நெல்சன் மண்டேலா என்ற தலைவன்

(சாகரன்)

கறுப்பின மக்களை பாகுபடுத்திப் பார்க்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் அடையாளம் என்றால் அது நெல்சன் மண்டேலாவை குறிக்கும். நூறு வயதை நெருங்கியும் தனது விடாப்பிடியான போராட்ட வாழ்வை தொடர்ந்தவர். உலகில் அதிகம் ஒடுக்கப்படும், பாகுபடுத்திப் பார்க்கப்படும் ஒரு இன அடையாளத்தின் குரலாக ஒலித்துக் கொண்டே இருப்பவர்.தனது இருப்பையும், தனது அடையாளத்தையும் முன்னிறுத்தாது தான் சார்ந்த சமூகத்தின் ஒடுக்கு முறையை முன்னிறுத்தி ஆயுள் தண்டனைக்கு உள்ளாகி கால் நூற்றாண்டிற்கு மேல் சிறை வாழ்விற்குள் உள்ளாக்கப்பட்டவர்.

குளங்களை காத்து புனரமைக்காதுவிடின் யாழ் நீருள் மூழ்கும்”

இரண்டு ஆண்டுக்குமுன்னரே எச்சரித்தார் எந்திரி ராமதாசன்
குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.

துன்பத்தில் உரியும் துரோகிகளிடம் கவனமாய் இருக்கவும்

ஒரு சாண் வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக, கையேந்தி நிற்போரை ஏறெடுத்துப் பார்க்கவோ, வீதியோரங்களில் வீழ்ந்து கிடப்போரைக் கைகொடுத்துத் தூக்கிவிடவோ முடியாத நிலைமையொன்றுக்குள், மனங்களை இறுகக் கட்டிப்போட்டு வைத்துவிட்டது இந்தக் கொரோனா வைரஸ்.

புரெவிச் சூறாவளி தாக்கம்; 72 ஆயிரத்து 410 பேர் பாதிப்பு

புரெவி சூறாவளியின் தாக்கத்தையடுத்து,அசாதாரண காலநிலை காரணமாக, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 21 ஆயிரத்து 884 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் மூடப்பட்டது

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் நாளை (7) முதல் காலவரையறையின்றி மூடப்படவுள்ளதாக, மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார்.

16 குளங்கள் கட்டிய கதை

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர் தனது கிராமத்தில் 16 குளங்க ள் அமைத்து அந்தப் பகுதியை பசுமை ஆக்கி உள்ளார். கர்நாடகா மாநிலம் மலவள்ளி தாலுகாவில் அமைந்துள்ள தாசணடோடி என்னும் கிராமம் குந்தினிபெட்டா மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இந்த இடம் வெறும் பாறைகளாக இருந்தது. மேலும் ஒரே குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்வதே அபூர்வமாகவும் அப்படியே மழை பெய்தாலும் அது உடனடியாக வரண்டு விடுவதுமாக இருந்தது.

திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன் – சரத் பொன்சேகா

இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார்.

புரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்

புரெவி புயல் காரணமாக நாட்டில் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் காயமடைந்துள்ளனர் எனவும் அரத்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 192 வீடுகள் பகுதியளவில் தேமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகள், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, ‘தகிடு தத்தங்களுக்கும்’ தயாராக இருக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் குறிப்பிடலாம்.