கையை விரி்த்தார் புலனாய்வுத்துறைத் தலைவர்

தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் பதவியில் இருந்தாலும், தனக்குப் போதிய அதிகாரம் இல்லை என்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து தனக்குக் கிடைத்த தகவல் ஒன்றை, பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவித்ததாகவும், அது குறித்து, கடிதம் மூலம் அறிவித்ததாகவும் கூறிய தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் சிரிர மெண்டிஸ், இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் ஆராயப்படவில்லை என்றும் சாட்சியமளித்தார்.

’தமிழர்களை கோர்த்துவிட வேண்டாம்’

தற்கால பிரச்சினைகளை தமிழர்களின் பிரச்சினைகளுடன் கோர்த்துவிட அரசியல்வாதிகள் முயற்சி செய்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் குற்றஞ்சாட்டுகிறார்.

வைத்தியர் ஷாபிக்கு எதிராக குருநாகலில் ஆர்ப்பாட்டம்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்​னெடுக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியில் விசேட சோதனை; இலத்திரனியல் கருவிகள், கத்திகள் மீட்பு

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நாரஹேன்பிட்டியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, வீடொன்றிலிருந்த இராணுவத்தினர் பயன்படுத்தும் முகமூடிகள் நான்கும், வீட்டில் பயன்படுத்துவதற்குத் தடை செய்யப்பட்ட கத்திகள் பத்தும் மற்றும் இலத்திரனியல் கருவிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டில் ஆறு மாவட்டங்களில் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

15 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு தப்பியோட்டம்

இலங்கையிலிருந்து, இலட்சத்தீவுகளுக்கு, ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் 15 பேரைக்கொண்ட படகொன்று செல்வதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலையடுத்து, கேரளா கடற்பரப்பில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல்

இந்தியாவின் நாடாளுமன்ற கீழ்ச் சபைக்கான தேர்தலானது கடந்த மாதம் 11ஆம் திகதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு கட்டங்களாக இடம்பெற்று நேற்று (23) வாக்கு எண்ணிக்கை இடம்பெற்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) தனிப்பெரும்பானையுடன் மீண்டும் ஆட்சியமைக்கின்றது.

ஞானசார தேரர் விடுதலை

பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவதூறு வழக்கில் குற்றவாளியான அவர் 9 மாதங்களும் 3 வாரங்களும் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தமை குறிப்பிடதக்கதாகும் அத்தோடு ஞானசார தேரரின் தயாரும் சிறைச்சாலை வாசளில் அவருக்காக காத்திருந்தார்.

ரிஷாட், ஹிஸ்புல்லா, அசாத் சாலியை பதவி விலகக்கோரி வலியுறுத்தல்

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதாக் கூறப்படும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகிகோரை உடனடியாக பதவி விலக்குமாறு கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிக்குகள் இணைந்து கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றை நேற்று (22) கையளித்துள்ளனர்.

இந்திய தேர்தல் முடிவுகள்


தமிழ் நாட்டில் திமுக முன்னிலை வகிக்கின்றது. அதிமுகவிற்கு பாரிய பின்னடைவு. கூடவே பாஜக விற்கும் பாரிய பின்னடைவு. மத்தியில் பாஜக தனது இடத்தை தக்கவைக்கின்றது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு முன்னேற முடியவில்லை. மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் வாய்பையும் காங்கிரஸ் பெறுவது கஷ்டம். மாநிலங்கள் அவையில் திமுக ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு வீச்சாக வெற்றி பெறுவதாக அறிய முடியவில்லை. இன்னமும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் ஆரம்ப நிலை முடிவுகள் இவை

மினுவாங்கொடையில் புர்கா, நிக்காப் அணிய தடை

மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை நகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர தலைமையில் இது தொடர்பான விசேட கூட்டம் கூடியபோதே, நகர சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களால் மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, மினுவாங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய வேண்டாமென, நகர சபையினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.