இந்தோனேசிய அகதி முகாமில் இருக்கும் தமிழ் மக்களுக்கான பணிவான வேண்டுகோள்.

(இந்தப் பதிவு சம்மந்தமாக மேலதிக் செய்திகளை எமது இணையம் எதிர்பார்கின்றது இந்தச் செய்திக்கு இதனை எழுதியவரே பொறுப்பு)

நீங்கள் உயிர்காப்புக்காகவே புலம் பெயர்ந்தீர்கள் இப்போது இலங்கையில் நல்லாட்சி நடக்கின்றது ஆளும் கட்சி சிங்களக் கட்சியாகவும் எதிர்க் கட்சி தமிழ் கட்சியாகவும் இருக்கின்றது எனவே இலங்கையில் தமிழர்களுக்கு உயிர்ப்பயமோ அல்லது உயிர் ஆபத்தோ இல்லை என்று இலங்கை அதிபர் இந்தோனேசிய அரசுடன் இருதரப்பு உடன்படிக்கயில் கைச்சாத்திட்டுள்ளார்.

இப்படி நிலை இருக்கும் போது உங்களுக்கு ஐக்கியநாடுகள் சபையின் அங்கீகாரமும் உண்டு இந்தோனேசிய ஜகார்த்தா காரியாலயத்தின் அதிகாரிகள் உங்களை அடிக்கடி வந்து உங்களது குறைகளைப் பார்த்துச் செல்வதாக அறிக்கை களும் உள்ளன.
எனவே சரியான ஒரு தீர்வை நீங்களே முன்வைக்க வேண்டும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் முன்னுக்குப் பின் முரணான விடயமாகவே அமைகின்றது நீங்கள் எந்நேரமும் நாடுகடத்தப்படக் கூடிய அபாயமும் உண்டு இவை இந்தோனேசிய அரசில் பதிவான கருத்து .
1.இந்தோனேசிய மக்களைவிட உங்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கின்றன இலங்கை அகதிகள் அவர்களுக்குள்ளே வட்டிக்குப் பணம் கொடுக்கின்றனர் இந்தோனேசிய அரசின் குற்றச் சாட்டு .
2.இந்தோனேசிய அரசது மற்றும் ஐக்கியநாடுகள் சபையினது கட்டுப்பாட்டை மீறி பல செயல்களை இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள் செய்கின்றீர்கள்.
3.பெரும்பாலானவர்களிடம் சர்வதேச தொடர்புள்ள கைத் தொலைபேசி நடைமுறைகள் உள்ளன இந்தோனேசிய மக்களைவிட செல்வாக்குடன் இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள் இருக்கின்றனர்என இந்தோனேசிய அரசின் அறிக்கை .
4.வாழவேண்டும் என்பதைவிட வெளிநாடு செல்லவேண்டும் எனும் எண்ணத்திலேதான் இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள் இருக்கின்றனர் அப்படியானால் இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகின்றதுஇந்தோனேசிய அரசின் புலனாய்வு அறிக்கை.
இப்படி பல நூற்றுக் கணக்கான குறைபாடுகள் இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள் மீது இந்தோனேசிய அரசாலும் அங்குள்ள ஐக்கியநாடுகள் சபை மனித உரிமை பணிமனயினாலும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.
5-576 அகதிகளே ஈழத்தமிழர்கள் அங்கீகாரம் பெற்றவர்களாகவும் அகதி அந்தஸ்தை எதிர் பார்த்தும் காத்திருக்கின்றீர்கள். ஆனால் அங்கு பிறந்த உங்களது குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு இருக்கின்றனர்.
தமிழ் தாய்மொழியே தெரியாத ஒரு சமூகத்தை நீங்கள் இந்தோனேசியாவில் உருவாக்குகின்றீர்கள் என்பதை உங்களில் எத்தனைபேர் அறிவீர்கள்.
6.அந்த நாட்டில் இருந்தும் பிழைக்கத் தெரியவில்லை என்றால் நீங்கள் எந்த நாட்டில் பிழைப்பீர்கள் என்னால் முடிந்தது இந்தோனேசிய நாட்டில் 15 ஏக்கர் நிலம் ஒரு வருட குத்தகைக்கு எடுத்துத் தருகிறேன் அதில் பயிரிட்டு அவற்றை தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
என்னை தொடர்ந்து தொந்தரவு செய்யாதீர்கள் மிகவும் கடுமையான மனவேதனையை உருவாக்குகின்றீர்கள் நள்ளிரவு நேரத்தில் என்னை தொந்தரவு செய்வதயே சிலர் வாடிக்கையாக செய்கின்றீர்கள் தயவு செய்து நான் உங்களது கடன்காரன் இல்லை நள்ளிரவு இரண்டுமணி ஒருமணி என்று எனது தொலைபேசிக்கு ஓய்வில்லை என்னால் முடிந்ததை செய்கின்றேன்.
நான் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரியுடன் தொடர்பு கொண்டேன் அவரது சில ஆலோசனைப்படிசில விடயம்.
எனது சுய சிந்தனைக்கு எட்டியவரை இதை சரி என்று நினைக்கின்றேன்.ஏற்றுக் கொண்டால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் இல்லையேல் என்னை விட்டு விடுங்கள்.

(Markandu Devarajah)