ஆர்மியோடு சிறியரை சரியாசனம் வைத்த ……நல்லிணக்கம்!!!

கோவிலில பரிவட்டம் கட்டுறதுக்கு ஆர்மியை கூப்பிட்ட அந்த கோயில் நிர்வாகம் திருந்தணும். இல்ல அவங்களுக்குத்தான் அறிவில்ல எண்டு பார்த்தால் , மேடைவழிய ,நேர்சரி விளையாட்டுப்போட்டிகூட மிச்சம்வைக்காமல் கிடைக்கிற மேடையெல்லாம் வாய்கிழிய தேசியம் கதைக்கிற ( கவனிக்க “கதைக்கிர ” மட்டும்) சிறியருக்காவது புத்திவேண்டாம்??
ஆர்மியை கூப்பிட விடாமல் செய்திருக்கணும், இல்ல ஆர்மிக்கு பரிவட்டம் கட்டினால் தான் வரமாட்டன் எண்டு சொல்லி வெளியில நிண்டிருக்கணும். அப்ப்டி வெளியில நிண்டிருந்தால் சனத்துக்கும் ஒரு பாடமாக அமைஞ்சிருக்கும். இனிமேல் இப்படி செய்யாமல் விட்டிருப்பினம். ஆனால் , முன்னுக்கு நிண்டு விலாசம் காட்டணும் எண்டு துடிக்கிற சிறியர் , தான் வெளியில போனால், இன்னொருத்தன் வந்திடுவான் எண்ட பயத்தில ஆர்மியெண்டால் என்ன் எண்டு எங்கட வன்னி மண்ணிலயே அவனோடு சேர்ந்து பரிவட்டம் கட்டி இனத்தை கேவலப்படுத்துறார்.
ஜமீன் டிசைன் அப்படி