லெப்பா ஸ்வெடோஸரா ராடிக் .

(Rathan Chandrasekar)

1925 டிசம்பர் 19இல் யுகோஸ்லாவியாவின் கஸ்னிகா கிராமத்தில் பிறந்த சுட்டிப்பெண். படிப்பிலும் கெட்டி .
ஆரம்பப்பள்ளிக் கல்வி முடித்த கையோடு கைவினைக் கலைகளுக்கான பள்ளியில் சேர்ந்து படித்தாள் லெப்பா. இலக்கியங்களின்மேல் மாளாக் காதல் இந்தச் சிறுமிக்கு.

ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் விக்னேஸ்வரன்

(கே. சஞ்சயன் )

விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் பதிவை வெளியிட்டு வைத்தவர், வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன்.

நாம் வாழும் காலத்தின் வரலாற்றின் முக்கியமான ஒரு பக்கம் – வெனிசுவேலா.

சிகப்பின் வாசனை நுகர்ந்தால்கூட
அழிக்கத்துடிக்கும் அமெரிக்க பயங்கரவாதத்தின்
இன்றைய க்ரூர முகம் .

மன்னார் மனிதப் புதைகுழி புலிகளால் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களது குடும்பங்களினதா?

மன்னார் புதை குழி பற்றி பா.உ. சுமந்திரன் அவர்கள் சர்ச்சையான கருத்து தெரிவித்திருக்கும் நேரத்தில் யாழ் இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி அந்தச் செய்தியை அப்படியே தருகிறோம் – —-ஆசிரியர்

சுதந்திரம்

(Saakaran)

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்ததை நாம் கறுப்பு பட்டி காட்டி எதிர்ப்பதன் மறுவளம் பிரித்தானியாவின் அடிமைத்தனத்திற்குள் நாம் தொடர்ந்து இருப்பதை ஆதரிக்க வேண்டும் கருப் பொருளுக்குள்ளும் தள்ளிவிடும். சுதந்திரத்திற்கு பின்பு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஏன் ஏனைய சமூகங்களுக்கான சமத்துவமான உரிமைகளை வழங்கவில்லை வழங்காமல் இருப்பது என்பது இலங்கை அரசிற்கு எதிரான பிரச்சனை முதல் முரண்பாராக இருக்க வேண்டுமே ஒழிய பிரிதானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து எம்மை விடுவித்தல் இதனைத் தொடர்ந்த குடியரசாக இலங்கையை பிரகடன்படுத்தல் என்பதில் நாம் தமிழ்கள் என்பதற்கு அப்பால் இலங்கையர் என்ற வகையில் செயற்பட வேண்டும்.

அமெரிக்கத் தளம்: நெருப்பில்லாமல் புகையுமா?

(கே. சஞ்சயன்)
அமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, நாட்டுக்கு ஆபத்தானது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இலங்கையைத் தமது விநியோக தேவைக்காக, அமெரிக்க கடற்படை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள், வெளிவந்திருக்கின்றன.

லெனின் எனும் மானுட விடுதலையாளன்

(Saakaran)
மனித குல விடுதலைக்கான புதிய பாதையை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு அறிந்து சமூக விஞ்ஞானம் படைத்தவர்கள் மாக்ஸ் ஏங்கல்ஸ் என்ற பிதா மகான்கள். இவர்கள் படைத்த கம்யூனிசத்தை அடைவற்கான சோசலிச பாதையை உருவாக்க பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியை ஏற்படுத்தி சோவியத் யூனினை நிறுவிய லெனின் மரணமடைந்த தினம் இன்று. உலகில் ஒடுக்கப்பட்ட சகல இனங்களுக்கும் மக்களுக்குமான நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான புரட்சியை நடாத்தி காட்டியவர். இவர் செயற்படுத்தி காட்டிய வழிதான் இன்றும் உலகின் பல பாகங்களிலும் நம்பிக்கையுடன் சமத்துவ வாழ்வை உருவாக்கும் பாதையில் பயணிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. (“லெனின் எனும் மானுட விடுதலையாளன்” தொடர்ந்து வாசிக்க…)

சில உண்மைகளை மறைப்பது நன்றன்று..

விசுவமடுவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிக்கையில் ரெட்பானா சந்திக்கு முன்னர் வீதியின் இடப்புறம் (குமாரசுவாமிபுரம் என்று நினைக்கிறேன்) பெரிய சீமெந்திலான அறிவிப்பு பலகையில் – சிவில் பாதுகாப்பு திணைக்களம் – என்று மும்மொழிகளிலும் எழுதி அழகாக பராமரிக்கப்பட்ட கல்லை காணலாம். வள்ளிபுனத்தை கடந்து நடனமிட்டான் பிள்ளையார் கோயிலை கடந்ததும் வீதியின் வலப்புறம் இதேபோலொரு அறிவிப்புக்கல்லை காணலாம். (“சில உண்மைகளை மறைப்பது நன்றன்று..” தொடர்ந்து வாசிக்க…)

மரபணு மாற்றுக் காய்கறிகளில் என்ன ஆபத்து?

கையடக்க பூசணி. நம் கட்டைப் பைக்கு அளவெடுத்த சைஸில் ‘குட்டை’ புடலை என இப்போது காய்கறிகளும் அல்ட்ரா மாடர்ன் ஆகிவிட்டன. இதெல்லாம்தான் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என யாரோ சொல்ல, பகீரென்றது நமக்கு. அய்யய்யோ… மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் ஆபத்துனு சொல்லித்தானே எதிர்க்குறாங்க. அப்போ நாம ஆபத்தையா சாப்பிடுறோம்? தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான செல்வத்திடம் கேட்டோம்… (“மரபணு மாற்றுக் காய்கறிகளில் என்ன ஆபத்து?” தொடர்ந்து வாசிக்க…)

யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி

(கே. சஞ்சயன்)

இந்த ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தான், கொழும்பு அரசியல் களத்தில், சூடான விவாதப்பொருளாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்கப் போகிறவர்கள் யார், யாருக்கும் யாருக்கும் நேரடிப் போட்டி? என்பதை மய்யப்படுத்தியே இப்போது, அதிக செய்திகள் வெளிவருகின்றன. (“யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி” தொடர்ந்து வாசிக்க…)