இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவம் பற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன் உரையாற்றினார். உரையின் இறுதிக் கட்டத்தில், கடந்த வாரம் வெளியான புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலும் ஆர்வத்தோடு சில கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஒரு படிநிலையாகக் கொண்டு, தமிழ் மக்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

(“இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும்” தொடர்ந்து வாசிக்க…)

மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி

(எம்.எஸ்.எம். ஐயூப்)
கடந்த வாரம் அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தையும் அதேவாரத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கத்துக்கு, நல்லதொரு விடயத்தையாவது சர்ச்சைகள் இல்லாமல் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அந்த இரு சட்ட மூலங்களையும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்காமல் இதைவிட இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அரசாங்கமே சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.

(“மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி” தொடர்ந்து வாசிக்க…)

ஜேர்மன் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

(சாகரன்)

இரண்டாம் உலகப் போருக்கு காரணமான ஹிட்லரின் நாஜி கோட்பாடு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஹிட்லர் தோற்கடிகப்பட்ட பின்பு தீண்டத்தகாதாகவும் வேண்டத் தகாததாகவும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் ஜேர்மனின் தற்போதைய தேர்தலில் இதே நாஜி கொள்கையை தூக்கிப்பிடித்த இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் தடவையாக தேர்தலில் பங்கு பற்றிய Alternative for Germany (AfD) கட்சியிற்கு கிடைத்த வாக்குகள் உலகிற்கு மீண்டும் அதிர்சியூட்டும் செய்தியினை சொல்லி நிற்கின்றது. இது ஜேர்மனுக்கு மட்டும் பொதுவான செய்திகள் அல்ல. அமெரிக்காவில் ட்றம் இன் வெற்றியும் அமெரிக்காவே முதன்மையானது என்பதும் இதனை ஒத்த தேர்தல் செய்திகளை சொல்லி நிற்கின்றது.

(“ஜேர்மன் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாண மாநகரில் மீண்டுமொரு வெள்ளைமாளிகை ………………..

அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை நினைவுபடுத்துவதாய் , வான் பார்வையில் முதலாம் உலக மகா யுத்த விமானம் போன்று காட்சியளித்து பெரு மிடுக்கோடு அமைந்திருந்த நகரமண்டபம்
உள்நாட்டு யுத்தத்தில் சாம்பலாகிப்போனதும் மாநகரசபை தனக்கென ஓர் நிலையான தளமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைந்துலைந்ததும் வரலாற்றுத்துயர். அத்தகைய கொடிய பௌதிக அழிவுகளை மேவி எம் அபிவிருத்தி வேலைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கப்போவது யாழ்ப்பாண மாநகரசபையின் நகரமண்டப நிர்மாணம். (“யாழ்ப்பாண மாநகரில் மீண்டுமொரு வெள்ளைமாளிகை ………………..” தொடர்ந்து வாசிக்க…)

ராஜினியின் கொலையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது பழிபோடலும்.

(“பனை வீழ்தது” நூலிருந்து சாராம்சம்)

இக்கொலை புலிகளினால் நன்கு திட்டமிட்டே மேற்க்கொள்ளப்பட்டது. இக்கொலை இடம்பெறுவதற்க்கு 1 வாரத்திற்க்கு முன் இந்திய இராணுவத்தின் 2 மேஜர் தரப்பு அதிகாரிகள் ராஜினியை பல்கலைக்கழக வளாகத்துள் சந்தித்துள்ளனர். ராஜினி இங்கிலாந்து சென்ற சமயத்தில் முறிந்த பனை நூலின் பிரதிகளை எடுக்க சென்ற இந்திய இராணுவம் வீட்டில் இருந்தோரை தொந்தரவு செய்துள்ளனர். இது குறித்து அங்கு வந்த இரு அதிகாரிகளுடன் ராஜினி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

(“ராஜினியின் கொலையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது பழிபோடலும்.” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதாவின் மரணம் உண்மை வெளிவருமா……?

திண்டுக்கல் சீனிவாசன் கூறுகின்றார் ‘ஜெயலலிதா இட்லி சாப்பிடவுமில்லை. சட்னி சாப்பிடவுமில்லை. எல்லாம் பொய்’. இவர்களெல்லாரும் எவ்வளவு தூரம் மக்களை முட்டாளாக்கி விட்டார்கள். கோடிக்கணக்கான மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரின் உடல் நிலையை மறைத்து வைத்ததல்லாமல், வாய் கூசாமல் பொய்களைகூட கட்டவிழ்த்திருக்கின்றார்கள். இதற்குத் தற்காலிகத் தமிழக அரசு, மோடியின் மத்திய அரசு எல்லாமே உடந்தையாகவிருந்திருக்கின்றன. சட்டத்தைத் தம்போக்குக்கு வளைத்திருக்கின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தின் உண்மை நிலை கண்டறிய இந்திய மத்திய அரசின் புலனாய்வுத்துறை மூலம் விசாரணை செய்யப்பட்டு , உண்மை வெளிக்கொணரப்பட்டுக் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

(“ஜெயலலிதாவின் மரணம் உண்மை வெளிவருமா……?” தொடர்ந்து வாசிக்க…)

ஏறாவூரில் பரீத் மீராலெப்பையாக உரு கொடுக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத்!

(விருட்சமுனி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் ஒரே மேடையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி பரீத் மீராலெப்பை ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு முஸ்லிம்களின் இன்றைய அரசியலை பொறுத்த வரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வைபவம் ஆகும். தூய தலைவர்கள் இருவரை நினைவு கூருவோம் என்கிற மகுடத்தில் அஷ்ரப்பின் 17 வருட நினைவும், பரீத் மீராலெப்பையின் 32 ஆவது வருட நினைவும் அனுட்டிக்கப்பட்டன.

(“ஏறாவூரில் பரீத் மீராலெப்பையாக உரு கொடுக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத்!” தொடர்ந்து வாசிக்க…)

Cuba will never accept any preconditions or impositions

Speech by the Minister of Foreign Affairs of Cuba, Bruno Rodríguez Parrilla, during the 72nd Session of the United Nations General Assembly

Mr. President:

Mr. Secretary General;

Allow me to reiterate to you Cuba’s, support to your work at the helm of the United Nations and as a guarantor and advocate of international peace.

Heads of State and Government;

Distinguished delegates;

(“Cuba will never accept any preconditions or impositions” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண முதலமைச்சர் – நீதியரசர் விக்கினேஸ்வரன்

“வடமாகாண முதலமைச்சர் – நீதியரசர் விக்கினேஸ்வரனையும் மாகாணசபையையும் கடுமையான தொனியில் தொடர்ந்தும் விமர்சிக்கிறீர்களே. விக்கினேஸ்வரனின் மீது அப்படியென்ன கோபம் உங்களுக்கு?” என்று கேட்டார் நண்பர் ஒருவர். இதற்கு முன்பும் வேறு பலரும் இதைப்போன்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். முகப்புத்தகத்தின் உள்பெட்டியிலும் ஏராளம் கேள்விகள் வந்திருக்கின்றன. சிலவற்றுக்கு அவ்வப்போது பதில் சொல்லியிருக்கிறேன். நிலைமையைக் கருதி இப்பொழுது இங்கே பொதுத்தளத்தில் இதற்கான பதிலைச் சொல்லலாம் என எண்ணுகிறேன்.

(“வடமாகாண முதலமைச்சர் – நீதியரசர் விக்கினேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

செல்வி: இவள் எங்கே?

(குஞ்சன்)

இன்றும் செல்வி மீது என்னால் சிந்திக்க முடிகின்றது. நிறைய போர், வன்முறை, அரசியல் அக்கிரகாரம் இவைகளுக்கு எதிரில் நிற்பவர்கள் இன்றும் செல்வி மீது நினைப்பார்கள். இவள் எப்படிக் காணாமல் போனாள் எனக் கேட்பார்கள். இவளது கவிதைகளை மீளவும் வாசிப்பார்கள். ஆம்! இலங்கையின் புலிப் போர் தமிழர்களின் அத்திவாரத்தை உடைத்தது, இது தமிழ் இலக்கியத்தின் அறிவியல், இலக்கியவாதிகளையும் ஒழித்தது. இப்போதும் சொல்லலாம் நிறைய வெளியால் வந்தோர் புலிகளின் ரகசியப் போராளிகளாக இருக்கின்றனர். இது வெட்கப்படவேண்டியது.

(“செல்வி: இவள் எங்கே?” தொடர்ந்து வாசிக்க…)