மனிதாபிமானப் பணிகளில் இராணுவத்தினரும் மும்முரம்

அக்கரைப்பற்று இராணுவ முகாம் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரி கேணல் ஜானக விமலரத்ன தலைமையிலான இராணுவத்தினர் இடைத்தங்கல் முகாமுக்கு வருகை தந்து, பொதுமக்களுக்கான ​உணவை வழங்கினர்.

தொடர்ந்து மக்களது தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

ஆலையடிவேம்பில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பொதுமக்களே இவ்வாறு நாவற்காடு நெக்கோட் கட்டடத்தில் உள்ள குறித்த இடைத்தங்கல் முகாமில் கடந்த 7 நாள்களாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.