மரண அறிவித்தல்

யாழ் சம்பத்தரிசியார் கல்லூரியின் பழைய மாணவரும் சிறந்த உதைபந்தாடட வீரரும், 1977 இல் சுகாதாதாசா விளையாட்டு அரங்கில் அகில இலங்கை ரீதியிலான இறுதி ஆடடத்தில் இரண்டு யாழ்ப்பாணத்து உதைபந்தாட்ட பிரபல்ய கல்லூரிகளான ஹென்றி அரசர் (St Henrys) கல்லூரியும் சம்பத்தரிசியார் கல்லூரியும் மோதிய போது சம்பத்திரிசியார் (St Patrick’s) கல்லூரிக்கு தலைமை தாங்கியவருமான ஐசனோவர் (Eisenhower)நேற்று இந்தியாவில் காலமானார். 80 களின் ஆரம்பத்தில் க்ரீன்பீல்டு (Greenfield F.C) விளையாட்டுக்கழகம் என்னைப்போன்ற இளையோரின் இணைப்பில் ஐசனோவர்(St Patrick’s) அரியராஜா (St Johns)சார்ள்ஸ் Jaffna Central) அமலதாஸ் போன்ற எமக்கு iமுந்திய பிரபல கல்லூரிகளின் சிறந்த விளையாட்டு வீரர்களின் வழிகாடடலில் நான் விளையாடியதை பெருமையாக எண்ணுகிறேன். இதுவே நான் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட குழுவிலும் விளையாடுவதற்கு உதவியாக இருந்தது. ஐசனோவர் ஒரு சிறந்த Full back . அவர் எனது உறவினர் கூட. அவரோடு விளையாடியதை நான் பெருமையாக கருதுகிறேன். பின்னாளில் St Rochs விளையாட்டு கழகத்தில் எனக்கு பின்னான இளையோரை இணைத்து சிறந்த அணியாக 80 களின் கடைசி பகுதியில் மிலிட்ட செய்தார். மறக்க முடியாத நல்ல மனிதர். அன்பென்று வந்தால் அரவணைத்து மகிழ்வார். பிரச்சனை என்று வந்தால் தைரியமாய் எதிர்த்து நிற்பார். மிகவும் இரக்க குணம் உடையவர். அவரது ஆத்மா சாந்தியடைவதாக.