ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை: பிரதமர்

நடைமுறை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதை தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லையென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.கொள்ளைக்காரி கைது

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ., நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்

ட்ரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்திருப்பது, தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவை ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு வழங்கி உள்ளனர். இந்த நிலையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தை விஸ்கான் மாகாணத்தில் மேற்கொண்டார்.

கமலா ஹாரிஸுக்கு ஒபாமா ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்க ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் எனக் கூறியுள்ளார்.

இன்று ஆரம்பிக்கிறது பரிஸ் 2024

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் இன்றிரவு 11 மணிக்கு 33ஆவது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கின்றன.

செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் 21ம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. ஓகஸ்ட் 15ஆம் தேதி வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் திகதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்க அச்சக திணைக்களம் இன்று (26) காலை வெளியிட்டது.

பதவி விலகுமாறு ரணிலுக்கு சஜித் சவால்

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்

இலங்கை வீரர்களுக்கு பச்சை குத்துதல், கழுத்தணி, காதணிகள் தடை

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, பச்சை குத்துதல், கழுத்தணி அல்லது காதணிகளை அணிவதை விட்டுவிட்டு, சரியான முடியுடன் வர வேண்டும் என இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளர்  சனத் ஜெயசூர்யா வீரர்களிடம் கூறியுள்ளார்.  

எத்தியோப்பிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 229 பேர் என தெரியவந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.