கிறித்தவச் சமயத்தை வாழ்க்கைக்கு மேம்பாடுகள் தரும் நிறுவனமாகக் கருதியே அதனைத் தழுவினார்கள்

தென் தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் நுழைந்த கிறித்தவச் சமயத்தை அப்பகுதி மக்கள் தங்கள் உலகியல் வாழ்க்கைக்கு மேம்பாடுகள் தரும் நிறுவனமாகக் கருதியே அதனைத் தழுவினார்கள் என்பதை நாம் காணமுடியும். குறிப்பாகக் கிறித்தவ சமயத்தை நாடிச் சென்ற விளிம்புநிலை மக்களான தலித்துகளும், சாணார்கள், பரதவர்கள், நாடார்கள் போன்ற இடைநிலைச் சாதியினரும் தங்களின் மரபான வாழ்க்கை முறையைப் பெருமளவில் மாற்றிக் கொள்ளாமலேயே நகர்ந்தார்கள் என்பதைப் பல சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஏற்கெனவே இருந்த இசக்கியம்மன், சுடலை, பேராச்சி, சொரிமுத்தய்யனார் போன்ற தெய்வங்களின் பெயர்களை நீக்கி விட்டு மரியையும், சூசையப்பரையும், சலோமியையும் பொருத்திக் கொண்டார்கள் என்பதும் அந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டும் உண்மைகள்.

(அ. ராமசாமி)

இந்த கேள்விக்கான பதில்கள் என்ன?

(கிழக்கு மாகாணத்து தமிழ் மகன் ஒருவரது கேள்விகள் இது இதில் ஓடியிருக்கும் எண்ணக்கருவில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் சராசரி கிழக்கு தமிழ் மகனின் மனநிலையை எடுத்துக்காட்டுவதற்காக இதனைப் பதிவு செய்கின்றோம் – ஆர்)

“நான் பட்டு வேட்டி
பற்றிய கனவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப் பட்டது”

(“இந்த கேள்விக்கான பதில்கள் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 2)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

வன்னி முழுவதும் கோவில் திருவிழா போல் காட்சியளித்தது. திரும்பிய இடமெல்லாம் சனத்திரள். மிருகங்கள் வாழும் காடுகளையும் சனம் விட்டுவைக்கவில்லை. கடந்த நாலைந்து நாட்களாக வந்திறங்கிய பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களையே பராமரிக்க வன்னி தடுமாறிக்கொண்டிருக்கும்போது மேலும் ஆயிரக்கணக்கானோர் கிளாலியூடாக வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள்.

(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 2)” தொடர்ந்து வாசிக்க…)

மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள்,

மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக்களை வைத்தே பெயரிடப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம்(ம.மா) மக்கட்பெயரால் அமைந்த ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. சுவாரசியமான இந்தப் ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள்…..
Via battinews

(“மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள்,” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் தொண்டன் கக்கன்

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

(“மக்கள் தொண்டன் கக்கன்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 87 )

ரயில் போக்குவரத்து சீர்குலைந்ததைத் தொடர்ந்து கப்பல் மூலமான உணவு விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியது.எனவே உணவுத் திணைக்களம் யாழ்ப்பாணத்துக்கான உணவுகளை கொழும்பிலேயே வைத்து கூட்டுறவு திணைக்களத்துக்கு வழங்கியது.உணவு பற்றாக்குறைகள் காரணமாக பல தனியார் நிறுவனங்களும்,தனி வாகன உரிமையாளர்களும் உணவு கொண்டுவருதற்காக கூட்டுறவு திணைக்களத்தால் பயன்படுத்தப்பட்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 87 )” தொடர்ந்து வாசிக்க…)

இனிமே எல்லாம் இப்படித்தானா….?

நான்கு முறை ஜெ வின் உடல் அருகே வந்து நின்ற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சசிகலா சட்டையே செய்யவில்லை. பிரதமர் மோடி வந்தபோது முதலமைச்சர் பன்னீர்செல்வம் குலுங்கி அழுதார். ‘your sister has died. but your brother is alive. I’m your brother’ என சசிகலாவின் தலையில் கைவைத்து மோடி சொல்ல, ‘Ok sir’ என்று மட்டும் சொன்னார். பிற மாநில முதலமைச்சர்கள் வந்தபோதும் அப்படித்தான். எம்.ஜி.ஆர் சமாதியில் ஜெ வின் உடலைக் கீழே இறக்கியபோது கதறி அழுவார், மயங்கி விழுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருக்க, சலனமே இல்லாமல் நின்றார் சசிகலா.

(“இனிமே எல்லாம் இப்படித்தானா….?” தொடர்ந்து வாசிக்க…)

ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்: ஒபாமா எச்சரிக்கை

ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20-ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.

(“ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்: ஒபாமா எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை

(கே.சஞ்சயன்)

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது கூட்டு எதிரணி. ஹம்பாந்தோட்டை விவகாரம்தான் எதிர்கால அரசியலில் கொதிக்கும் விவகாரமாக மாற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன.

(“மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை” தொடர்ந்து வாசிக்க…)

தஜிகிஸ்தான்: சமாதானத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின் பின்பான அமைதி நிரந்தரமானது என்பதற்கு ஓர் உத்தரவாதமும் இல்லை. போரின் பின்பான அமைதி ஜனநாயகத்தை நோக்கி நகர்வது போல் தோன்றினும் அதன் திசை சர்வாதிகாரத்தை நோக்கியதாகலாம். அமைதியை உருவாக்க வழியமைத்த போர், சர்வாதிகாரக் கூறுகளைத் தன்னுள் மறைத்துள்ளது. போரின் போது போர்ச் செய்திகளே கவனம் பெறுவதால், சர்வாதிகாரச் செயற்பாடுகள் கவனம் பெறுவதில்லை. அமைதி என்பது யாருக்கானது என்ற கேள்வி எழும் போது, சர்வாதிகாரம் பற்றிய கேள்வியும் கூட எழும். சமாதானம் போரினும் கொடியதாகலாம் என வரலாறு எமக்குப் பன்முறை உணர்த்தியுள்ளது. அதன் வெவ்வேறு சான்றுகள் இன்றும் அரங்கேறுகின்றன.

(“தஜிகிஸ்தான்: சமாதானத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு” தொடர்ந்து வாசிக்க…)