3 வாரங்களில் 9,410 பேர் கைது

ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, போதைப்பொருளுடன் தொடர்புடைய 9,410 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையம் மீள கையளிப்பு

யுத்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவம் பொறுப்பேற்றிருந்த பலாலி விமான நிலையம், இன்று (05) மீண்டும் சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார்க் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்பகட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன், நேற்று (04) ஆரம்பமாகின.

பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பம்

சர்வதேசப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து, இந்தியாவுக்கான முதலாவது விமானச் சேவை, ஓகஸ்ட் மாதம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூன்றாவது பன்னாட்டு விமான நிலையமாக, பலாலி விமானச் நிலையத்தை அபிவிருத்திச் செய்யும் பணிகள், இன்று வெள்ளிக்கிழமை (05), சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

’ஒன்றுபட்டால் ஆகிரமிப்புகளை தடுக்க முடியும்’

முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலும் தென்னவன் மரவாடி முருகன் கோவில் ஆகிய தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள், இன்று பௌத்த மத ஆக்கிரமிப்புகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று தெ​​ரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம், ஒன்றுபட்டு ஒரேகுரலில் நின்றால்தான், ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியுமென்றுக் கூறினார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள், ஜுலை மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் நிர்மாணப் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கூட்டணியாகப் போட்டியிட மொட்டு தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களின் போதும், கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், புதிய கூட்டணியைப் பதிவு செய்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

7000 பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர்

குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டங்களை மீறி, இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7000க்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, சட்டவிரோதமாக இலங்கையில் இவர்கள் தங்கியிருப்பதாகவும் இதில் அதிகமானோர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களென, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுபாட்டு பணிப்பாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் குடியுரிமை வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, வீசா காலம் நிறைவடைந்தவர்களும் இந்த 7000 பேரில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தியாகிகள் தினம்

தாயகத்திலும் உலகம் எங்கும் நினைவு கூரப்படும் தியாகிகள் தினம் இவ்வருடம் கனடாவின் பல்வேறு அரசியல் கருத்துடையோரின் சந்திப்பொன்றின் மூலம் நடாத்தப்பட்டது. மனித குல விடிவிற்காக தம்மை அர்பணித்த அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கும் ஒரு நிமிட அஞ்சலியுடன் சந்திப்பு ஆரம்பமானது. சிறப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொதுமக்களின் நினைவுகளை முன்தாங்கியதாக ஆரம்பமான சந்திப்பு கலந்துரையாடல் தற்போதைய இலங்கை அரசியல் சூழலை ஆராய்வது வரை விரிந்து சென்றது. பத்மநாபா போன்ற மகத்தான தலைவர்களின் இனங்களுக்கிடையிலான சகோதரத்துவ செயற்பாடுகள், போராடும் சிறுபான்மை மக்களுக்கிடையேயான உறவுகள், மாற்றுக் கருத்தாளர்களிடையேயான ஐக்கிய முன்னணி செயற்பாடுகள் என்பன எந்தளவிற்கு அவர் மறைவின் பின்பு முன்னேற்றம் அடைந்தன என்ற கருத்துக்கள் கேள்வியாக இங்கு எழுப்பப்பட்டது இச் சந்திப்பு கலந்துரையாடலின் சிறப்பாக அமைந்தது. இரு மணிநேரம் வரை நீடித்த இந்த கலந்துரையாடல் தோழர் நாபாவின் சிந்தனைகளை வலுப்படுத்தி மேலும் அவர் பாதையில் நாம் முன்னேற வேண்டிய அவசியத்தை வலியறுத்தி நிறைவு பெற்றது.