அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்

(Sutharsan Saravanamuthu)

பிறப்பு 26 08 1927 – இறப்பு 13 07 1989

மலேசியாவில் பிரிட்டிஷ் ரயில்வேயில் ஒரு ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய அப்பாப்பிள்ளைக்கு 26 08 1927 இல் அமிர்தலிங்கம் மகனாகப் பிறந்தவர் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் கல்வி கற்று ,அந்தக் கல்லூரியிலிருந்து முதன்முதலாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவரும் அவரேயாவார். கலைமாணி படிப்பை முடித்துக்கொண்டவர் பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஒரு வழக்கறிஞராக வெளியேறியவர்.