ராகுல் காந்தி கற்க வேண்டிய பாடம்

(எம். காசிநாதன்)

“காங்கிரஸ் கட்சியுடன், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்திருப்பது, மத்திய அரசாங்கத்தில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான, அகில இந்தியக் கூட்டணி அமைவதற்கு, நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்திய அரசியலில் மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா போன்றோர் எடுக்கும் முடிவுகள், அகில இந்திய அரசியலில் ‘வானவெடிகளை’ கடந்த காலத்தில் ஏற்படுத்தியிருந்தது.

(“ராகுல் காந்தி கற்க வேண்டிய பாடம்” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யாரோ?

(அதிரன்)

கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார், போட்டியிடும் கட்சிகள் யாரை முதலமைச்சராக நியமிக்கும் அல்லது அறிவிக்கும் என்ற கேள்விகளுக்குப் பதில் காண்பதற்குரிய காலமாக, இதனைக் கொள்ள வேண்டும்; அதற்குத் துணிந்துமாக வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜூலை 29அம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி, அதே ஆண்டின் நவம்பர் 14இல் இலங்கை நாடாளுமன்றம், அரசமைப்பில் 13ஆவது திருத்தம், மாகாண சபைச் சட்டம் ஆகியவற்றை அறிவித்திருந்தது. அதன்படி 1988ஆம் ஆண்டு பெப்ரவரியில், 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாகாண சபைகளில், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன.

(“கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யாரோ?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 11)

(Thiruchchelvam Kathiravelippillai)
கிண்ணியாவில் தற்போது பிரதேச செயலகம் அமைந்திருக்கும் இடத்தில் 1973 ஆம் ஆண்டிற்கு முன்னர் 45 தமிழ்க் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
1973 ஆம் ஆண்டு DRO (Divisional Revenue Office) அலுவலகம் அமைப்பதற்கான இடம் கிண்ணியாவில் தேவையான போது கிண்ணியாவின் ஒரு மையப்பகுதியில் அலுவலகம் அமைக்கப்படுதலே சிறந்தது என்ற நோக்கில் 45 தமிழ்க்குடும்பங்கள் வசித்த பகுதி தெரிவுசெய்யப்பட்டது. அவ்வூரின் தலைவராக இருந்த அருள்ராஜா என்பவருடன் அப்போது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அப்துள் நஜீப் அவர்களின் தந்தை மர்ஹும் அப்துள் மஜீத் அவர்கள் இடம் தேவையின் அவசியம் பற்றி கலந்துரையாடினார்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 11)” தொடர்ந்து வாசிக்க…)

Social murder and the Doug Ford government

(By Dennis Raphael)

In 1845, Friedrich Engels described the phenomena by which working-class residents in Manchester died prematurely because of their living and working conditions. He did not simply label the occurrence as we usually do today: “Premature deaths due to unfortunate circumstances,” but rather coined the term “social murder” to make explicit the source of these premature deaths. (“Social murder and the Doug Ford government” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part8)

கிறிஸ்தவ மத குருமார் அமைப்பு இவ்வாறு எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நலன் விரும்பிகள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் அவர் செவி சாய்க்கவும் இல்லை. இதேவேளை புலிகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளைபோர் முறையை மாற்றிஅமைக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வந்தனர். களத்தை மாற்றுங்கள் யுத்திகளை மாற்றுங்கள், என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதில் ஒரு சில புலம்பெயர் தமிழரும் அடங்குவர். ஆனால் இந்தப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளை விமர்சன பூர்வமாக ஆதரித்ததால் இவர்களின் கருத்தை ஏற்கப் புலிகள் தயாராக இருக்கவில்லை. இதே வேளை புலிகளின் ஊடகங்களோ மிக மூர்க்கமான விதத்தில் பொய்ப் பரப்புரைகளைச் செய்துவந்தன.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part8)” தொடர்ந்து வாசிக்க…)

புலேந்திரன், குமரப்பாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததும் இந்தியப்படையினர்

புலிப்பயங்கரவாதிகள் தாங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது போல நடித்தார்கள். தங்களிடமிருந்த சில ஆயுதங்களைக் கையளித்தார்கள். பின்பு புலேந்திரன், குமரப்பா உட்பட 12 பேர் ஆயுதங்களைக் கடத்திக்கொண்டிருந்த போது கடலில் கைதானார்கள்.

(“புலேந்திரன், குமரப்பாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததும் இந்தியப்படையினர்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்.சர்வதேச திரைப்பட விழா புனிதங்களை கட்டுடைக்கும் தருணமிது

யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 3 ஆம் திகதி முதல நாளை வரை நடைபெற்றி வரும் சர்வதேச திரைப்பட விழாவான JIFF இல் திரையிடப்படவிருந்த, கனடா வாழ் இலங்கை இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணத்தின் “Demons in Paradise” திரைப்படம், இறுதி நேரத்தில் திரையிடப்படும் படங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. விதிக்கப்பட்ட தடை குறித்த உரையாடல்கள் பல தளங்களில் இடம்பெற்று வருகின்றன.

(“யாழ்.சர்வதேச திரைப்பட விழா புனிதங்களை கட்டுடைக்கும் தருணமிது” தொடர்ந்து வாசிக்க…)

மாகாண எல்லைகள் மாற்றப்படக்கூடாது தமிழர் நிலத்தொடர்ச்சி தொடரவேண்டும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தொடர்ச்சி பாதிக்கப்படாமல், இம் மாகாணங்களின் நிலப்பரப்புகள் ஏனைய மாகாணங்களுடன் எதிர்காலத்தில் இணைக்கப்படும் நிலைமை ஏற்பட விடாமல் தடுப்பது அவசியம். இதற்கு அரசியல் யாப்பு ரீதியாக இப்போதுள்ள மாகாண எல்லைகள் மாற்றியமைக்கப்படாமல் இருப்பது அவசியம் எனத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சருமான அ. வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். (“மாகாண எல்லைகள் மாற்றப்படக்கூடாது தமிழர் நிலத்தொடர்ச்சி தொடரவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது

தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் கீழோ புனர்வாழ்வளித்தோ விடுதலை செய்ய நடவடிக்ைக எடுக்குமாறு கொழும்பு மகசீன் சிறைச்சாலை கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். வலிகளையும் சுமைகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்று தெரிவித்துள்ள அவர்கள், தம்மை உறவுகளோடு சேர்த்து வைப்பதற்கு நடவடிக்ைக எடுத்தால், வரலாறு ஜனாதிபதியை வாழ்த்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

(“எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்! கடந்தகால அரசுகளின் தவறான பொருளாதார கோட்பாடுகளே

(கலாநிதி எம். கணேசமூர்த்தி)

‘மத்தள விமான நிலையம், மாகம்புற துறைமுகம் ஆகிய இரு முக்கிய முதலீட்டு முயற்சிகளும் இன்று வெள்ளை யானைகளாகியுள்ளன. ஆயினும் அவற்றின் மீதான கடன்களை செலுத்தியே ஆக வேண்டும்’ இலங்கைப் பொருளாதாரத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையும் பயப்பீதியும் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பாக மக்களின் கரிசனை முன்னரைவிடக் கூடுதலாகியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பொருளாதாரம் தொடர்பாக சாதாரண பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு ஒரு நல்ல சமிக்​ைஞயாகவே தோன்றுகிறது.

(“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்! கடந்தகால அரசுகளின் தவறான பொருளாதார கோட்பாடுகளே” தொடர்ந்து வாசிக்க…)