தோழர் சுபத்திரன் – றொபேட் இன்று அவரது 59 வது பிறந்த தினம்

இன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்;டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது. சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் மேய்ப்பர்கள் சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள். சமூகத்திற்கு அறிவு தேவையில்லை. புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கிபிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப் படுகிறது.

(“தோழர் சுபத்திரன் – றொபேட் இன்று அவரது 59 வது பிறந்த தினம்” தொடர்ந்து வாசிக்க…)

அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன.

(“அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை” தொடர்ந்து வாசிக்க…)

அய்யாத்துரை! அப்புகாமி! அபூபக்கர்! அந்தோனி! தீர்வு எப்போது?

விஜயன் வரவுக்கு முன்பு இலங்கை தீவின் மூத்தகுடிகள், யக்கர் நாகர் என வரலாறு கூறிப்பிடும் அதேவேளை, யாழ்பாடி வெகுமதியாய் பெற்ற வட பகுதியில் வாழ்ந்தவர், தமிழர்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், அங்கு அய்யாத்துரை முதன்மை பெறுகிறார். பின் தெற்கில் விஜயன் கரை ஒதுங்கி குவேனியை கரம் பற்றி உருவான, சிங்கள இனத்தில் அப்புகாமி உதயமானார், கடல் வணிகம் செய்து வந்த அரேபியர், காலி துறைமுகத்தில் கரை ஒதுங்கியதும், அவர்கள் வழிவந்த அபூபக்கர் தன் காலடி பதித்தார். நாடு பிடிக்க அலைந்த போத்துகீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் வரவின் பின் மதம் மாறியவர் சூசை, அல்பேட், அந்தோனி ஆகினர்.

(“அய்யாத்துரை! அப்புகாமி! அபூபக்கர்! அந்தோனி! தீர்வு எப்போது?” தொடர்ந்து வாசிக்க…)

“சுதந்திர இந்தியாவின் ஜாலியன்வாலாபாக் கீழ்வெண்மணி”

இப்படி ஒரு அநாகரிகமான சமூகத்தில் வாழ்கிறோம் என நினைக்கும் போதொல்லாம் நெஞ்சம் பதறுகிறது, அந்த ஆற்றொணா துயரை எப்படி மறக்கமுடியும் சாணிப்பாலையும் அந்த சவுக்கடியையும் அரைப்படி அரிசி அதிகம் கேட்டவன் மீது நிகழ்திய கோரத்தையும் கருகிய முத்துக்களையும், அன்றே மாண்டுவிட்டது மனித நேயம் .டிசம்பர் 25.

கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?

(1968 டிசம்பர் – 1980. டிசம்பர் வரை)

“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ்,
´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.

(“கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 89 )

இந்திய செஞ்சிலுவை சங்க வரவைத் தொடர்ந்து இந்திய இராணுவமும் வந்திறங்கியது.உணவு விநியோகத்துக்கு பொறுப்பான அதிகாரி என்பதால் இந்திய செஞ்சிலுவை சங்கதிகாரிகள்,இந்திய இராணுவ தளபதிகள் ஆகியோரின் தொடர்புகள் மூலமாக அறிமுகங்களும் கிடைத்தன.

(“பற்குணம் A.F.C (பகுதி 89 )” தொடர்ந்து வாசிக்க…)

ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி

ருமேனியா நாட்டின் கடைசி கம்யூனிஸ்ட் தலைவர் நிகோலா ஸௌசெஸ்கு, ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று (25 december 1989) அவரது துணைவியார் எலேனாவுடன் படுகொலை செய்யப் பட்டார். சில தினங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் விளைவாகவே அது இடம்பெற்றது. அமெரிக்காவினால் ஆதரிக்கப் பட்ட சதிப்புரட்சியாளர்கள், வெளிப்படையான நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டுக் கொன்றனர்.

(“ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி” தொடர்ந்து வாசிக்க…)

வாவ் கண்ணம்மா

டிசம்பர் 5 ம் தேதி மாலை, முதல்வர் தன் இறுதி மூச்சுகளில் வாழ்ந்து கொண்டிருந்த தருணம், பிரளயத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட பறவைகள் போல மொத்த மக்களும் தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். என் கூட்டை நோக்கி விரையும் முன், என் கூட்டு பறவைகளுக்கான அடுத்தநாள் அத்தியாவசிய உணவை வாங்க கே.கே.நகர் அய்யப்பன் கோயில் அருகில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன். ஆனால் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல் கலவரமும் கவலையும் ஒரு சேர அங்காடியின் ஒவ்வொரு அங்குலமும் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. நானும் சில உணவு பொருட்களை தேடி அதில் நீந்த தொடங்கினேன். தீடிரென ஒரு குரல் அயர்ச்சியும் அன்புமாக என்னை நோக்கி ஒலித்தது.

(“வாவ் கண்ணம்மா” தொடர்ந்து வாசிக்க…)

பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்

(காரை துர்க்கா)

நாட்டில் புலிப் பயங்கரவாதிகளால் முப்பது வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒழிக்கப்பட்டுள்ளன. புலிப்பிரிவினைவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முப்பது வருட இருண்ட யுகத்திலிருந்த வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்கள் பெரும் உவகையுடன் வாழ்கின்றனர். தென் பகுதி அரசியல்வாதிகளின் இவ்வாறான சொல்லாடலைத் தமிழ் மக்கள், கடந்த ஏழு எட்டு வருடங்களாகக் சகிப்புத் தன்மையுடன் கடந்து வந்துள்ளனர் என்பது, கடந்த நவம்பர் 27 ஆம் திகதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உள்ள துயிலும் இல்லங்களில் நடைபெற்ற சம்பவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.

(“பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை!

(வானவில் – 72 வந்துவிட்டது)

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில்நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.

(மேலும்….)