தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா?

(ஜெரா)

தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று செய்கின்றனர்; வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் “கதைகளை” அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புகளின் அடிப்படையில்தான், வடக்கிலும் கிழக்கிலும், நாளாந்தம் பௌத்த விகாரைகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடக்கையும் கிழக்கையும் பௌத்தமயப்படுத்துவதற்கு, பெரும்பான்மையினர் கொடுக்கும் விளக்கம் சரியானதா?

(“தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part15)

இந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். .நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. .நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part15)” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் இணக்கம்

தற்போதைய அரசியல் தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்ைககளையும் மேற்கொள்ள, ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பிரதமர் ஆகியோர் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதில் அவர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

(“அரசியல் தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் இணக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழரசுக் கட்சி எப்போதும் ஐ.தே.கவின் கூட்டாளியே! வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் அ. வரதராஜப்பெருமாள் பேட்டி

(வாசுகி சிவகுமார்)

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தாங்கிப்பிடித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மாகாண சபையைப் பலப்படுத்தும் நோக்குடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய பாராளுமன்ற சட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்க வேண்டும் என்கின்றார் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் அ. வரதராஜப்பெருமாள். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில், கூட்டமைப்பின் ஆதரவுக்கு பிரதியுபகாரமாக, ஐக்கிய தேசியக் கட்சி, அழகான வெற்று வாக்குறுதிகளைத் தவிர வேறெதனையும் தரவில்லை என்கிறார். அவரது நேர்காணலின் முழுவிபரம்.

(“தமிழரசுக் கட்சி எப்போதும் ஐ.தே.கவின் கூட்டாளியே! வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் அ. வரதராஜப்பெருமாள் பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் #கைது

(By Arun Sitharth Maithreyan, சமூக நீதிக்கான இளைஞர் இயக்கம், யாழ்ப்பாணம்)

யாழ் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் சிவபாதசுந்தரம் பிரணவன் (46 வயது) சற்று முன் 4.30 pm மணியளவில் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். எமது அமைப்பான யாழ்/சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ரஜிவரன் சோபிதன் (19 வயது D/B 10-06-1999) என்னும் இளைஞனை கடத்தியமை, சித்திரவதை புரிந்தமை, மற்றும் சோபிதனின் உடைமையில் இருந்த ரூபாய் 28,000 பெறுமதியான Huwavi Y-7 வர்க்க போனை பலாத்காரமாகத் திருடிச் சென்ற குற்றங்களுக்காகவே இவர் கைது செய்யப்பட்டார். இவர் நாளை யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என யாழ் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிகத் தகவல்கள் தேவையான ஊடக நண்பர்கள் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

(“யாழ்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் #கைது” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப் போராட்ட இயக்கங்களது ஐந்தொகையைச் சிறு குறிப்பாக…

தமிழ்பேசும் மக்கள் தங்கள்மீதான இலங்கை அரசின் இனவொடுக்குமுறைக்கு -இனப்படுகொலைக்கு எதிராகப் போராடத் தம் புதல்வர்களை அனுப்பியதும் , தாம் சேர்ந்து தோள் கொடுத்ததும் இதுவரையான வரலாறுதாம் .இயக்கங்கங்கள் தமது இயக்க இருப்புக்காகக் கட்டாயப்படுத்தி இளைஞர்களைச் சிறார்களை யுத்தக் களத்துக்கு அனுப்பிப் பல்லாயிரக் கணக்காய்ப் பலியெடுத்ததும் ஈன வரலாறுதாம். (“ஈழப் போராட்ட இயக்கங்களது ஐந்தொகையைச் சிறு குறிப்பாக…” தொடர்ந்து வாசிக்க…)

முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பேட்டி

கே. ஒக்ேடாபர் 26ஆம் திகதி முக்கிய தீர்மானத்தை மேற்கொண்ட போது நிலைமை இந்தளவு சிக்கலாகும் என்று எப்போதா வது நினைத்தீர்களா?

ப. இல்லை. ஒருபோதும் இல்லை. அப்படி சிந்திப்பதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. மக்கள் அதற்கான பொறுப்பினை ஏற்றுச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்ைகயில்தான் அந்த முடிவை எடுத்தேன். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே எனது முடிவு அமைந்திருந்தது.

(“முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடு

பயன்பாட்டு எல்லை மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

இரணைமடுவை அண்டிய கிராமங்கள் தண்ணீரின்றி தவிக்க, நன்நீர் மீனவர்கள் தாம் கவனிக்கப்படுவதில்லை எனக் கருதுகின்றனர். ‘இரணைமடு விவசாயிகள் நெற்செய்கைக்கு அப்பால் பயறு, கௌபி, உளுந்து, சோளம், நிலக்கடலை போன்ற உப உணவு பயிர்ச்செய்கையில் ஆர்வமின்றி காணப்படுகின்றனர். இந் நீர்த்தேக்கத்தால் ஏழு ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவதாக கூறப்பட்டாலும் சில நூறு விவசாயில்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களாக விளங்குகின்றனர்.’

(“இரணைமடு” தொடர்ந்து வாசிக்க…)

மேற்குலகுக்கு ‘ஜனநாயகம்’ சொற்பதம் மட்டுமே

மேற்குலகும் அதன் உள்ளூர் ஆதரவாளர்களும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ‘ஜனநாயகம்’ என்ற சொற்பதத்தை ஒரு சாக்காக பயன்படுத்துகின்றன என்று ஐக்கிய நாடுகளின் அமைப்பில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகம் தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கூறினார்.

(“மேற்குலகுக்கு ‘ஜனநாயகம்’ சொற்பதம் மட்டுமே” தொடர்ந்து வாசிக்க…)

“புலி” என்ற சொல் மட்டுமே அரசியல் பிழைப்புக்காகத் தேவைப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு புலம்பெயர் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் உதவி செய்து வரும் மாற்றுவலுவாளரைச் சந்தித்துப் பேசச் சென்றோம். நாங்க்ள் சந்தித்த அந்த மாற்றுத்திறனாளி, தன்னுடைய பிரச்சினைகளையும் துயரங்களையும் விட, தன்னைப்போலச் சிரமங்களின் (பாடுகளின்) மத்தியிலிருப்போரைப் பற்றியே பேசினார். (““புலி” என்ற சொல் மட்டுமே அரசியல் பிழைப்புக்காகத் தேவைப்படுகிறது.” தொடர்ந்து வாசிக்க…)