பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதிக்கு மணவாழ்க்கை கசந்தது

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதியினர் விவாகரத்து செய்துகொள்ளவுள்ளனர். இதுதொடர்பில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும். மிகப்பெரிய பணக்கார தம்பதியினர் மட்டுமன்றி மிகப்பெரிய நன்கொடையாளர்கள் தாங்கள் இருவரும் இனியும் திருமணவாழ்வில் முன்செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து 27 ஆண்டுகால திருமணவாழ்வை முடிவிற்கு கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.