பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை..??

(Thambirajah Elangovan)

ஆப்கானிஸ்தான்…

ஈராக்…

எகிப்து…

லிபியா…

சிரியா… ..

மற்றும் பல நாடுகளில்

பயங்கரவாதத்தை ஒழிக்க

இறங்கியவர்கள்… ..

இலங்கையிலும்

இறங்குகிறார்கள்

பயங்கரவாதத்தை ஒழிக்க..?

ஐயோ… .. பாவம்.. எங்கள் இலங்கை மாதா..!

கொழும்பு (2)

(ப. தெய்வீகன்)
பெரிய ஞாயிறன்று சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய தற்கொலை அங்கியானது முன்னர் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தற்கொலை அங்கியிலும் பார்க்க முற்றிலும் வேறானது என்று சிறிலங்கா பொலீஸ் தரப்பினர் கூறியுள்ளார்கள். விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தற்கொலை அங்கியின் எடை இரண்டு – மூன்று கிலோதான் என்றும் பெரிய ஞாயிறு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தற்கொலை அங்கி கிட்டத்தட்ட 25 கிலோ எடையுடையது என்றும் பொலீஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.

கொழும்பு – (1)

(ப. தெய்வீகன்)
கொழும்பு குண்டுவெடிப்புக்களினால் சிறிலங்காவின் ஆட்சி இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் அழுத்தத்தின் அதிர்ச்சிகரமான விளைவுகளில் ஒன்றாக நாளை புதன்கிழமை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படலாம் என்று கொழும்பு வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

மதம் கொண்ட மனிதன் : மதத்தை விற்று அவமானத்தை வாங்கித் தந்தான்.


நெருக்கடி மிகுந்த தருணத்திலும் மிகவும் ஒழுக்கத்தோடும், பண்பாகவும் நடந்து கொண்ட கிறிஸ்தவ திருச் சபைத் தலைவர் கௌரவ மெல்கம் காடினல் ரஞ்சித் அவர்களுக்கு மரியாதை செலுத்தியவனாகவும் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

முஸ்லீம் சமூகம் இன்று சிந்தித்து கடமையாற்ற வேண்டும்

(Spartacusthasan Dasan)

இம்மாதிரியான பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது அதிகமான இலங்கை முஸ்லீம் புத்திஜீவிகள் (ஆண்கள்) வளக்கமான ஒரு ரெம்பிலேர்ரையே (template) பதிலையே பாவிப்பார்கள் இம்முறையும் அதையே பாவிக்கிறார்கள். ஆனால் சகோதரிகள் Fathima Majitha அவர்களினதும் ஸர்மிளா செயித் அவர்களினதும் பதிவுகளைப் பாருங்கள்.

‘அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்?’

2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.

வலி ரணமானது

“வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”

“இங்லாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம் சொல்லிச்சென்றேன் உங்கள் நாட்டை பார்க்க போகிறேன் என்று. குடும்பத்துடன் சென்றேன் தனிமையில் வருகிறேன்.

என் மனதும் என் நினைவும் அவர்களாகவே இருக்கபோகிறது. இலங்கை வரும்போது விமான இருக்கை அருகே இன்பத்துடன் இருந்து கதைத்தவர்கள், இங்லாந்து திரும்பும் போது விமான இருக்கை வெறுமனே இருக்க வேதனைப்பட போகிறேன்….

என் நிலை அறிந்த சகோதரர்கள், நண்பர்கள் பெற்றோர்கள், விமானநிலையத்தில் காத்திருக்க அவர்களுக்கு என்ன சொல்வேன்! வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே…

மனைவியின் அன்பு என்னை அழைக்காது பிள்ளைகளின் பாசம் என்னை அழைக்காது. என் தனிமை மட்டும் அவர்களின் அனைத்திலும் சிந்திக் கிடக்கப் போகிறதே..

என் பிள்ளைகளின் பள்ளி நண்பர்களுக்கு என் மனைவியின் சக தோழிகளுக்கு என்ன சொல்லப்போகிறேன்.

இனிவரும் காலத்தில் என் உயிர்களின் நினைவையும், அதன் வேதனையையும் மறக்க என் இருப்பிடத்தை மாற்றினாலும் அவர்கள் இறந்த இடத்தை நான் மறவேன்… 
நன்றி இலங்கை. #Srilanka #EasterSundayAttackLK

நன்றி முகப்புத்தகம் – manmathanbasky

உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்

(புருஜோத்தமன் தங்கமயில்)
சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.