இலங்கை: கொரனா செய்திகள்

இந்த தடுப்பூசிகளுடன் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சினோஃபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிகரிக்கும் என, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்த விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நமல் ராஜபக்ஷ, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை விரைவில் நீக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற “அபே கம அபே பார” வீதி அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

உலகின் கொரோனா எதிர்ப்பு நோய்த்தடுப்பு பிரச்சாரத்தில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாகவும், இது, திறமையான நிர்வாகத்தின் திறமையான அறிகுறியை தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும் கூறினார். 

பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்த பின்னர், பாடசாலைக் கல்வி மற்றும் சுற்றுலா உட்பட ஒவ்வொரு துறையிலும் இயல்பு நிலையை மீட்டெடுக்க அரசாங்கத்தால் முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தடுப்பூசி திட்டத்தின் செயல்திறனைப் பற்றி ஆராயும்போது, ​​மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கலாம் என்றும்  குறிப்பிட்டார்.