தோழர் ஐயா அவர்களின் 30வது ஆண்டு நினைவுநாள்.

06.04.1988 அன்று தோழர் ஐயா அவர்களுடன் தோழர்கள் சாரங்கன், தங்கேஸ் ரவி, சில்வா, பவா ஆகியோர் நிராயுதபாணிகளாக வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது வவுனியாவில் வைத்து சகோதர அமைப்பான PLOTE அமைப்பின் உறுப்பினர்களால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்து தெருவேரத்தில் வீசி எறியப்பட்டார்கள்.

(“தோழர் ஐயா அவர்களின் 30வது ஆண்டு நினைவுநாள்.” தொடர்ந்து வாசிக்க…)

பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை

(கே. சஞ்சயன்)
குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். குரைப்பதில் கவனம் செலுத்தும் நாயினால், கடிப்பதில் கவனம் செலுத்த முடியாது என்பதால்தான் அவ்வாறு கூறப்படுவதுண்டு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அதைத் தான் நிரூபித்திருக்கிறது.

(“பிசுபிசுத்துப் போன நம்பிக்கையில்லாப் பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)

ரணில் காப்பாற்றப்பட்டாலும் கைவிடப்பட்டாலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை!

டி. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் ஐதேக பின்னர் அவரது மகன் டட்லி சேனநாயக்கவின் தலைமையின் பின்னர் அந்த கட்சியை இதுவரை ஜயவர்தன குடும்ப சொத்தாகவே இருந்து வந்துள்ளது, இலங்கையில் ஒரு தலைவருக்கான அதி கூடிய அதிகாரத்தை நாடாளுமன்றம் மூலமும் மக்களின் வாக்களிப்பு மூலமும் பெற்றுக்கொண்ட முதல் மனிதர் ஜெ ஆர் ஜயவர்தன, ரணில் அவர்களின் மாமா, இடையில் பிரேமதாசாவின் இடைவிடாத முயற்சியின் பலனாக அவர் ஜனாதிபதியாக வந்தார், எனினும் ஐதேக ஜேஆர் குடும்பத்தை விட்டு வேற்று மனிதர்களிடம் கைமாறிவிடவில்லை அதன் தலைமையை ரணில் விக்கிரம சிங்க பொறுப்பேற்றார், இவரது தலைமைக்கு எதிராக பிரேமதாசாவின் புதல்வர் எத்தனை முறை முயற்சித்தும் அது கைக்கூடவில்லை, இப்போது பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என கோரி ரணில் அவர்களுக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றுக்கு வந்துள்ளது.

(“ரணில் காப்பாற்றப்பட்டாலும் கைவிடப்பட்டாலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தம்பி தில்லை முகிலன்

தோழர் தம்பி தில்லை முகிலன் என நம் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம் 31.03.2018 அன்று மரணத்தைத்தழுவிக்கொண்டார்.இன்று (01.04.2018) மாலை அவருக்கான இறுதிக் கடமைகள் நிறைவேற்றப்பட்டன.தமிழர் சமுக ஜனநாயக கட்சியின்(SDPT)தோழர்களும் கலந்து தொண்டு தமது இறுதி அஞ்சலிகளைத் செலுத்தினர்.

(“தோழர் தம்பி தில்லை முகிலன்” தொடர்ந்து வாசிக்க…)

தந்தை செல்வா அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம்

(அருளம்பலம் விஜயன்)
தந்தை செல்வநாயகம் என்று அறியப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ள.த.எ.செல்வநாயகம் அவர்கள் 31.3.1798 அன்று மலேசியாவில் உள்ள ஈப்கோ நகரில் பிறந்தார்.
இலங்கைத் தமிழ் அரசியல் வாதியாக,வழக்கறிஞாரக,நாடாளுமன்ற உறுப்பினராக,இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைவராகவும் இருந்தார்.
தந்தை செல்வா அவர்களின் தகப்பனார் ஆசிரியராக யாழ்பாணம் தொல்புரத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்தார்.அவர் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு வர்த்தக தொழில் ஈடுபட்டு வந்ததார்.மலேசியாவின் ஈப்கோ நகரில் முதலில் குடியேறிய அவர்கள் பின்னர் அங்குள்ள தைப்பிங் நகரில் வசித்து வந்தனர்.

(“தந்தை செல்வா அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா – பாகிஸ்தான்

வேகமாக மாறிவரும் பூகோள அரசியலில், சீனாவினதும் ரஷ்யாவினதும் அண்மைய ஆதிக்கம், பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா கொண்டிருந்த மேலாதிக்கத்தைச் சமநிலைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே, பிராந்திய வல்லாண்மையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், மேற்கத்தேய நாடுகளுக்கு இணையாக ரஷ்யாவும், இராணுவ உடன்பாடு, இணைந்த பாதுகாப்பு உடன்படிக்கை மூலமாக, குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் புதியதோர் இணைந்த கட்டமைப்புக்கு, வழிவகுத்திருக்கிறது.

(“ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா – பாகிஸ்தான்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தம்பி தில்லை முகிலன்

புரட்சிகர செவ்வணக்கம்

தோழனே உன்னைப் பற்றி என்ன எழுத எதை எழுத எதை விட தோழமையும் உரிமையுமாய் நீண்ட பயணங்கள் .

திருமலை நகரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் முன்னோடிகள் சங்கப் பலகை நிகழ்வுகளில் முற்போக்கு முகம் கொண்டு மாக்சிய கருத்துக்களை அள்ளி வீசிய அந்த தருணங்கள்.உன் கம்பீரக் குரல் மிடுக்கேறிய உன் தோற்றம் பார்த்த மாத்திரத்திலேயே என்னை ஆதர்சித்த உன் தோற்றம் பின்னாளில் பல கவிதை அரங்குகளில் உன் புரட்சிகர முழக்கம் திருமலையில் ஒரு முற்போக்கு முகாமுக்கான முன்னறிவிப்பாய் அமைந்தன.

(“தோழர் தம்பி தில்லை முகிலன்” தொடர்ந்து வாசிக்க…)

பிணங்களுடன் கிடந்து மீண்டேன்

1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை”

இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

(“பிணங்களுடன் கிடந்து மீண்டேன்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் கதிர்

எனது பாலிய நண்பனும் தோழனும் ஆகிய கதிர்(கணேசரத்தினம் கதிர்காமநாதன்)தமிழ் பாசிசவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு இன்று 30 வருடங்கள் கடந்துவிட்டன.இவன் பூனகரி,நல்லூர் பிரதேசத்தை பிறப்பிடமாகவும்.ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவனும் ஆவான்.ஈழதேச விடுதலைபோராட்டத்திற்கு ஈ பீ ஆர் எல் எவ் இயக்கத்தை தேர்வு செய்து அதன் இராணுவ பிரிவான மக்கள் விடுதலை படையில் இந்திய உத்தர பிரதேசபயிற்சியை முடித்துக்கொண்டு கிளி/ முல்லை பிராந்திய பொறுப்பான தளபதியாக செயற்பட்டதுடன்.

(“தோழர் கதிர்” தொடர்ந்து வாசிக்க…)

துரோகி என்ற வாயால் தோழா எனப் பாடுக…!

(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி) க்குமிடையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பாசணை நடந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தோம். அந்தக் கற்பனையை நீங்களும் படித்தறிக)

(“துரோகி என்ற வாயால் தோழா எனப் பாடுக…!” தொடர்ந்து வாசிக்க…)