ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை 21 ஆண்டுகளின் பின்னர் வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாவின் பெறுமதி பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவின் இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு இந்திய பொருளாதாரத்தில் பாரிய தாக்கதை ஏற்படுத்தியுள்ளன என்றும் ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை

பத்திரிகைகளுக்கானஅறிக்கை– 06-10-2018
வடக்குமாகாணமும் கிழக்குமாகாணமும் கொண்டிருந்ததமிழர்களின் நிலத் தொடர்ச்சியை இல்லாதுசெய்யும் திட்டமிட்டநோக்குடனேயேமுன்னர் வெலிஓயாஎனஆரம்பிக்கப்பட்டஅரசின் திட்டமிட்டசிங்களகுடியேற்றத்திட்டம்மேற்கொள்ளப்பட்டது. இந்தவிடயம் யுத்தத்தின் காரணமாகஅரசினால் தொடரமுடியாமற் போய்விட்டது. இப்பொழுதுதிருகோணமலை,முல்லைத்தீவுமற்றும் வவுனியாஆகியமாவட்டங்களின் கணிசமானஅளவுநிலப் பகுதிகளைஒருங்கிணைத்தவகையில் ஓருவிரைந்ததிட்டமிட்டசிங்களக்குடியேற்றம் நடைபெற்றுவருவதுஅனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதிகள் அரசின் குடியியல் நிர்வாகங்களின் கீழில்லாமல் அரசபடைகளின் கட்டுப்பாட்டிலேயேஉள்ளன.

(“தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் குளங்களை காணோம்?

குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது.யாழில் ஆயிரத்து 83 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.

(“யாழில் குளங்களை காணோம்?” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்த்து நிற்பது எளிதல்ல

(Vijay Baskaran)
போதநாயகி என்னும் படித்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.அதற்கான பலவேறு காரணங்கள் கதைகளாக வருகின்றன.எவ்வளவுதான் படித்த மனிதர்கள் நிறைந்திருந்தாலும்,கல்வியறிவை சமூகம் பெற்றிருந்தாலும் நம்முடைய வரட்டுத்தனங்களில் இருந்து எம்மால் விடுபட முடியவில்லை. (“எதிர்த்து நிற்பது எளிதல்ல” தொடர்ந்து வாசிக்க…)

“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது”

(Menaka Mookandi)

“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என்று, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

(““பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது”” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’

(கே. சஞ்சயன்)

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, யாழ். மாநகரசபை மைதானத்தில், தேசிய சுற்றுலா நாள் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளில், ஒன்றில், யாழ். மாநகர மேயரும், இன்னொன்றில், வட மாகாண முதலமைச்சரும் பங்கேற்றிருந்தார்கள். இருவருமே, அரசியலில் எதிரெதிர் முகாம்களில் இருக்கின்றவர்கள். திலீபன் நினைவு நிகழ்வு நடக்கும்போது, யாழ். மாநகர சபைப் பகுதியில், வேறு நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்று, தடுக்கும் முயற்சிகள் மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டன.

(“வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’” தொடர்ந்து வாசிக்க…)

நீர் ஆய்வு அறிக்கையால் சபையில் குழப்பம்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (04) நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (04) அவைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தால் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை முன்மொழியப்பட்டது. இந்தப் பிரேரணையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழிமொழிந்தார்.

(“நீர் ஆய்வு அறிக்கையால் சபையில் குழப்பம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 05)

கிண்ணியா நகர் மீதான தாக்குதலை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அந்தப்பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1985 மே 17 ஆம் நாள் ஊர்காவல்படைக்கென சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் முன்செல்ல அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு சிறுவர்கள் பெண்கள் உட்பட 40 அப்பாவித்தமிழர்கள் கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 05)” தொடர்ந்து வாசிக்க…)

கைதிகள் விடுதலைக்கு தமிழர் சமூக ஜனநாயக் கட்சி கோரிக்கை

பத்திரிகைகளுக்கான அறிக்கை

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தத்தை தலைமை தாங்கி நடாத்திய தளபதிகள், யுத்தத்தை நடாத்துவதற்கு தேவையான நிதி மற்றும் ஆயுத தளபாடங்கள் கிடைக்க மூல காரணமாயிருந்தவர்கள், யுத்தத்தை நியாயப்படுத்தும் பிரசாரங்களை முன்நின்று மேற்கொண்டவர்கள் என யுத்தத்தில் முழுமையாக ஈடுபட்ட சுமார் 12000 பேரை கடந்த அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீளவும் தமது சமூக பொருளாதார வாழ்வில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களையும், கணிசமானோருக்கு நேரடி உதவிகளையும் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இருந்தும் சுமார் 100 பேரளவான முன்னாள் போராளிகளை தொடர்ந்து சிறைகளில் வைத்திருப்பது துயரமானதாகும்.

(“கைதிகள் விடுதலைக்கு தமிழர் சமூக ஜனநாயக் கட்சி கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)