மூப்பில்லா தமிழே தாயே…. முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்

ஏ.ஆர்.ரஹ்மானின், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

விமானச் சேவை இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையானது, இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கட் நகரத்துக்கும் இடையில் நடத்திய விமானச் சேவையை, இன்றிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

‘மட்டு. கல்வி வலயம் முன்னேறுகிறது’

2021ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி, மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

ரணிலுக்கு இல்லை; கைவிரித்தது மொட்டு

பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் கூறியுள்ளார். இன்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் மேலும் 1 பில். கோரியது இலங்கை

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 1 பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் கோரியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை இரண்டு தரப்பினரும் இன்று (28) உறுதிப்படுத்தியுள்ளதாகவும்  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதியன்று புதுடெல்லியில் வைத்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே மீண்டும் கடன் உதவியை இலங்கை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறக்கிறார் மஹிந்த : ஏற்கிறார் ரணில்…?

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐயா இவரையும் விசாரிங்க.. இவருக்கு எல்லாம் தெரியும்” : எடப்பாடி பழனிசாமியை மாட்டிவிட்ட அதிமுக புகழேந்தி!

எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.