இன்று நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.

(வரதராஜா பெருமாள் அவர்களினால் கல்முனையில் இருந்து வெளிவரும் கல்முனைநெற் எனும் பத்திரிகைக்கு அளித்த பேட்டி) 09-04-2021 ல் வெளியிடப்பட்டது

கேள்வி:- வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமா?

பதில்:- சர்வதேச அரசியலிலும் சரி உள்நாட்டு அரசியலிலும் சரி சாத்தியமாகாது எனக் கருதப்படும் விடயங்கள் ஒரு நீண்டகால வரலாற்றோட்டத்தில் சாத்தியமாகவும் கூடும். எனவே இது சாத்தியமாகும் – சாத்தியமாகாது என வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு பற்றி எதனையும் ஒற்றை வசனத்தில் கூறிவிட முடியாது. உலக வரைபடத்தில் இருந்த பல நாடுகள் காணாமற் போய்விட்டன – இல்லாமல் இருந்த பல நாடுகள் புதிதாக தோற்றம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், இன்று இலங்கையில் நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.