தோப்பில் மாமாவுக்கு அஞ்சலி .

(அ. ராமசாமி)

சென்னை நோக்கிப் போகும் இந்தப் பயணம் வருத்தம் கூடியதாகிவிட்டது. நெல்லையில் இருந்திருக்க வேண்டும். 1991-92 ஆக இருக்கும். கி.ரா.வைப் பார்க்கப் புதுவை வந்திருந்தார். சந்தித்த அன்று முதல் எனக்கு மாமா தான். கி.ரா. பெரிய மாமா ஆனதால், நான் சின்னமாமா ஆகிவிட்டேன். அப்படித் தான் அழைப்பார். அவர் மேடையில் பேசுவதைக் கேட்பதைவிட தொலைபேசியில் பேசுவதை விரும்பிக் கேட்பேன். நீண்ட நேரம் பேசுவோம். இந்த ஆண்டு சாகித்ய அகாதமியின் கடைசிக்கட்ட முடிவு எடுக்கப்பட்ட விதத்தை விரிவாகச் சொன்னார். எஸ்.ரா.வுக்குக் கிடைக்கக் காரணமான குழுவில் இருந்த மகிழ்ச்சி வெளிப்பட்டது. சிரிப்பு,பேச்சு என நீண்ட உரையாடல் அது.