புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், களனியில் கைது செய்யப்பட்ட 33 வயது நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
Category: செய்திகள்
அமெரிக்கா vs ஈரான்.. பாகிஸ்தானில் நடப்பது என்ன?
ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (ஏப்ரல் 10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டுஇ இன்று முதல் ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதன்படி இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிஇ ஜூலை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மதுவை இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானப் போத்தலை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட போதே, தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியப் படகுடன் 10 மீனவர்கள் கைது
இலங்கை எல்லைக்குட்பட்ட மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி இரவு கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓர் இந்திய மீன்பிடிப் படகையும் அதிலிருந்த பத்து (10) மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
பேருந்துப் பயணிகளின் கவனத்துக்கு
நான் முஸ்லிம் என்பதால் சஹ்ரானுடன் முடிச்சு போட முயற்சி: முஜிபுர்
“நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
