நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி

(புருஜோத்தமன் தங்கமயில்)

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.