தூண்டில் இரைகள்

(கே.எல்.ரி.யுதாஜித்)

இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப் பற்றியே சிந்திப்போம் என்பதுதான், பெருமளவான அரசியல்வாதிகளின் மனஓட்டமாக இருக்கிறது.

(“தூண்டில் இரைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வாஜ்பாய் மறைவு: பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரின் இழப்பு

(எம். காசிநாதன்)
அடல் பிஹாரி வாஜ்பாய், 1957இல் இருந்து, பத்துமுறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்; இரண்டு முறை மாநிலங்களவைக்குத் தெரிவானார். வெளியுறவுத்துறை அமைச்சராகவும் மூன்று முறை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தவர். இவரின் மறைவால், ‘சிறந்த நாடாளுமன்ற வாதி’ ஒருவரை, இந்திய ஜனநாயகம் பறிகொடுத்திருக்கிறது.

(“வாஜ்பாய் மறைவு: பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரின் இழப்பு” தொடர்ந்து வாசிக்க…)

காரணம்தான் என்ன? கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, வெள்ளம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத பேய் மழை பெய்து வருகிறது, மழை இன்னமும் கூட ஒய்ந்தபாடில்லை எனும் நிலையில் ஞாயிறு முதல் மழைக் குறையலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளத்துக்கு இதுவரை 324 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்டு முதற்கட்டமாக ரூ.500 கோடி நிவாரணம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

(“காரணம்தான் என்ன? கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, வெள்ளம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part1)

மே 18எங்கள் தேசத்தில் எம் இனத்தை கொலைகளத்தில் பலி கொடுக்கப்பட்ட நாள் , இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள். ஆனால் இது யாரால் ஏற்பட்டது ? போரின் இறுதி நாட்கள் எவ்வாறு இருந்தன?வன்னியில் என்ன நடந்தது? பிரபாகரன் இறுதியாக The Three Hundred என்ற ஆங்கில படத்தை பார்த்த பின்னர் எடுத்த முடிவு என்ன? கொஞ்சம் நீளமான பதிவு ஆனால் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பதிவு, ஒரு 20 நிமிடங்கள் ஒதுக்கி இதனை முழுவதும் படிக்கவும்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part1)” தொடர்ந்து வாசிக்க…)

காலத்தின் திசைவழிகள்: போராட்டங்களின் உலகமயமாக்கல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வாழ்க்கைத் தெரிவுகள் எதையும் வழங்காதபோது, போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என, மக்கள் உணர்கிறார்கள். ஒருபுறம் செல்வம், சிலரது கைகளில் மலைபோல் குவிகையில், இருந்த கொஞ்சமும் மெதுமெதுவாகக் களவாடப்படுவதை அவர்கள் உணர்கையில், அவர்களுக்குப் போக்கிடம் எதுவும் இல்லை. அமைதியாக இருத்தல், பொறுமை காத்தல் போன்ற போதிக்கப்பட்ட அஹிம்சை வழிமுறைகள் எதுவுமே, பயனளிக்காது என்பதை உணர்ந்த பின்னர், மக்களால் என்ன செய்ய முடியும்?

(“காலத்தின் திசைவழிகள்: போராட்டங்களின் உலகமயமாக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல்

(கே. சஞ்சயன்)

“கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவை முன்னிறுத்தி, தமிழக – ஈழ உறவுகள் தொடர்பாக, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் எழுதியிருந்த கட்டுரை, இவ்வாறு தான் நிறைவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில், ஈழத் தமிழரின் அரசியல் என்ன, அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது இங்குள்ளவர்களாலும், வெளியில் உள்ளவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

(“தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part 3)

எனது ‘எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……’ தொடரின் இரண்டாவது பாகம் தேனீரை அடிப்படையாக கொண்டு எமது மலையக மக்களைப் பற்றி ஒரு விவாத அரங்கை திறந்து வைக்கும் என எதிர்பார்த்தேன் அப்படி ஒன்றும் பெரிதாக நடைபெறவில்லை சற்று ஏமாற்றம்தான். எனது எழுத்து இந்த முனையைத் திறக்கும் அளவிற்கு கூரியதாக இருக்கவில்லையோ? அல்லது எமது மலையக மக்கள் பற்றிய கரிசனை எம் மத்தியில் அவ்வளவாக இல்லையோ? என்று என்னை சிந்திக்க வைக்கின்றது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 2)

சிறப்பு அதிரடிப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. காவல்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை உள்ளீர்த்து இராணுவத்தின் கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு இஸ்ரவேல் பாதுகாப்பு முகவரகம் ( Israel security Agency ) இன் சின் பெத் (Shin Beth) பயிற்றுவிப்பாளராக சிறப்பு அதிரடிப்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஆயதப் பயிற்சிகளுடன் சிறிலங்காவிலுள்ள தமிழ்பேசும் மக்களிடையே எவ்வாறு பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாக விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்தலாம் என்ற ஆலோசனை மற்றும் திட்டமிடல்களையும் முன்வைத்தார். அவ்வாலோசனைகள் சிறிலங்கா அரசிற்கு தேவையானதாகவும் அவசியமானதாகவும் இருந்தது. 

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 2)” தொடர்ந்து வாசிக்க…)

போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா?

(“போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?” தொடர்ந்து வாசிக்க…)

நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள். (“நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)