இலங்கை: கொரனா செய்திகள்

2 மில்லியன்  சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

’இந்தியாவுக்கு பாதகமாக செயற்படமாட்டேன்’ – டக்ளஸ் தேவானந்தா

நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ தான் ஒருபோதும் செயற்படமாட்டேனென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (22) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

’தேசிய ரீதியான போராட்டத்துக்கு வடக்கின் ஆதரவும் வேண்டும்’

நாடு பூராகவும் அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவு வங்குவதாகத் தெரிவித்த இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன், அதேபோல் வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் குறித்த போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்

சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்த நிலையில், உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி கோரி, இன்று (22) கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரையோகத்தைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.

ஃபர்ஸ்ட் ஹாஃப் வெறித்தனம்…. சார்பட்டா பரம்பரை விமர்சனம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி நல்ல பலதரமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஒரு ஸ்டாலினால்தான் காங்கிரசையும், கம்யூனிஸ்ட்களையும் வழிநடத்தமுடிகிறது!

மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர்! இந்தியாவை மீட்குமா?

ஸ்டாலின்கிராடாக மாறிய சென்னையிலும் வாட்டர்லூவாக மாறிய கொல்கத்தாவிலும் நேற்று விடப்பட்ட பெருமூச்சு, மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் பல எதிர்க்கட்சிகளுக்கு ஒக்சிஜனாக உருமாறி இருக்கிறது. அநேகமாக இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் பிழைத்துக் கொள்ளும்போலிருக்கிறது!

தனிமைப்படுத்தல் தண்டனையா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கடந்த வருடம், மே மாதம் 17, 18ஆம் திகதிகளில், வடக்கில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், செம்மணியில் நடைபெற்ற அவ்வாறானதோர் அஞ்சலி நிகழ்வுக்குச் சென்ற வடமாகாண முன்னாள் முதலமைச்சரை, பொலிஸார் இடைவழியில் மறித்தனர். “நீங்கள் எமது பேச்சைக் கேட்காமல் சென்றால், உங்களை 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்துவோம்” என்று பொலிஸார் அவரை எச்சரிக்கை செய்தனர்.

தமிழ் மக்களின் ’அரசியல் அணி’

(இல. அதிரன்)

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.சிவராம் (தராக்கி) காலத்தின் தேவை அரசியல் வேலை என்று குறிப்பிடுவார். காலத்தே பயிர் செய்தல் எல்லாவிதமான விடயங்களிலும் முக்கியம் பெறுகிறது. அதே போன்றுதான் இப்போதைய பூகோளவியல் அரசியல் மாற்றத்திலும் அரசியல் வேலையைச் சரியான முறையில் செய்தாகவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும் அவர்களது அரசியல் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது வாய்ப்பைப் பயன்படுத்தியாகவேண்டுமென்ற நிலை மீண்டும் ஒருமுறை உருவாகி இருக்கிறது.

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் – 02

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வதாயின், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவின் அடிப்படையையும் அதன் நீட்சியாக, சீனாவின் அயலுறவுக் கொள்கை எவ்வாறானதாக அமைந்து வந்திருக்கிறது என்பதையும் நோக்குவது அவசியம்.