பேரிடர் காலம்: இது கொண்டாட்டத்திற்குரிய காலம் அல்ல….

(சாகரன்)

உயிரினங்கள் இயல்பில் கொண்டாட்ட குணாம்சங்களை தன்னகத்தே அதிகம் கொணடவைதான். தென்றல் காற்றுத் தாலாட்டை ரசிக்காத மரங்கள் இல்லை. தனது இன விருத்திக்கான மகரந்த சேர்க்கையை வரவேற்று தலையை ஆட்டி அவைகள் கொண்டாடும்.