கந்தன் கருணைப் படுகொலைகள்

(சாகரன்)

30 விநாடிகளில் 60 இற்கும் மேற்பட்ட உயிர்க் கொலைகள். உலகின் பிரசித்தி பெற்ற ஆயுதம் SMG (ஏகே 47, (ஏனையவர்களின் தகவல் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளது) இனால் தொடர்ச்சியான குண்டுப் பாய்ச்சல்கள். தொடர்ந்தாற்போல் குற்றுயிராய் இருந்தவர்கள், தப்பி ஓடி மதகிற்குள் புகுந்து மறைந்தவர்களை குண்டு வீசி மரணத்தை உறுதி செய்த கொலைகள். எல்லாம் 30 நிடத்திற்குள் முடிக்கப்பட்டுவிட்டன. பிணக் குவியலுக்குள் பிணம் போல் இரத்த வெள்ளத்திற்குள் முழ்கி அசையாமல் இருந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பிய கோர நிகழ்வு. இவரின் வாக்கு மூலமும் அதனைத் தொடர்ந்த பதிவுகளும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் குறிப்பீடுகள் சம்பவத்தை உறுதி செய்திருக்கும் பதிவுகளும் நடைபெற்று 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. மனித உரிமை அமைப்புக்களோ ஐ.நா. சபையே ஏறெடுத்துப் பார்க்காத படுகொலைகள் இது. வெலிக்கடைப் சிறைப்படுகொலையை விஞ்சிய வீச்சுப் படுகொலை. கறுப்பு ஜுலையை பின்னுக்கு தள்ளிய மார்ச் 30 படுகொலை அது கந்தன் கருணைப் படுகொலை. எம்மவர்களால் எம்மவர்கள் மீது எமது மண்ணில் எமது சுற்றத்தவர் பார்த்திருக்க நடைபெற்ற கைதிகளின் படுகொலை இது.

பலரும் அறிந்ததும் உலகம் முழுவதும் பிரசாரப்படுத்தப்பட்டதும் இலங்கையின் வெலிக்கடை சிறைப் படுகொலை. இது இரண்டு நாட்கள் நடைபெற்று 57 உயிர்களை கொன்ற சம்பவம். இது எம்மவர் மீது எம்மவர்களால் நடத்தப்பட்ட படுகொலை அல்ல. எமது மண்ணில் நடைபெற்ற கொலையும் அல்ல எம்மவர் முன்னிலையில் நடைபெற்ற கொலையும் அல்ல இதில் உயிர் தப்பிய கைதிகள் பலர் இன்றும் உயிருடன் வாழும் சாட்சியங்களாக இருக்கின்றனர். உயிர்தப்புவதற்குரிய எதிப்புப் போராட்ட வாய்புக்கள் இருந்த கொலை இது. ஆனால் கந்தன் கருணைப் படுகொலையில் உயிர் தப்புவதற்குரிய வாய்ப்புக்கள் எல்லாவகையிலும் அடைகப்பட்டிருந்த நிலையில் நடாதப்பட்ட கொலை.

வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்; சிறையில் இருந்த தமிழ் கைதிகள் சிறை அதிகாரிகளின் உறுதுணையுடன் சிறையில் இருந்த பேரினவாத சமூக விரோதமிகளால் நடாத்தப்பட்ட படுகொலை. இதற்கு பின்னால் இலங்கையின் அன்றைய ஜேஆர் அரசு இருந்து. ஆனால் இதனைவிட அதிகமான கொலைகள் வெறும் விநாடிக்குள் தமிழ் மொழி பேசுபவர்களால் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் மீது தாமும் மக்களுக்காக போராடப் புறப்பட்டவர்கள் என்பதினால் நடாத்தப்பட்ட படுகொலை. இதற்கு பின்னால் விடுதலை அமைப்பு என்று தன்னபை; பிரகடனப்படுத்திய பாசி புலிகள் அமைப்பும் அதன் தலைமைப் பீடமும் இருந்தது.

வெலிக்கடை படுகொலையை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கண்டனமும் விசாரணையும் கோரி நிற்கின்றன. இலங்கை அரசின் தரப்பில் சந்திரிகா பண்டாரநாயக்காவால் மன்னிப்பும் வருத்ததும் தெரிவித்தாகிவிட்டது. ஆனால் எம்மவரால் சிறைப் பிடிக்கப்பட்டு போராடும் உரிமை மறுக்கப்பட்ட போராளிகளின் கொலைக்கான விசாரணையோ வருத்தங்களே எத்தரப்பிலிருந்து இதுவரை வந்ததாக அறிய முடியவில்லை. ஏன் இந் நிகழ்வு நடைபெற்றதாக பலரும் அறிந்திருக்கவும் இல்லை. அன்றைய தமிழ் பத்திரிகைகளும் கைதிகள் தப்பி ஓட முற்பட்ட வேளையில் 17 துரோகிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ‘சுடச் சுடச்’ செய்திகளை வெளியிட்டு தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியதாக புழுகாங்கிதம் அடைந்து ‘பத்திரிகா தர்மத்தை’ தோண்டிப் புதைத்துக் கொண்டன.

கந்தன் கருணை படுகொலை என அறியப்பட்ட இக் கொலையை புலிகளின் தளபதி கிட்டுவின் காலை உடைத்த குண்டெறிவின் தொடர்சியாக அவனின் விசுவாசி அருணாவினால் நிகழ்த்தப்பட்டது. நல்லூருக்கு அருகில் இருக்கும் கந்தன் கருணை என்ற இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்து பின்பு யாழ் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் இருக்கும் சிவப்பிரகாசம் ஒழங்கை என்ற பிரதான விதியிற்கு அருகில் இருந்த வீடு ஒன்றில் நிகழ்த்தப்பட்டது. இதில் அதிகம் மரணத்தை தழுவியவர்கள் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் என்ற விடுதலை அமைப்பு போராளிகள். மேலும் புளொட், ரெலோ அமைப்பினரும் சில பொதுமக்களும் இதில் அடங்குவர்.

இலங்கை அரசின் இராணுவத் தளபதி கொத்தலாவலை இற்கும் புலிகளின் கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தியிற்கும் இடையே மலர்ந்த உறவில் இலங்கை அரசின் சிறைக் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவன் அருணா. தனது நேரடித் தலைவன் கிட்டிற்கு செய்த விசுவாசச் செயற்பாடு இந்த கொடுங் கொலைச் சம்பவம் ஆகும்.

கல்வியங்காடு செட்டி மீது கொண்ட பயம் என்று ஆரம்பித்து கண்ணாடி பத்தனை வவுனியாக் காட்டிற்குள் வைத்துக் கொலை செய்தது என்ற ஆரம்பித் கொலைகள் காதலித்தான் என்பதற்காக பற்குணத்தை காவுகொண்டு தனது பயணத்தை ஆரம்பித்தது. இறுதியில் காதலுக்காக உயிரைக் காவு கொள்ள கொள்கை வகுத்தவனே மையல் கொண்டு காதல் மணம் புரிந்தது தண்டனை இல்லை என்று சட்டம் இயற்றக் காரணம் ஆகிற்று என்பது வக்கிர வரலாறு ஆயிற்று.

இன்பம், செல்வம், இறைகுமாரன், உமைகுமாரன் என்று விரிவடைந்து சுந்தரத்துடன் வீரியம் கண்ட கொலை சர்வ தேசப் பாசறையில் பயிற்சி பெற்ற போராளி றேகனின் கொலை வடிவில் மாற்றம் பெற்று யாழ் கோட்டடை இராணுவத்தின் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் அமீன் கொலை என்று விரிவாக்கம் அடைந்து. சகோதரப் படுபொலையை விரும்பாதவர்கள் என்பதை தமக்கு சாதமாக்கி ஐக்கிய? முன்னணியிற்குள் இருந்த வண்ணமே கொலைகளைச் செய்தனர்;.

ரெலோவை தடை செய்கின்றோம் என்று அதிகாரத்தை தமது கைகளில் எடுத்தவர்கள் யாழ் வீதியெங்கும் உயிருடனும் குற்றயிராகவும் போரளிகளை ரயற் போட்டுக் கொழுத்திய போது கேள்விகளை எழுப்பாது நின்றதன் விளைவுகள் இன்றைய நிலமைகளுக்கு அத்திவாரத்தை போட்டுவிட்டது. நாகரீக சமூகம் என்று தம்மை தம்பட்டம் அடிக்கும் யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளின் மௌனம் இந்தக் படுகொலைகளை தடுத்து நிறுத்தும் அளவிற்கு புலி பாசிசம் அவ்வளவு வீரியம் குறைந்ததாக இருக்கவில்லை.

பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பின் போராட்ட செயற்பாட்டை தடைசெய்து போரளிகளை முடிந்தவரை சிறைபிடித்து பின்பு கொன்றும் குவித்தனர இதே விடுதலைப் புலிகள். இதில் ஒரு உச்சக்கட்ட நிகழ்வுதான் கந்தன் கருணைப் படுகொலை. யாதும் தாமாக நின்ற பின்பு மாற்றுக் கருத்தாளர்கள் பொதுமக்கள் என்று கேள்வி எழுப்பியவர்களை சிறையில் அடைத்து வெளியில் விடாமல் கொலைகள் செய்ய மனித உரிமை மீறல்கள் இதுவரை எந்த ஜநா சபையிலும் கேள்விகளுக்குள் உள்ளாக்கப்படவில்லை.

துணுக்காயில் 1990 களில் நடாத்திய புலிகளின் வதை முகாமிலிருந்து உயிருடன் தப்பியவர்கள் பல ஆயிரம் பேரில் சில பத்துப் பேரே. இதுவே ஈழவிடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மனித அவலமாகும். கணக்கு காட்டப்பட முடியாக சிறைச்சாலை வதைகளும் படுகொலைகளும். இவர்களின் ஆத்மசாத்திக்கு சடங்குகள் செய்யப் புறப்பட்டால் எம்நாட்டில் உள்ள பூசகர்கள்ஆண்டு பூராக செய்தாலும் முடிவடையாத நிகழ்வாக நீண்டு செல்லும் வரலாற்றை இது பதிவு செய்து நிற்கும்.

சிறைபிடித்து வைத்திருந்தவர்களை இலங்கையில் அதிகம் கொன்றவர்களை இன்று ஜநாவில் நிறுத்த வேண்டிய காலம் மனித உரிமை பேசும் பலரும் யுத்தக் குற்றம் பேசும் பலரும் இதற்கான திகதிகளை 1980 களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைப்பதே சரியானது. கொலைகள் அது எந்த அமைப்பினால் நடைபெற்றிருந்தாலும் எந்த நாட்டு இராணுவத்தினால் நடாத்தப்பட்டிருந்தாலும் அதற்கான விசாரணைகள் நடைபெற்றே ஆகவேண்டும். மாறாக 2009 மே மாதம் என்று திகதியை குறுக்கிக் கொள்வது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல.

விடுதலை அமைப்புக்கள் பலவும், தமது தவறான செயற்பாடுகளால் ஏற்பட்ட மரணங்களுக்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டிருக்கும் நிலையில் இதுவரை எந்த வருத்தமும் தெரிவிக்காது இருப்பவர்கள் புலிகளும் அவர்களின் பிரநிதிகளுமே. புலிகளால் வலிந்திழுக்கப்பட்ட ஆயுத மோதல்களின் போது ஏற்பட்ட தவறுகளுக்காக குறிப்பாக இந்திய இராணுவ பிரசன்ன காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக ஈபிஆர்எல்எவ் தமது வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டிருக்கும் நிலையில் மற்ற எவரும் அவ்வாறு செயற்பட்டதாக அறிய முடியவில்லை. புலிகளையத் தவிர ஏனைய விடுதலை அமைப்புக்கள் தமது அமைப்புக்களின் கொள்கை வழித்தவறுகளாக அல்லாமல் நடைமுறைத் தவறுகளாக ஏற்பட்ட மரணங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் என்பதுவும் இங்கு கவனத்தில் எடுகப்படவேண்டும்.

புள்ளி விபரங்களின் படி இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது எமது ஆயுதப் போராட்டம் சம்மந்தமான மீள்பார்வையில் கருத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயம் ஆகும்,

(Gnanathas Sivam அருணா SMGயால் சுட்டது என்பது தவறு. அருணா தனது மெய்ப்பாதுகாவலரிஂன் கிரனைட் லோஞ்சர் பூட்டப்பட்ட M16னைப் வேண்டி Hip positionனைப் பயன்படுத்தியே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டான். அதன்பின்பு முகாமிற்கு பொறுப்பாக இருந்த சத்தியாவும் பாலா அமுதன் என்பவர்களே AK ,SMG பிஸ்டல் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி எஞ்சி இருந்தவர்களையும் குற்றுயிராயிருந்தவர்களையும் சுட்டார்கள்.)
(Fernando Moorthy இதுமாத்திரமன்றி கருணா பிரபாகரனின் புலித் தளபதியாக இருந்த இந்திய இராணுவம் மட்டக்களப்பிலிருந்து விலகிய பின்பான 1989 காலப்பகுதியில் தாய்மார்களால் புலிகளிடம் சரணடைய வைத்த 500ற்கு மேற்பட்ட இழைஞர்களை இரண்டு இ.போ.ச. சொந்தமான பேருந்துகளில் ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பில் உள்ள சவுக்கடியில் மொத்தமாகச்சுட்டு ௐரே மடுவில் போட்டவா்கள் இவைகளும் புலிகளின் கொத்துக்கொத்தாகக் கொல்லும் கொடூரக் கொலைகளில் ௐன்று இதுவும் புலிகளிற்கு வக்காளத்து வாங்கும் தமிழா்கட்குத் தொியவேண்டும்)

(Jananayagan Janan

கந்தன் கருணை படுகொலை 30 ஆண்டு கால நினைவூட்டல்.

30.03.1987 இரவு ஆனைகோட்டை எனது அறையில் தூக்கத்தில் இருந்த போது என்னை நோக்கி யன்னல் வழியால் மின்னொளி பாய்ச்சப்பட்டு கதவு தட்டப்பட்டது, திறந்ததும் ஆயுதம் தரித்த தஈவிபுலிகளின் பாரத், ஐயர் தலைமையிலான குழு நின்றிருந்தனர், சிறிது நேர விசாரணை உள்ளே புகுந்த சிலர் தேடல் நடாத்தினர், என்னுடன் கூடவே இருந்த தோழர்கள் தயாநிதி, பெர்னாண்டோவிடமும் விசாரணை நடாத்தி விட்டு ஆயுத அணி திரும்பிச் சென்றது. ஏன் வந்தார்கள், கதவைத் தட்டினார்கள், தேடுதல் நடாத்தினார்கள் எதுவுமே அந்த நேரத்தில் எனக்குத் தெரியவில்லை, விடிந்த பின்னர் தான் விடுதலைப் புலிகளினால் கிட்டுவுக்கு நடாத்தப்பட்ட தாக்குதலில் கால் போனதும் கந்தன் கருணை படுகொலைச் சம்பவமும் அறிந்தேன், சற்று நேரத்தில் யாழில் இருந்து பண்டத்தரிப்பு நோக்கி மானிப்பாய் வழியால் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தின் இருக்கையொன்றில் அமர்ந்திருந்த களுவாஞ்சிக்குடி சிறி (போண்டா) என்னைப் பார்த்து சங்கேத பாசை செய்தார், எதுவும் எனக்கு அந்தக் கணத்தில் புரியவில்லை, அவர் கந்தன் கருணை இல்லத்தில் அருணா நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பி வந்தார் என பின்னர் அறிந்தேன். இப்போது பிரித்தானியாவில் எனவும் அறிந்தேன்.)