வடக்கின் புதிய ஆளுநராகிறார் ஜீவன்?

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையொப்பமிட்டு ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.   தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை விரைவில் அவர் இராஜினமா செய்வார் என்றும் அறிய முடிகிறது. 

5 தசாப்தங்களின் பின் சர்வதேச விமான சேவை

5 தசாப்தங்களுக்குப் பின்னர், பிராந்திய சர்வதேச விமான சேவைகளை இரத்மலானை விமான நிலையம் தொடங்க உள்ளது என்றும் முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுகளுக்கு புறப்படும் என்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவியன் எயார்லைன்ஸுடன் இடம்பெற்ற நீண்ட விவாதங்களுக்குப் பின்னர், இரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் தொடங்க அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானும் தலிபான்கள் வசமாகுமா? போராளிகள் மத்தியில் நிலவும் துடிப்பு

பாகிஸ்தானின் ஆதரவினாலேயே தலிபான்கள் விரைவாகவும், அதிர்ச்சியூட்டும் வகையிலும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் நிலைமை சாத்தியமானதென்று சர்வதேச சமூகமும், உலக சக்திகளும் பரவலாக நம்பின. அத்துடன் இதன் பயனாக இலாபங்களின் பயனாளியாக பாகிஸ்தான் இருப்பதாவும் நம்பப்பட்டது.  ஆனாலும் பல தலிபான் போராளிகள் தங்களின் அடுத்த தாக்குதல் இலக்கு பாகிஸ்தான் என்று நோக்குவதால் நிலைமை பெரும் வித்தியாசமானதாகத் தெரிகிறது.

தோழருக்கு கண்ணீர் அஞ்சலி

திருகோணமலை குச்சவெளி வசந்த் தோழர் சந்திரன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் தோழருக்கு கண்ணீர் அஞ்சலி

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இன்று (06) அறிவிக்கப்பட்டது. ஜேர்மனி நாட்டின் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவின் டேவிட் மெக்மிலன் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் 30,812 பேர் உயர்தரத்துக்கு தகுதி

மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 41,262 மாணவர்களில், 30,812 பேர் க.பொ.த உயர்தரத்துக்கு தகுதிப்பெற்றுள்ளனர். இந்தப் பெறுபேறுகளின் வீதம் 74.67 அதிகரித்துள்ளது  என பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் போராட்டத்து ஆசிரியர்கள் முஸ்தீபு

ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ஆம் திகதியன்று, மாபெரும் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக,இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 312 பிரதேச கல்வி அலுவலகங்களின் அடிப்படையில், இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்த இடையூறுகள் வந்தாலும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், அவர் கூறினார்.

இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையும் கடுமையாக சரிவு….

நாட்டில் மேலும் 542 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 520,175 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், 652 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 459,298 ஆக அதிகரித்துள்ளது.

ரோஹித ராஜபக்ஷ முதலமைச்சர் வேட்பாளர்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்குள் நுழையும் ஆப்கான் போதைப் பொருட்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள், மும்பை உட்பட அரபிக்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் வாயிலாக வந்து செல்லுவதுடன் நாட்டின் பல பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.