தோழர் தியாகலிங்கம் மறைவு.

தியாகலிங்கம் மாஸ்டர்; என வட பகுதி பொது உடைமை தொழிற்சங்க இயக்க பாரம்பரியத்தில் நன்கு அறியப்பட்ட தோழர் தியாகலிங்கம் இலங்கையின் நீள அகலங்களில் ஆசிரியப்பணி ஆற்றியவர்.
1970களின் நடுப்பகுதியில் இருந்து அகில இலங்கை ஆசிரியர்; சங்கம், 1980களின் பிரபல தொழிற்சங்க கூட்டுக்குழு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீண்டமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் வடபகுதி தொழிற்சங்க கூட்டுகுழு என்எல்எப்ரி பிஎல்எப்ரி என யாழ் மார்க்சிய படிப்பு வட்டம் என அவரது பொதுவாழ்வு பணி நீண்டது.

மறைந்த தோழர்கள் எச் என் பெர்னான்டோ -விசுவானந்த தேவன் வரை பலருடன் பணியாற்றயவர்;
இன்று மிச்சமீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொது உடைமை சமூக நீதி பிரக்ஞை கொண்ட மனிதர்களில் ஒருவராக வாழ்ந்தார்;.
வர்க்கம்- சமூகநீதி- தேசிய இனங்களின் உரிமைகள் -பால் சமத்துவம் என ஒரு பொதுவுடைமைவாதியின் பிரக்ஞைகளுடன் வாழ்ந்தவர். தமிழ் சமூகத்தின் உரிமைகள் ஜனநாயக இடைவெளி என பிரக்ஞை கொண்டிருந்தார்;. மிகவும் அபாயகரமான தருணங்களில் எல்லாம் தனது தோழர்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்தவர்.
அவர் கொழும்புத்துறை மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த 2 வருடங்களாக புற்று நோயின் தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறார். அதனை காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாக சமூக அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டவர்.
தோழர் தியாகலிங்கம் போன்ற மனிதர்கள் அருகிவிட்ட சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இடையறாமல் ஓடிக்கொண்டிருந்த அந்த சமூக பிரக்ஞை கொண்ட உள்ளம் ஓய்ந்து விட்டது.
அன்னாருக்கு எம் இதய அஞ்சலிகள்!
அன்னாரின் மனைவியார் பிள்ளைகள் மற்றும் உறவுகள் தோழர்களுக்கு எம் ஆழ்ந்த இரங்கல்!!