மலையகம் 200 ஆண்டுகள்

(தோழர் தேசிகன்)

சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் தமிழகத்திற்கு வந்திருந்த எமது தொழிலாள வர்க்க உறவுகள் மொழி தெரியாத, தொழிலுடன் தொடர்பற்ற ஆந்திர மாநிலத்திலும் தமது தொழிலுடன் தொடர்பற்ற தமிழகத்தின் இராணிப்பேட்டையிலும் கூலித்தொழிலாளிகளாக பணியமர்த்தப்பட்டனர். இராணிப்பேட்டையில் கல்லுடைக்கும் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். ஆந்திராவிலும் கடினமான வேலை வழங்கப்பட்டது.

இலங்கையின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்க 4.6 மில். அமெ. டொலர் உதவி

இலங்கையின் உலர் மற்றும் இடைவெப்ப வலயங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள சிறு நெல் விவசாயிகளின் உற்பத்தித் திறனை வலுவூட்டுவதற்கு 4,629,629 அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக (FAO) ஜப்பான் அரசாங்கம் வழங்கிவருகிறது.

முதலீட்டாளர்களை அடித்து விரட்டும் நாடு

(எம்.எஸ்.எம் ஐயூப்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்காவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார் என்பதையும் பொதுஜன பெரமுன இன்னமும் திருந்தவில்லை என்பதையுமே, கட்டானையில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான ஆடை உற்பத்தித் தொழிற்சாலை மீதான தாக்குதல் எடுத்துக் காட்டுகிறது. 

இந்தியாவில் 2,000 ரூபா நாணயத்தாள்கள் நீக்கம்

இந்தியாவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியா பொருளாதார தடை

ரஷ்யாவின் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. அதனடிப்படையில் ரொசடொம் நிறுவனத்துடன் சேர்ந்த நிறுவனங்களின் லேசர்கள் உட்பட நவீன பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக இந்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா?

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான புதிய செய்தி

இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல வெளிநாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் எத்தனை எழுத்துகள்?

(இலங்கநாதன் குகநாதன்)


தமிழ் இலக்கணத்தின் அடிப்படை நூல் எது ? தொல்காப்பியம். தொல்காப்பியம் தமிழிலுள்ள எழுத்துகள் எத்தனை எனக் குறிப்பிடுகின்றது?
‘ எழுத்தெனப்படுவ அகர முதல் னகர இறுவாய் முப்பதென்ப ‘
: தொல்காப்பியம்
மேலே தொல்காப்பியமானது ‘எழுத்து’ எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ‘அ’ முதல் ‘ன்’ வரையிலான முப்பது எழுத்துகளே எனச் சொல்லுகின்றது.
உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
மொத்தம் 30.
ஃ என்ற எழுத்தின் ஒலியினைக் கூட ‘அக்’ எனச் சொல்லி விடமுடியும். இவ்வாறே உயிர் மெய் எழுத்துகள் 216 இனையும் சொல்லலாம்; காட்டாக, ‘க’ என்பதனை “க் + அ ” எனச் சொல்லலாம்.
‘எழுத்து’ என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘எழு’ என்பதாகும், அதாவது எழுப்பப்படும் ஒலியே எழுத்து ஆயிற்று ( பேச்சு மொழியிலிருந்தே எழுத்து மொழி). தமிழின் அடிப்படை ஒலி வடிவங்கள் முப்பதே. இவற்றினைச் சார்ந்து வருபவையே ஏனையவை. எனவே தமிழிலுள்ள எழுத்துகள் 30 மட்டுமே! அவற்றின் வடிவங்கள் வேண்டுமானால் 247 எனலாம். ஆங்கிலத்தில் கூட பெரிய எழுத்துகள், சிறிய எழுத்துகள், தொடர் எழுத்துகள் என 78 வடிவங்களுள்ளன, ஆனால் எழுத்துகள் எனும் போது 26 ஒலி வடிவங்களை மட்டும் தானே கூறுகின்றோம். அது போலவே தமிழிலும் முப்பது எழுத்துகளே! 247 எழுத்துகள் என அச்சுறுத்த வேண்டாம்!
🙏தமிழில் முப்பது எழுத்துகளே 🙏

மலையகம் 200 நிகழ்வு நுவரெலியாவில் ஆரம்பம்.

மலையகம் 200 வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம்,மலையக தமிழர் மரபு ஆகியவை நுவரெலியாவில் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு  இன்று (19) ஆரம்பமானது.

சிலி கம்யூனிஸ்ட் கட்சி

படத்திலிருப்பவர்: சிலி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது சிலி அரசாங்கத்தில் அமைச்சராக (Minister General Secretariat of Government) இருப்பவருமான, முப்பத்தைந்து வயதான தோழர் Camila Vallejo. சிலி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களான இவரது பெற்றோர்கள் (Reinaldo Vallejo and Mariela) சர்வாதிகாரி பினோச்சே (Pinochet) இற்கு எதிராக தீவிரமாக போராடியவர்கள்.

(Thank you: Balasingam Balasooriyan)