‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

(“‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

வலதுசாரிகள் பக்கம் செல்கிறது பிரேஸில்

பிரேஸில் றியோ டி ஜெனீரோவின் மேயராக, சீர்திருத்த சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவாகியுள்ளார். கத்தோலிக்கர்களை ஒரு முறை, “அரக்கர்கள்” என்றழைத்த இவரின் தெரிவு, பிரேஸிலின் அரசியல், வலதுசாரிகள் பக்கமாகச் செல்வதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

(“வலதுசாரிகள் பக்கம் செல்கிறது பிரேஸில்” தொடர்ந்து வாசிக்க…)

எழுப்பபடும் சந்தேகங்கள்

கொக்குவில்லில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் மீது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூடு

(டி.பி.எஸ் ஜெயராஜ்)

பகுதி – 1

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டு இளநிலை பட்டதாரி மாணவர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்துள்ளார்கள், காவல்துறையினரால் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் துப்பாக்கிச் சூடு ஆத்திரமூட்டும் அரசியல் சர்ச்சை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் அந்த மரணங்கள் ஒரு விபத்து காரணமாக ஏற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அதைத் தொடர்ந்து உந்துருளியில் பயணம் செய்த இரண்டு பேருக்கு காவல்துறையினர் நிறுத்தும்படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அவர்கள் கீழ்படிய மறுத்ததினால் காவல்துறையினர் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பின்னர் தெரிவிக்கப் பட்டது.

(“எழுப்பபடும் சந்தேகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகள்…….

(Theepa Pirathy and Saakaran)
யாழ்மக்களின் மனங்களில் நீதித்தேவைதையாக வலம்வந்த யாழ்மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களை யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் இருவரினதும் இறப்பிற்கு பின்னர் சில இணையத்தளங்களிலும் முகநூலிலும் வசைபாடுவதை காணமுடிகின்றது.

(“நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகள்…….” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல்

(கே சஞ்சயன்)

வடக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள், சாண் ஏறினால் முழம் சறுக்குகின்ற கதையாகவே நீண்டு செல்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து, பெரிதும் நம்பிக்கையோடு இருந்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. அரசியல்த் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, படைக்குறைப்பு, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, போர்க்குற்ற விசாரணை என்று தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் எதிர்பார்த்த விடயங்கள் ஏராளம்.

(“வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல்” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியாவில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !!

வவுனியாவில் தீபாவளி திருநாளான அன்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்மற்றும் விபத்து காரணமாக கடந்த மணிநேரத்தில் வவுனியா வைத்தியசாலையில் 10பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும்வழங்கப்பட்டுள்ளது.

(“வவுனியாவில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !!” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திருமதி செல்லப்பா பரமேஸ்வரி
தோற்றம் : 10 செப்ரெம்பர் 1932 — மறைவு : 25 ஒக்ரோபர் 2016
யாழ். நாவாந்துறை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Toronto Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா பரமேஸ்வரி அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

கொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்

அண்மையில் வடபகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பல விதமான அறிவிப்புகள்-செய்திகள்-நடவடிக்கைகள்-ஆய்வுகள்-கண்டனங்கள்-நியாயப்படுத்தல்கள்-ஆறுதல்கள்-உரைகள் என்பன ஊடகப் பரப்பில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதேவிதமான ஒரு சூழல் இற்றைக்கு சுமார் 17 மாதங்களுக்கு முன்னர் (13 மே 2015ல்) மாணவி வித்தியா கொலை சம்பவத்தையொட்டி ஏற்பட்டிருந்தது. அதற்கு இன்று வரை நீதித் தீர்ப்பு கிடைக்கவில்லை. நீதி கிடைக்கக் கூடிய திசையில் அவ் வழக்கு செல்லவதாக தென்படவும் இல்லை.

(“கொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்” தொடர்ந்து வாசிக்க…)