. அந்த aquifer இனை அதன் அடியில் உள்ள உப்பு நீர் மேலெழாமல் சுத்தமாக பேணுவது இந்த வழுக்கி ஆறும் அதை சூழ உள்ள குளங்களும் நீரேந்து பிரதேசங்களும் என்பது பலருக்கும் தெரியாது.
  தவிர மண்வளமாக இருக்ப்பதற்காக, அதில் நாம் இடும் கழிவுகளை கழுவி அகற்றுவதும் இந்த வழுக்கி ஆறும் அதை சூழ உள்ள குளங்களுமே. நம் பிரதேசத்தின் பல உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் வருடம் முழுவதும் நீரை கொடுத்து உயிர்பல்வகைமையை காத்து அழகிய இயற்கை வனப்பை கொடுப்பதுவும் இந்த வழுக்கி ஆறும் அதன் சூழலுமே. உங்கள் கிணறுகளின் இன்று நீர் அள்ளக்கூடியவாறு கிடைப்பதுவும் இந்த வழுக்கியாறும் குளங்களும் கொடுத்த வரமே.
  ஏன் யாழ் குடாநாட்டில் கந்தரோடை பகுதியில் முதலாவதாக மனித நாகரீகத்தை வளர்த்ததும் இந்த வழுக்கியாற்றின் ஊடான படகுப் பயணங்களே!
  இவை ஒவ்வொன்று பற்றியும் நீண்டு எழுதலாம்!
  தொடர்ந்து பேசுவொம்!
  தொடரும்….
  திருநாவுக்கரசு தயந்தன்
  08.09.2023

இது இன்னொரு பாட்டனாரின் கதை!

(Maniam Shanmugam)

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார் ‘ஸ்ரீமான்’ ஜீ.ஜீ.பொன்னம்பலம் பற்றி முன்னர் சில பதிவுகளை இட்டிருந்தேன். அவற்றை நான் இட்டதற்குக் காரணம், இந்தக் கஜேந்திரன் பேசும் தீவிர தமிழ்த் தேசியத்துக்கும் அவருக்கும் பொருத்தமில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே. உண்மையில் அந்தக் குடும்பப் பரம்பரை தமிழின விரோத – சமூக விரோதப் பரம்பரை என்பதே என் போன்றவர்களின் கருத்து.

பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில்

(Ramanathan Lambotharan)

மிக நியாயமான விளக்கம். விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் வாய்ப்பு அரிது என்பது முதலில் இருந்தே கவனிக்கக்கூடியதாக உள்ளது. Cannula போடப்பட்டதால் கை அகற்றவேண்டி வந்தது என்பதும் antibiotic மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட வேண்டி வந்தது என்பதும் மருத்துவ ரீதியாக நம்ப்பக்கூடியதாக இல்லை. கையுக்கு இரண்டு வேறுபட்ட radial artery, ulnar artery என்ற இரத்தக்குழாய்களினூடாக குருதியோட்டம் வருவதாலும், அவை இரண்டும் வட்ட வடிவமாக இணைந்து கிளைத்து இரத்தோட்டத்தை வழங்குவதாலும் ஊசி தறுதலாகப் போட்டு ஒரு இரத்தக்குழாய் பாதிக்கப்பட்டது என்று ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் இரத்தோட்டம் துண்டிக்கப்பட முடியாது.
ஒவ்வொரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம்..