தோழர் றேகனின் 33 வது நினைவுதினம்.

வவுனியா மாவட்டத்தில் பிறந்த இன்பராசா என்னும் இயற்பெயருடைய தோழர் றேகன் 23.11.1985ம் ஆண்டு புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். 1980 களின் ஆரம்பத்தில் ஈழ மாணவர்
பொதுமன்றம்(Gues) என்னும் மாணவர் அமைப்பினூடாக தனது அரசியல் பணியை ஆரம்பத்தவர் . மக்களின் மீதும் மண்ணின் மீதும் அளவுகடந்த நேசத்துக்குரியவராகவிருந்தார். அதற்காக தன்னுடைய பல்கலைக்களக பட்டப்படிப்பையும் தூக்கியெறிந்து விட்டு பெற்றோர்கள் உயர்கல்வியை கற்பதிற்கு தேவையென கொடுத்த பணத்துடன் தன்னை போராட்டத்துடன் முழுமையாக இனைத்துக்கொண்டவர். EPRLF இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் இனைந்து இராணுவப்பயிற்சியைப் பெற்று மேலதிக சிறப்புப் பயிற்சிக்காக பாலஸ்தீன விடுதலை இயக்கமொன்றின் பயிற்சிமுகாமில் பயிற்சியை முடித்திருந்தார்.அதன்பின்பாக கட்சியினால் வன்னி பிராந்திய இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டார் .மக்கள் விடுதலைப் படையை பலப்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களுக்கு தலைமைதாங்கினார். (“தோழர் றேகனின் 33 வது நினைவுதினம்.” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதி – மஹிந்த – ரணில் ஏன் கூட்டாட்சி நடத்த முடியாது

– வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனான நேர்காணல்…

(சுமித்தி தங்கராசா)
தான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும் என்கின்றார் வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி விக்கினேஸ்வரன். அவ்வாறு தான் பக்கச் சார்பாகச் செயற்படுவது தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.தினகரன் வாரமஞ்சரிக்கான அவரது நேர்காணலிலேயே அவர் அவ்வாறு கூறினார். நேர்காணல் வருமாறு…..

(“ஜனாதிபதி – மஹிந்த – ரணில் ஏன் கூட்டாட்சி நடத்த முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

நிலையியல் கட்டளையும் நிலையில்லா குழப்பமும்

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பிறகு பாராளுமன்ற அமர்வு இரண்டாவது தடவையும் மிகவும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. சுமார் ஏழு மணிநேரம் இடம்பெற்ற அமர்வில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் உயரிய சபையின் கண்ணியம் பேணப்பட்டிருக்கிறதென்பது திருப்தி தரக்கூடியது.

(“நிலையியல் கட்டளையும் நிலையில்லா குழப்பமும்” தொடர்ந்து வாசிக்க…)

சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்

முன்பு எல்லாம் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நகமும் சதையும் என்று சொல்வார்கள். இப்பொழுது அப்படி இல்லை. யாரிடமாவது அந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். மெகா தொடர்களும், பெண்களும் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு இன்றைய தமிழ்ப் பெண்களில் பலர், தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமைகளாக மாறி வருகிறார்கள். எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. ஒரு சில பெண்களுக்குப் பைத்தியமே பிடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.

(“சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்” தொடர்ந்து வாசிக்க…)

60 ஆயிரம் ஆண்டு பழமையான நார்த் சென்டினல் தீவில் யார் வசிக்கிறார்கள்? அங்குச் செல்ல ஏன் அஞ்சுகிறார்கள்? தடை ஏன்?- ஓர் அலசல்

(போத்திராஜ்)

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள மர்மமான நார்த் சென்டினல் தீவுக்கு பூர்வீக பழங்குடிகளான சென்டினல் மக்களைச் சந்திக்கச் சென்ற 26 வயது அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடி மக்களால் கொல்லப்பட்ட சம்பவம்தான் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

(“60 ஆயிரம் ஆண்டு பழமையான நார்த் சென்டினல் தீவில் யார் வசிக்கிறார்கள்? அங்குச் செல்ல ஏன் அஞ்சுகிறார்கள்? தடை ஏன்?- ஓர் அலசல்” தொடர்ந்து வாசிக்க…)

நீர்கொழும்பு கடல்நீரேரி

நீர்கொழும்பில் அமைந்துள்ள இக்கடல் நீரேரியானது மூன்று மணிநேர மீன்பிடி அமர்வோடு, கடற்கரையிலிருந்து கரையோரத்தில் துவங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் காலை 8:00 மணி அல்லது மாலை 3:00 மணிக்கு காலை காலை அமர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் விளையாட்டு மீன்பிடி உபகரணங்கள் என்பன அங்கு வழங்கப்படுவதோடு, வழிகாட்டி ஒருவரும் துணைக்கு நியமிக்கப்படுவார்.

(“நீர்கொழும்பு கடல்நீரேரி” தொடர்ந்து வாசிக்க…)

உலகின் உன்னதம்: மும்பாய் விமானநிலையம்

(A.P.Mathan)

இலங்கையில் திடீரெனப் பிரதமரை மாற்றிய ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு, இந்தியாவுக்கான பயண ஆயத்தத்தில் இருந்தோம். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், இலங்கையிலிருந்து ஊடகத்துறைசார்ந்த 20 பேருக்கான சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தப் பயணம், மும்பாயை நோக்கியதாக இருந்தது. ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலையில் மும்பாய்ப் பயணம் தொடங்கியது.

(“உலகின் உன்னதம்: மும்பாய் விமானநிலையம்” தொடர்ந்து வாசிக்க…)

பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்

(கே. சஞ்சயன்)

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது.

(“பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.

(“மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த்தேசியத் தலைமைக்கு

(நடேசன்)

ரோம இராச்சியம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். TAMIL SINHAL POLITICSஅதேபோல் ஜனநாயக அரசியலில் சிறிய விடயங்களும் பல காலம் விவாதிக்கப்படும். சில செய்து முடிக்கப்படும். பல செய்வதற்கு மேலும் காலமெடுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.

(“தமிழ்த்தேசியத் தலைமைக்கு” தொடர்ந்து வாசிக்க…)