‘தாய்க் குண்டு’ என்ற பெயர் கேவலமானது – போப் பிரான்சிஸ்!

”மரணத்தை வழங்கும் குண்டுக்குத் ‘தாய்க் குண்டு’ எனப் பெயர் வைத்துள்ளதை நான் கேவலமாக உணர்கின்றேன்!” என்று போப் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார். அமெரிக்க ராணுவம் இதுவரையான போர்களில் பயன்படுத்திய குண்டுகளிலேயே மிகப்பெரிய வெடிகுண்டுக்கு, ‘அனைத்துக் குண்டுகளுக்கும் மேலான தாய்’ என்று பெயர் வைத்திருந்தமை பற்றி விமர்சனம் செய்கையிலேயே போப் ஃபிரான்சிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(“‘தாய்க் குண்டு’ என்ற பெயர் கேவலமானது – போப் பிரான்சிஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

ஆறாத்துயரம்

எமது நண்பி சிவரமணி 1991மே மாதம் 17ம்திகதி தற்கொலை செய்துகொண்டாள் அவள் பற்றிய நினைவுகள் எனது கடந்த கால வாழ்க்கையில் கல்வெட்டாயின. அவளது தற்கொலைக்கான காரணம் அரசியல் ரீதியானதென்பதை நான் அறிந்தவன்; உணர்ந்தவன். இன்றைக்கு முகப்புத்தகத்தில் அவளின் தற்கொலைக்கு சாதியக் காரணிகளே காரணம் என்ற கோணத்திற் கருத்துகள் பகிரப்படுகின்றன.
சிவரமணியின் மரணம் வரையில் அவளுடன் நட்பாக இருந்தவர்களுள் நானும் ஒருவன்.

(“ஆறாத்துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய மூவரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட பொலிசுக்கு தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.

‘தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்’ முன்னோடி மட்டுமல்ல, எமது தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் 1970 முதல் தமது மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்களில் தங்கத்துரை (தங்கவேல்), குட்டிமணி (யோகச்சந்திரன்), தேவன் (சுப்பிரமணியம்)ஆகிய மூவரும் 5.4.81 அன்று பருத்தித்துறை மணற்காட்டில் வைத்து கடற்படை, இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட மூவரும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு போகிறார்கள் என்பது எப்படி கடற்படைக்குத் தெரிய வந்தது? இதற்கான பதில் இன்னமும் மர்மமாகவே உள்ளது. இவர்கள் வழக்குகளில் ஈடுபட்டு இவர்களை அடிக்கடி பனாகொடை முகாமுக்கு போய் சந்தித்தவரான சட்டத்தரணி கரிகாலன் “தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன்” என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் எழுதிய தொடர் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிடுகின்றார்.

(“குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய மூவரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட பொலிசுக்கு தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு இன் புத்தக வெளியீடு

(சாகரன்)

இவன் என் தோழன். 1978 அறிமுகம்… அதுவும் நல்லூரில் ஒரு ரியூட்டறி கொட்டகையில்  அரசியல் வகுப்பில். மெலிந்த உரிவம் கண்ணை மூடியபடி தலையை ஒரு பக்கமா சாய்தபடி பல மர்க்சியப் புத்தகங்களை பங்கங்கள் வாரியாக மேற்கோள் காட்டி அரசியல் வகுப்பு. இந்த வயதில் இவ்வளவு அரசியல் புத்தகங்களை அதுவும் மாக்சிச புத்தகங்களை எவ்வாறு வாசித்து கொண்டார் என்ற பிரிமிப்பு எமது நாட்டுச் சூழலுக்கு எற்ப கருத்துரைகளை வழங்கினார். அவர் வேறுயாரும் இல்லை தோழர் சுகு சிறீதரன் திருநாவுக்கரசு.

(“தோழர் சுகு இன் புத்தக வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தி நிற்போம்

31 வருடங்களின் முன்பு மே மாதம் ஈழவிடுதலை போராட்டத்திற்கான இறங்கு முகத்திற்கு ஆரம்ப சுழி போட்ட நாள் புலிகள் தனது ஆயுத மேலாதிக்கத்தை.. செயற்பாட்டை… தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஆரம்பித்த நாள். அந்த விடுதலை அமைப்பின் செயற்பாடுகளை முடக்குகின்றோம் என்று பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து புறப்பட்டு அதன் போராளிகள் பலரைக் கொன்று இறுதியாக அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை கொன்று ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான சாவுமணியை அடித்துக் கொண்டனர். ஈழவிடுதலை அமைப்புக்களுக்கிடையேயான ஐக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணியை முன்நோக்கி நகர்த்துவதில் சிறீசபாரத்தினத்னதிதும் அவர் தலமைதாங்கிய ரெலோ அமைப்பினதும் செயற்பாடுகள் வரலாற்றில் குறித்துக் கொள்ளப்படவேண்டியவை.

(“தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தி நிற்போம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்

புலம்பெயர்ந்த அகதியாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் ஓர் முன்னாள் போராளியும் தீவிர பாஸிச எதிர்ப்பாளரும் இலக்கியவாதியுமாவார். ஆக்காட்டி 14வது இதழுக்கு வழங்கிய நேர்காணலில் யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் எனக் குறிப்பிடும் சுகன் „முஸ்லீம்கள் அடைந்த அரசியல் திரட்சியையும் பேரம் பேசும் வலுவையும் போல, தலித்துகளால் இன்றுவரை அடையமுடியவில்லை. தலித்துகள் தமிழர் என்ற அடையாளத்தில் ஏமாற்றப்படுவதும் சாதிரீதியாக மைய அரசியலிலிருந்து அகற்றப்படுவதும் இங்கு வெளிப்படையான நிகழ்வு. பேரம் பேசும் அரசியல் திரட்சியாக தலித் சமூகம் தம்மை ஒழுங்கமைக்காத வரை இந்த ஏமாற்றம் தொடரும்.’ என்கின்றார்.

(“யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்

தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் நாளை 06.05.2017 மாலை 04.00 மணிக்கு யாழ்ப்பாணம், பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்றத்தில் வெளியிடப்படுகிறது.
நிகழ்வில் சுகுவின் அரசியல் சிந்தனைகள், செயற்பாடுகள் பற்றியும் அவர் எழுதியிருக்கும் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் பற்றியும் உரையாடல்கள் நடக்கின்றன.
புதிய தலைமுறையுடன் தன்னுடைய சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முற்படும் தோழர் சுகுவின் நோக்கும் அணுகுமுறையும் வரவேற்கப்பட வேண்டியது. போதனைகளாக இல்லாமல், பகிர்தலாகவே சுகு எப்போதும் தன்னுடைய கருத்துகளை முன்வைப்பவர். இதுவே இந்த நூலிலும் காணப்படுகிறது.

(“தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்” தொடர்ந்து வாசிக்க…)

இவர்கள் போராளிகளா?

1987 ஐப்பசி பத்தாம் நாள் புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதலை தொடங்கினார்கள் .அப்போது நான் சண்டிலிப்பாயில் இருந்தேன்.மறுநாள் காலை ஏழு மணியளவில் ஒரு இந்திய இராணுவ வண்டியில் சில இராணுவத்தினருடன் அவர்கள் காரைநகரை நோக்கிப் போய்க்கொண்டிரைந்தார்கள்.அப்போது நான் எனது உறவினர், ஒருவருடன் வீதியில், நின்று கதைத்துக்,கொண்டிருந்தேன்.
ஒரு சில மணி நேரங்கள் கழித்து நான் சங்கானை சந்தைக்கு மரக்கறி வாங்க போனேன்.அப்போது ஒருவர் வடக்கத்தையாங்களை வெட்டவேண்டும்.விடக்கூடாது என சத்தம் போட்டு கொண்டே வந்தார்.

(“இவர்கள் போராளிகளா?” தொடர்ந்து வாசிக்க…)

அனந்தியிடம் கணக்கு கேட்கும் குடும்பங்கள்!

வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பினை தனது பதவி முடிவுறும் தறுவாயினில் பெண்களின் அமைப்புரீதியான செயற்பாட்டுக்கான ஒரு தளத்தை காத்திரமாகக் கட்டியெழுப்புவது எனும் நோக்கத்துடன் வடமாகாணசபை பெண் உறுப்பினர் அனந்தி சசிதரன் உருவாக்கியுள்ளார்.

(“அனந்தியிடம் கணக்கு கேட்கும் குடும்பங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை

எனது மண்டை கறள்கட்டிவிட்டதென எவ்வாறு சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் பேசலாமென நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா. அண்மைக்காலமாக உச்சம் பெற்றுவரும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி- ஈ. பி.ஆர்.எல்.எவ். மோதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது. அப்போதே யாழ்.ஊடக அமையத்தினில் மாவையின் மண்டை கறள்கட்டிவிட்டதோவென சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் எழுப்பிய கேள்விக்கு நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா.

(“மண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை” தொடர்ந்து வாசிக்க…)