தேர்தல் முறையில் மாற்றம் ; மலையக மக்களையே பாதிக்கும்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என தெளிவான முடிவில் இ.தொ.கா உள்ளதென்றும் மாகாண சபைத் தேர்தல் நடத்த தாமதமானால், உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படமுடியாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான தெரிவித்தார்.

இந்தியா: பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, இன்று(15) முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை: கொரனா செய்திகள்

பயணத்தடை மேலும் நீடிப்பு:

மாகாணங்களுக்கு இடையில் அமுலில் இருக்கும் பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

’டக்ளஸ் எடுக்கும் நடவடிக்கைக்கு கூட்டமைப்பு துணைநிற்கும்’

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது, அவருடன் சேர்ந்து செயற்பட தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார்.

மூன்று முக்கிய பொருள்களின் விலைகள் உயர்ந்தன

சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை, அசாதாரணமாக உயர்ந்துள்ளதாக, சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாளை (15) முதல், திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், பற்றறைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படவுள்ளன. தளர்வுகளை மேற்கொள்ளபட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இன்று (14) வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு வெற்றி, கமலுக்கு தோல்வி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர்.

’வடக்கு மீனவர்களின் பாதிப்புகள் புரிகின்றன’

இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதாகத் தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரபல நாடு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலாந்து விலகுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து வெளியேறினால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் எனத் தெரிவித்து அரசுக்கெதிராக  லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதி அஞ்சலிக்காக லக்னோ சென்றார் பிரியங்கா

உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில்  போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாரதிய ஜனதா கட்சியினர்  சென்ற கார் மோதியது. இதில், விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர்  அஜய் மிஸ்ரா தனது பதவியை இராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே அஜய் மிஸ்ராவை மத்திய இணை அமைச்சர்   பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த சூழலில் பலியான 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில்  கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை லக்னோ வந்தடைந்தார் பிரியங்கா காந்தி .