முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் அய்யூப் அஸ்மின்: பின்னணி இதுதான்!

(எஸ். ஹமீத்)

கடந்த சில தினங்களாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஊடகங்களில் பேசு பொருளாகியிருக்கிறார். இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை அவர் வெகுவாகக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதனால் ஊடகங்களில் அவர் பலவாறாக விமர்சிக்கப்படுகின்றார். உண்மையில் இதன் பின்னணியில் அய்யூப் அஸ்மினின் மிகக் கேடுகெட்ட ஓர் அரசியல் இருக்கிறது. இதுபற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

(“முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் அய்யூப் அஸ்மின்: பின்னணி இதுதான்!” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனின் நீட்சியாக கருதப்பட வேண்டியவர் கேபி யே

(யோகா வளவன் தியா)

நான் அறிந்தவகையில் கே பி , பிரபாகரனின் நல்ல நண்பர். அவரது நல்லது கெட்டதுகள் அனைத்திலும் பங்கு பெற்றவர். பிரபாகரனின் திருமணத்தின் போது மாப்பிள்ளை தோழனாக இருந்தது கேபி யே. இயக்கம் அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபாகரனின் குடும்ப நண்பராகவும் இருந்தார். விடுதலைபுலிகளின் வளர்ச்சியில் பிரபாகரனுக்கு அடுத்தபடி கேபி க்கு முக்கிய பங்கு உண்டு. அதாவது ஆயுத கொள்வனவு. கள்ள சந்தையில் ஆயுதம் வாங்குவது என்பது சாதாரண விடயமல்ல. இங்கு பாங்கில் பணத்தை போட அங்கு ஆயுதம் டிலிவறி செய்யும் விடயமல்ல. நூறு பெயில் டீல்களினுடாகவே நல்ல ஒரு தொடர்பு கிடைக்கும். அவற்றை கேபி செவ்வனே செய்து வந்தார்.

(“பிரபாகரனின் நீட்சியாக கருதப்பட வேண்டியவர் கேபி யே” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில்….

அண்மைக் நாட்களில் திருகோணமலை இந்துக்கல்லூரி ‘ஆடை மரபு’ சார்ந்து முஸ்லிம் ஆசிரியர்கள் அபயா அணிய தடை விடுக்கப்பட்டு பின் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து முகப்புத்தகத்தில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நானும் முன்னெப்பொழுதுமில்லாதவாறு பங்கு பற்றியுள்ளேன். எனது கப்பியூட்டரும் ‘அழகி’யும் மக்கர் பண்ணியதால் ஆங்கிலத்தில் எனது விவாதங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன். அதனால், “நீ என்ன தமிழில் பேச முடியாதா,” எனக்கூறி நான் சொன்ன முக்கியவரலாற்று குறிப்புக்களை ஒருவர் தனது போஸ்ட்டிலிருந்து வெட்டியுமுள்ளார். இவ்விவாதங்களில் இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு சில தமிழரும் தீவிரமாக பங்களிக்கின்றனர்.

(“இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில்….” தொடர்ந்து வாசிக்க…)

மேதினம் அறை கூவும் அறம்

இதன் குறிக்கோள் மானிட விடுதலை.
இதுவரை கால வரலாறுகள் யாவும் வர்க்க போராட்ட வரலாறுகளே என்று பிரகடனம் செய்த கார்ல் மாக்சின் பிறந்த தினம் மே 6.
இரத்தம் தோய்ந்த கொடிகளை உயர்த்தி தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நடத்திய போராட்டத்தின் நினைவுகளையும் மனித குலத்தின் இடையறாத போராட்டத்தையும் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் வலியுறுத்துவது மேதினம்.

(“மேதினம் அறை கூவும் அறம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் ஆட்சித் தலைவர்

கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ’ என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார்.

(“மக்கள் ஆட்சித் தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

தந்திரோபாயத் தவறு உள்ளுராட்சி ஆட்சி அமைப்பு ஆதரவில் ஏற்பட்டுவிட்டது

(Karunakaran, Saakaran)

தேவையைப் பெறுவதற்காக எவ்வளவு தூரத்துக்கும் கீழிறங்குவது. காரியம் முடிந்ததும் உதவியவரைக் கை விடுவது மட்டுமல்ல பழித்துரைக்க முற்படுவதெல்லாம் நாகரீகக் கேடாகும். இதனுடைய நேரடி அர்த்தம், இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவதற்காக இரகசியமாக ஒருத்தியுடன் கூடி விட்டு, பிறகு பொதுவெளியில் அந்தப் பெண்ணை “தாசி” என்று அம்பலப்படுத்துவதேயாகும்.

(“தந்திரோபாயத் தவறு உள்ளுராட்சி ஆட்சி அமைப்பு ஆதரவில் ஏற்பட்டுவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலினை இலங்கையில் வெளியிட்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக Swiss, Germany, France போன்ற நாடுகளில் அவருடைய புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது.அதுபற்றிய விபரங்கள் பின்பு விபரமாக வெளியிடப்படும் .அவர் தற்சமயம் Germany தங்கியுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் 004917675054051 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.

தோழர்கள்.

புலிகளுக்குள் ஜனநாயம் முளையில் கிள்ளப்பட்டது

1985 இல் புலிகளின் 3வது பயிற்சி முகாமில் புலிகளின் ஜனநாயக விரோத போக்குகளிற்கு எதிராகவும் சுத்த ராணுவாத கட்டமைப்புக்கு எதிராகவும் கேள்வி கேட்ட போராளி கொல்லப்பட்டமைக்கு எதிராகவும் தன் சுய நலத்திற்க்காக கல்யாணம் செய்யக் கூடாது என்ற அமைப்பு விதியினை மாற்றி பிரபாகரன் திருமணம் செய்து கொண்டமைக்கு எதிராகவும் பலர் அதிருப்தி அடைந்து வெளியேறினார்கள். அதில் தயாநிதி (இயக்கப் பெயர் ரு+பன்) – கப்புதூ – நெல்லியடி தன்னுடன் வெளியேறிய பலருடன் சேர்ந்து மீண்டும் செயற்படும் நோக்கில் செயற்பாடுகளை மேற்க் கொண்டார். இவர் வேதாரணியம் சென்ற வேளை பொட்டனால் ரகசியமாக கடத்தப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஆடைகளும் நிர்வாணங்களும்

(முகம்மது தம்பி மரைக்கார்)
ஒரு கதை சொல்லவா?

‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார்.

(“ஆடைகளும் நிர்வாணங்களும்” தொடர்ந்து வாசிக்க…)