துரோகி என்ற வாயால் தோழா எனப் பாடுக…!

(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி) க்குமிடையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பாசணை நடந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தோம். அந்தக் கற்பனையை நீங்களும் படித்தறிக)

(“துரோகி என்ற வாயால் தோழா எனப் பாடுக…!” தொடர்ந்து வாசிக்க…)

பன்முகப்படுத்தப்பட்ட தலமையை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கும்

ஆட்சி அமைப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுதப்படாத உடன்படிக்கையில் செயற்பட்டு வருகின்றன. இந்தப் புதிய சூழலைப்பற்றி பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிகமும் பதற்ற நிலையிலான அபிப்பிராயங்களாகவே உள்ளன.

(“பன்முகப்படுத்தப்பட்ட தலமையை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் தேவானந்தா- பிரம்ம ரிஜி

கௌசிகன் என்ற மன்னன் தான் ஆண்ட நாட்டு மக்களின் நன்மைக்காக முடி துறந்து முனிவராக மாற யாகம் செய்தான்.ஒரு சத்திரியன் முனிவராவதை முனிவர் வசிட்டர் விரும்பவில்லை.ஆனாலும் கௌசிகன் தவமிருந்து சிவனின் அருளால் பிரம்ம ரிஜி பட்டம் வாங்கி விசுவாமித்திர முனிவர் என்ற பெயர் பெறுகிறார்.

(“டக்ளஸ் தேவானந்தா- பிரம்ம ரிஜி” தொடர்ந்து வாசிக்க…)

முள் படுக்கையில் கூட்டமைப்பு

(கே. சஞ்சயன்)

வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப் பலப்பரீட்சை. இங்கு, 16 ஆசனங்களைக்  கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிய, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரை முன்மொழிய, பதிலுக்கு ஈ.பி.டி.பியும் ரெமீடியசின் பெயரை முன்மொழிந்ததால் திருப்பம் ஏற்பட்டது.

(“முள் படுக்கையில் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது, வலிமையால் தன்னை நிலைநிறுத்த முனைவது. வலிமையால் நிறுவமுடியாத போது, அவதூறும் பொய்யும் புனைகதையும் உண்மைகள் போல் சொல்லப்படுகின்றன. இதனாலேயே ‘பொய்ச் செய்தி’களின் காலத்தில், நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம்.

(“ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை” தொடர்ந்து வாசிக்க…)

ஓருங்கிணைந்துசெயற்படவேஉள்ளூராட்சியில்மக்கள் தீர்ப்பு

(சுகு-ஸ்ரீதரன்)

உள்ளூராட்சிசபைகளில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மக்கள் பணிசெய்வதற்குஅனைத்துதமிழ் தரப்புக்களும் முயல வேண்டும். இந்தசபைகள் அரசியல் வேறுபாடுகள் முரண்பாடுகளுக்sritharan sukuகான களங்கள் அல்ல. வட்டார பிரதேச- நகர- மாநகரமட்டங்களில் மக்களின் ஜீவாதார நலன்களுடன் தொடர்புபட்டவை. கடந்தஉள்ளு+ராட்சி சபைகள் போல கிழக்கு,வடக்கு மாகாணசபைகள் போல் குறிப்பிடத் தகுந்த எதையும் சாதிக்கமுடியாததாக இச்சபைகள் ஆகிவிடக் கூடாது.

(“ஓருங்கிணைந்துசெயற்படவேஉள்ளூராட்சியில்மக்கள் தீர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன

 

“ஓயாத அலைகள்” நடவடிக்கையில் புலிகளிடம் படபடவென இலங்கை இராணுவத்தின் படைத்தளங்கள் வீழ்ந்ததைப்போல அல்லது 2008, 2009 களில் இலங்கைப் படையினரிடம் புலிகளின் பிரதேசங்களில் கடகடவென வீழ்ச்சியடைந்ததைப்போல யாழ்ப்பாண மாநகர சபை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன.

(“நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் நிலம் நிச்சயம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

(கவிநயா)
மக்களின் நிலங்கள் மக்களிடம் நிச்சயம் கையளிக்கப்பட வேண்டும், அல்லது அந்நிலங்களுக்கான நஷ்ட ஈடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டும், இது தொடர்பாக முறையான பொறிமுறை ஒன்று நடைமுறையில் இருக்க வேண்டியது அத்தியாவசியமான விடயம் ஆகும் என்று ஞாயிறு தினக்குரலுக்கு
வழங்கிய சிறப்பு பேட்டியில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

(“மக்களின் நிலம் நிச்சயம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பக்கம் – ‘Page Tamil’ இன் Who is the Black sheep? என்பதற்குப் பதில்

(Janaki Karthigesan Balakrishnan)

நேற்றைய தினம் யாழ். நகரசபை மேயர் தெரிவில் இணக்க அரசியலை நடைமுறைப்படுத்தியதைப் போற்றி எழுதிவிட்டு, இன்று இக்கட்டுரையை எழுதுவதற்கு தயக்கமாக இருந்தாலும், அதில் ஒரு கட்டாயம் இருக்கிறது என்பதை தீர்க்கமாக உணர்கிறேன். இன்றைய அரசியல் பல வயதினரும், குறிப்பாக இன்றுவரை அதிக ஜனநாயக தேர்தல்முறை அரசியலில் பங்கேற்காத இளைஞரும், யுவதிகளும் கூட, ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் இணக்க அரசியல் என்பதை கடந்த காலங்களில் அறிய வாய்ப்பிருந்திருக்காததுடன், அதை யாழ். நகரசபை மேயர் தெரிவில் நடைமுறைப்படுத்தின் காரணம், பயன்கள் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு, இதை நடைமுறைப்படுத்திய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் போல் வயதிலும், அறிவிலும் முதிர்ச்சியும், அரசியல் அனுபவமும் போதாது. இது அதில் ஈடுபட்ட சில மூத்த அரசியல்வாதிகளுக்கும், வயதைத் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பொருந்தும். இந்தக் கட்டுரை ஒரு யதார்த்தமான அரசியலில் என்னவெல்லாம் நடக்கலாம், அதை ஒவ்வொருவர் எவ்வாறு கையாளுவர் என்று எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிவிக்குமுகமாக எழுதப்படுகிறது.

(“தமிழ் பக்கம் – ‘Page Tamil’ இன் Who is the Black sheep? என்பதற்குப் பதில்” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

(டி.எஸ்.எஸ்.மணி)
24 -03 -2018 சனிக்கிழமை தூத்துக்குடி நகரமே இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. தூத்துக்குடி நகரம், ஸ்ரீவைகுண்டம் நகரம், புதியமுத்தூர் நகரம், தருவைகுளம் என எல்லா இடத்திலேயும் கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்பு என்றே அறிவிக்கப்பட்டது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்ற முழக்கத்துடன் கடையடைப்பு செய்யப்பட்டது.

(“ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!” தொடர்ந்து வாசிக்க…)