இலங்கை அகதிகள் முகாமில் உதவிகள் தொடர்கின்றன….

மதுரை உச்சப்பட்டி யில் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் 451 குடும்பங்கள் வசித்துவருன்றன. இவர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் கூலி வேலைசெய்து வாழ்பவர்கள்.

கரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேர் பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 601 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் மாஸ்கோவைச் சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,149 ஆக அதிகரித்துள்ளது.

Farm to Home

நஞ்சில்லா மரக்கறிகள் உங்கள் வீட்டு வாசலிற்கு!
எமது கற்பகவனம் இயற்கை விவசாயப்பண்ணை மற்றும் மாங்குளம் Natural Fresh Organic Farm ஆகியற்றில் இருந்து தருவிக்கப்பட்ட நஞ்சில்லா மரக்கறிகள் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படவுள்ளன. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விநியோகம் இடம்பெறும்.
கத்தரிக்காய், வாழைக்காய், வெண்டிக்காய், மரவள்ளிக்கிழங்கு, பாகல்க்காய், தக்காளி, சிறகவரை, பப்பாளிப்பழம், சிறுகீரை/ அகத்தி/ முருங்கைஇலை ஆகியவற்றில் 5 வகையான மரக்கறி + கீரை உள்ளடங்கியதாக 4kg கொண்ட நஞ்சற்ற (Organic) மரக்கறிப் பொதியாகவே விற்பனைக்கு உள்ளது.
குறிப்பிட்டளவு பொதிகளுக்கு தேவையான மரக்கறிகளே உள்ளதால் முன்பதிவு முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படும்.
ஒரு பொதியின் விலை ரூபாய் 850/-.
விநியோகம்
யாழ் மாநகர எல்லை – Free
வலிகாமம் – 100/-
தென்மராட்சி – 150/-
வடமராட்சி – 200/-
தீவகம் – 250/-
–தொடர்புகளுக்கு:
077 411 4422
shop.semba.lk

கரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வையில் கேரள மாநிலத்தில் மதுக் கடைகள், பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அடிமையானவர்கள் மது குடிக்க முடியாமல் மனரீதியான சிக்கல்களைச் சந்தித்து தற்கொலை முடிவுக்குச் செல்வதால் சிறப்பு அனுமதியில் மது வழங்க கேரள அரசு அனுமதியளித்தது.

வீட்டில் இருப்பதற்கான வழிமுறைகள்

1. வீட்டில் உள்ள எல்லோருக்கும் தனித்தனியான சோப் டவல் கங்கி விறஷ் சேவிங்றேசர் சீப்பு Ect…வைத்துக்கொள்ளுங்க
2. சாபாட்டு பீங்கான் ரீ கப் தனித்தனியாக
3. தனித்தனியான படுக்கை விரிப்புகள் தலையணை படுக்கையிடங்கள்
4.அன்றாடம் தோய்ந்த உடுப்புகளை அயன் பண்ணி போடவும்
5. வெளியில் கைகழுவுவதற்கான வசதிகள்

கொடிய “கொறோனாவை தோற்கடிப்போம்!

முதலில் சீனர்களுக்கு எதிராக வஞ்சம் கொண்டோம் !!!

அதன்பிறகு வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களிடம் வஞ்சம் கொண்டோம்!!!

இலங்கை நிலை!

இலங்கையில் குறிப்பாக வடபகுதிகளில் நிலைமை பரவாயில்லை என்று சொல்லலாம். இதுவரை காலமும் இருந்த ஊரடங்கு மனோநிலை இப்பொழுது சற்று மாற்றம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. காவல்துறையினர் மிகவும் பொறுப்புணர்வுடன் அவதானமாகச் செயற்படுவதைக் காணமுடிகிறது. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் போக்கில் மாற்றத்தைக் காணமுடிகிறது. பொதுநிர்வாகத்துறையினரும் ஊரடங்கின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டதை உணரமுடிகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் சீரடையத் தொடங்கிவிட்டது. மக்கள் தேவையற்ற பீதியையும் பதற்றத்தையும் கைவிடுவதே தற்போதைய தேவை.

வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்

1- உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று வாங்கலாம்.

2.வெதுப்பங்கள் இயங்கலாம். உற்பத்திகளை வீடுவீடாக வாகனங்களில் கொண்டு சென்று விற்கலாம்

3. பல்பொருள் அங்காடிகள் திறக்க முடியாது 500 ரூபா 1000 ரூபா பொதிகளாக்கி வீடுவீடாக சென்று விநியோகிக்கலாம்