வரலாற்று துளிகள் ..

“1919 ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் படுகொலை
1940 மார்ச் 13 லண்டனில் வைத்து மரண தண்டனை”

ஜாலியன் வாலாபாக் சுதந்திர போராட்ட போராட்டம் நடத்திய மக்கள் மீது 15 நிமிடத்திற்கு விடாமல் துப்பாக்கி சூடு 1000 பேர் உடனடி மரணம். சுடும் போது மக்கள் தப்பிக்காமல் இருக்க வழிகளை அடைக்க உத்தரவு போட்டார் ஜெனரல் டயர் , அதையும் மீறி மதில் மேல் ஏறி தப்பி ஓடியவர்களை நோக்கி வெளியில் இருந்த ராணுவம் துப்பாக்கி சுடு நடத்தியது ரத்த வெள்ளத்தில் வீதிகளெங்கும் 2000 பேர்.

இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் துப்பாக்கி சூடு தொடர்ந்து நடத்தி மேலும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றிருப்போம் – சொன்னது படுகொலையை நிகழ்த்திய ஆங்கிலேயன் டயர்.

அந்த சமயத்தில் மக்களுக்கு இலவசமாக மக்களுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு வயது 20. அவன் பெயர் உத்தம் சிங் (உண்மையான போராளி) 20 வருடம் உழைத்து சம்பாதித்து இங்கிலாந்து சென்றான்.

1939 வருடம் அந்த குடிநீர் கொடுத்த இளைஞன் இங்கிலாந்து சென்று அதே டயரை சுட்டு கொன்று பழிக்கு பழி வாங்கினார். இங்கிலாந்து கோர்ட் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது

1940 மார்ச் 13 ந் தேதி பிரிட்டிஷ் கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியபோது அவர் சொன்னது : “என் உடலை பிரிட்டிஷ் மண்ணிலேயே புதையுங்கள். எங்கள் நாட்டு மண்ணை ஆக்கிரமித்த உங்கள் நாட்டு மண்ணில் என் ஆறடி உடல் ஆக்கிரமிக்கட்டும்”.

ஜாலியன் வாலாபாக்கில் நடந்த மனித உரிமை மீறலை கண்டித்து ரவீந்திர நாத் தாகூர் ….வெள்ளை அரசு தனக்களித்த விருதினை திரும்ப கொடுத்தார்.

உத்தம் சிங் செய்த செயலை கண்டித்தும் ? வெள்ளைக்கார டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றிய கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்., காந்தி

‘உத்தம் சிங் செய்தது பைத்தியக்காரத்தனம். இச்செயல் என் மனதுக்கு வேதனை அளிக்கிறது. – சொன்னவர் நம் தேசத் தந்தை(?) மகாத்மா காந்தி.

ஓ டயர் கொலை வருந்ததக்கது. இது இந்திய அரசியல்??? தன் அரசியல் எதிர்காலமாக யாருமே வரக்கூடாது என்பதற்காக அவசரம் ,அவசரமாக ” டயர் கொலை எதிர்காலத்தை பாதித்து விடக் கூடாது ” என்று நேஷனல் ஹெரால்ட் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தவர் பாரதத்தின் முதல் பிரதமர் நேரு மாமா.

உத்தம் சிங்கின் வீர செயலை பாராட்டினார் நேதாஜி. காங்கிரஸ் கட்சி தீர்மானத்தை கண்டித்தவர் நேதாஜி மற்றும் அவரது இந்திய தேசிய படை.,

நாங்கள் தீவிரவாதிகளை ஏற்க போவதில்லை என்று நேதாஜியை பார்த்து சொல்லவும் பயம்.

உத்தம் சிங் செயலை காங்கிரஸ் ஆதரவு பத்திரிகைகள் ( அப்போதும் இப்போது போலவே நாட்டை கெடுக்கும் விபசார ஊடகங்கள் ) கண்டித்து எழுதிய போது உத்தம் சிங் அவர்களை ‘ வீரத்தியாகி ‘ என புகழ்ந்தது ரோம் நகர பெர்கரெட் பத்திரிகை.. இங்கிலாந்து , இத்தாலி ,மற்றும் வெளிநாட்டு பத்திரிகை அவரை பாராட்டின ,,

சுதந்திரத்திற்காக போராடிய தன்னலமற்ற வீரர் உத்தம் சிங் என புகழாரம் சூட்டியது லண்டனின்
‘தி டைம்ஸ் பத்திரிகை’., இந்திய பத்திரிக்கைகள் அந்த வீரனை இகழ்ந்தன ,, காரணம் காந்தியும் , நேருவும்…