இன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.

 

தோழர்கள் மா.சீவரத்தினம், க.செல்வராசா, கி.வேலும்மையிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிர்களை1970.02.12 ஆகுதி ஆக்கி சாகாவரம் கொண்ட நாள். அவர்களுக்கு என் வணக்கம். 18 மாசி 1968 தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் முன்னணி போராளி மந்துவில் இரத்தினம் காட்டிக்கொடுக்கப்பட்டு சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார்.இவரை தானே கொலை செய்ததாக புழுகி அச்சுவேலி தவராசன் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டான். அச்சுவேலி தவராசன் ஆண்டுகள் ஞாகம் இல்லை அச்சுவேலியில் வெட்டிச்சாய்கப்பட்டு கொலை செய்யப்பட்டான் 1968/ 69 என்ற நினைக்கின்றேன். எனது அறியாப் பருவம் அது.

இரத்தினத்தை கொலை செய்தவர்கள் யாரும் துணிந்து சொல்லவில்லை.ஆனால் சந்தேகப்பட்ட பேர்வழிகளின் வீடுகள் தேடப்பட்டது.முதற் கட்டமாக வேலாயுதம் என்பவன் குறி வைக்கப்பட்டான்.ஆனால் அவன் தப்பிவிட சாரதியும் இன்னொருவரும் பலியானார்கள்.பின் அநாமத்தை பேர்வழிகள் தம்பட்டம் அடிக்க அவர்களும் இனம்தெரியாத முறையில் தீரத்துக்கட்டப் பட்டனர்.இந்நிலையில் அச்சுவேலியை அச்சுறுத்திய தவராசன் தானே இரத்தினத்தை கொலை செய்தாக கூறி அங்குள்ள சிறுபான்மை தமிழர்களை விரட்டி அடித்தான்.

இதை அங்கே கேட்டுக்கொண்டிருந்த எமது ஊர் போராளி ஒருவர் தகவல் தரவே அவன் திட்ட மிட்டு தீர்த்துக் கட்டப்பட்டான்.அவனை உயரோடு பிடித்து விபரம் சொல்லிவிட்டே கொல்லப்பட்டான். இது 1968 இரத்தினத்தை கொலைகளத்துக்கு அழைத்து சென்றவர் பனியன் ராசன்.இவர் நடராசாவின் தங்கையின் கணவர்.இரத்தினம் தனியே பலரைச் சமாளிக்கும் பலம் பொருந்தியவர்.பலரோடு துப்பாக்கி வாள்களை எதிரத்தே ஓடாமல் அடித்து வீழ்தியவர்.புரூஷ்லியை எப்படிப் பாரக்கிறோமோ அப்படி கருதலாம்.அவரை அறிந்த பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

(சுகன், பாஸ்கரன், ஜேம்ஸ்)