முத்தையா முரளிதரன்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரன் விடுதலைப் புலிகள் பற்றிக் கூறிய கருத்து அந்த இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இயல்பானதுதான்.
முரளிதரன் இத்தகைய ஒரு கருத்தை விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கழிந்த நிலையில், அதுவும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச பங்குபற்றிய ஒரு நிகழ்ச்சியில் வைத்து ஏன் கூறினார் என்பது சிந்தனைக்குரியதுதான்.

விமான நிலையத்தில் அதிக நெரிசல்

வருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகைதந்திருந்த போரா குழுவினர் இன்று தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன நரா லோகேஷ் மற்றும் அவரது தெலுங்கு தேசக் கட்சியின் சில தலைவர்கள், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் வைஸ்.எஸ் ஜகன் மோகன் ரெட்டியின் அரசாங்கத்துக்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் பங்குபற்றுவதலிருந்து தடுக்கப்படுவதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர்…..

(Sugan Paris)

காணாமல் ஆக்கப்பட்டோர் நிலையும் அவர்கள் கோரிக்கையும் மிகவும் சிக்கலான ஒன்று. திடீரென ஓர் நாளில் எல்லோரும் காணாமற்போனவர்களில்லை. இறுதி யுத்தம் வரை இருந்தவர்கள் பின்னர் காணாமற் போன நிலையில் அவர்கள் பற்றிய பெயர் விபரங்கள் அடங்கிய தொகுப்பு எவரிடமும் இல்லை. உண்மையில் தமிழ் அரசியற் தலைமை( கூட்டமைப்பு )தான் இதில் முழுமையாக ஈடுபட்டிருக்க வேண்டும். காணாமல் போனோர்களுக்கான நிறுவனம் ஒன்றை திறந்து இந்த பத்தாண்டு காலத்தில் அதன் இலக்கை அடைந்திருக்கலாம்.

தாயகத்தை விட்டு துரத்துவோம்…..

(Sritharan Thirunavukarsu)

காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரில் போராடுபவர்கள் மானிட அடையாளத்தை முன்நிறுத்த வேண்டும். தமிழ்பாசிச அடையாளத்தை அல்ல. காணமல் ஆக்கப்பட்டு இதுவரை வீடு திரும்பாதோர் 2009 வரையிலான 30 வருடங்களில் பல்லாயிரம். ஒருசிலர் அல்ல. தாயகத்தை விட்டு துரத்துவோம் ஒரிசாவிற்கு ஓட்டுவோம் என்ற உருட்டல் மிரட்டல் காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டது .

‘பாம்பியாவே திரும்பிப் போ’

(Rathan Chandrasekar)
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் (ISCUF) சார்பில் ரெண்டுமாசம் முன்பு –
‘பாம்பியாவே திரும்பிப் போ!’ என்று சென்னையில் போஸ்டர் ஒட்டப்பட்டபோது, வழக்கம்போல இந்த முறையும் சடங்குக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு
‘GO BACK’ சொல்கிறார்கள் என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் – இந்த பாம்பியோ லேசுப்பட்ட ஆசாமியல்ல என்கிறார்
டாக்டர் த. அறம். அவர் சொன்னதிலிருந்து கொஞ்சம் எடுத்து விடுகிறேன் பாருங்கள்.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்

(எம். காசிநாதன்)
இந்தியாவின் “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்” தொடர்பான வழக்குகளில், “முன் பிணை பெறுவது அரிது” என்ற ஓர் உறுதியான நிலைப்பாட்டை, இந்திய உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது. “பொருளாதாரக் குற்ற வழக்குகளில், முன் பிணை என்பது அரிதாகவே கொடுக்க வேண்டும். அதற்கு, இந்த வழக்கு உகந்தது அல்ல” என்று, முன் பிணை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?

(காரை துர்க்கா)
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ஏமாற்றப்பட்டு விட்டார் என்றவாறாகத் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் எனப் பலரும், அகத்திலும் புறத்திலும் விமர்சித்து வருகின்றனர். இந்த விடயம், தமிழர்களைப் பொறுத்த வரையில், உண்மையாக, வேதனையாகவே பகிரப்பட்டு வருகின்றது.

நிலவுக்கு அருகே செல்லும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்?

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, சந்திரயான் 2-இன் ஆர்ப்பிட்டர், நிலவைச் சுற்றும் தொலைவை, 50 கிலோ மீட்டராகக் குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.